ரிலையன்ஸ்-ன் 43-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப் பெரிய கார்ப்பரேட் கம்பெனியான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 43-வது ஆண்டுப் பொதுக் கூட்டம் நாளை 15 ஜூலை 2020 நடக்க இருக்கிறது.

Reliance is 51st most valued company in the world
 

இந்த ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதைத் தான் நாம் பார்க்கப் போகிறோம்.

அதோடு முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் செய்த சாதனைகளையும் ஒரு பார்வை பார்த்து விடுவோமே..! முதலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் சந்தை மதிப்பு சாதனையில் இருந்து தொடங்குவோம்.

சந்தை மதிப்பு

சந்தை மதிப்பு

சமீபத்தில் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் சந்தை மதிப்பு (Market Capitalization) 13 லட்சம் கோடி ரூபாயைத் தொட்டு பெரும் சாதனைத் படைத்தது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே இதுவரை எந்த ஒரு கம்பெனியும் 13 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பைத் தொட்டதில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

ரிலையன்ஸ் AGM

ரிலையன்ஸ் AGM

பொதுவாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் கம்பெனியின் ஆண்டுப் பொதுக் கூட்டம் (Annual General Meeting) நடக்கும் போது ரிலையன்ஸ் நிறுவன பங்குகளின் விலையும் அதிகரிக்குமாம். சர்வதேச காரணிகள் எதுவும் நாளை (15 ஜூலை 2020) பாதிக்கவில்லை என்றால், நாளையும் ரிலையன்ஸ் கம்பெனியின் பங்கு விலை அதிகரிக்கலாம்.

நிகர கடன் இல்லாத கம்பெனி
 

நிகர கடன் இல்லாத கம்பெனி

முகேஷ் அம்பானி கடந்த ஆண்டின் பொதுக் கூட்டத்தில், 31 மார்ச் 2021-க்குள், ரிலையன்ஸை ஒரு நிகர கடன் இல்லாத கம்பெனியாக மாற்றுவேன் எனச் சொன்னார். ஆனால் மார்ச் 2021 வருவதற்கு பல மாதங்களுக்கு முன்பே, ரிலையன்ஸ் கம்பெனியின் நிகர கடன்களை எல்லாம் காலி செய்து விட்டார். நாளை நடக்க இருக்கும் 43-வது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் சில முக்கிய விஷயங்களை எதிர்பார்க்கலாம்.

முக்கிய விஷயங்கள் 1

முக்கிய விஷயங்கள் 1

1. சவுதி அராம்கோ நிறுவனத்துடன் செய்து கொண்ட Oil-to-Chemical division டீல் பற்றிய செய்திகளை எதிர்பார்க்கலாம். அதை விளக்கு எண்ணெய் ஊற்றிக் கொண்டு கவனிக்க வேண்டியது தற்போது அவசியமாகிறது.

2. ஜியோவை விரைவில் பங்குச் சந்தையில் பட்டியலிடப் போவதாகச் சொல்லி இருக்கிறார்கள். வெளிநாடுகளிலும் பட்டியலிடுவார்களா? அதைப் பற்றி அப்டேட்களை கவனிக்க வேண்டும்.

முக்கிய விஷயங்கள் 2

முக்கிய விஷயங்கள் 2

3. ரிலையன்ஸ் ஜியோவுக்குச் சொந்தமான ஃபைபர், டவர் போன்ற அடிப்படைக் கட்டமைப்புகளின் மதிப்பை வெளிக் கொண்டு வர ஏதாவது திட்டங்கள் வைத்திருக்கிறார்களா? அதைப் பற்றிய விஷயங்களை தனியாக கவனிக்க வேண்டும்.

4. விரைவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஒரு கச்சா எண்ணெய் சார்ந்த கம்பெனி என்பதில் இருந்து ரீடெயில் மற்றும் டெலிகாம் கம்பெனியாக மாற இருக்கிறது. அதில் டெலிகாம் தனியாக பட்டையைக் கிளப்பிக் கொண்டு இருக்கிறது. ஆனால் இன்னமும் ரீடெயில் துறையில் ரிலையன்ஸ் தன் பாதையை தெளிவு செய்து கொண்டதாகத் தெரியவில்லை. எனவே அதைப் பற்றி விஷயங்களை நாளை எதிர்பார்க்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What are the important things we have to watch in Reliance AGM

Reliance AGM is going to be conducted on July 15. What are the important things we have to watch out in the Reliance Annual General Meeting.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X