புஷன் ஸ்டீலை கைப்பற்றியது JSW ஸ்டீல்.. யாருக்கு லாபம்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகளுக்கு மிகப்பெரிய கடன் சுமை மற்றும் வங்கி மோசடியின் உச்சமாக இருக்கும் புஷன் பவர் & ஸ்டீல் நிறுவன திவாலாகக் கிடக்கும் நிலையில் இந்நிறுவனத்தை ஒரு வருடத்திற்கு முன்பு JSW ஸ்டீல் லிமிடெட் வாங்க ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இதன் பின்பு நடந்தது தான் JSW ஸ்டீல் நிறுவனத்தைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.

கடன் நெருக்கடியில் சொல்லப்போனால் திவாலாகிக் கிடக்கும் ஒரு நிறுவனத்தைக் கைப்பற்றுவதால் JSW ஸ்டீல் நிறுவனத்திற்கு என்ன லாபம்...?

 கொரோனா எதிரொலி.. புதுச்சேரியில் தொழில்கள் பாதிப்பு.. சீனப் பொருட்களின் விலை உயர்கிறது! கொரோனா எதிரொலி.. புதுச்சேரியில் தொழில்கள் பாதிப்பு.. சீனப் பொருட்களின் விலை உயர்கிறது!

தடம் மாறியது

தடம் மாறியது

சஜன் ஜின்டால் தலைமை வங்கிக்கும் JSW ஸ்டீல் நிறுவனம், புஷன் நிறுவனத்தைக் கைப்பற்ற ஒப்புதல் கிடைத்த பின்பு, இந்நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்துள்ளது மட்டும் அல்லாமல் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்துள்ளதன் எதிரொலியாக உள்நாட்டில் தற்போது ஸ்டீல் தேவை அதிகளவில் குறைந்துள்ளது.

இது இரண்டுமே JSW ஸ்டீல் நிறுவனத்தைக் கடுமையாகப் பாதித்துள்ளது.

 

19,700 கோடி ரூபாய்

19,700 கோடி ரூபாய்

புஷன் பவர் & ஸ்டீல் நிறுவனத்தைச் சுமார் 19,700 கோடி ரூபாய்க்கு வாங்கவும், எதிர்காலத்தில் இந்நிறுவனத்தின் வங்கிக் கடன் முறைகேடு, கடன் மோசடி ஆகிய பிரச்சனைகளுக்குச் செக்யூரிட்டியை JSW ஸ்டீல் நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் கொடுத்துள்ளது.

12 பெரும் நிறுவனங்கள்

12 பெரும் நிறுவனங்கள்

2017ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கிக் கடன் பிரச்சனை ஆகியவற்றால் திவாலாக அறிவிக்கப்பட்ட 12 நிறுவனங்களில் புஷன் பவர் & ஸ்டீல் லிமிடெட் நிறுவனமும் ஒன்று.

JSW ஸ்டீல்

JSW ஸ்டீல்

இந்நிறுவனம் தற்போது வருடத்திற்குச் சுமார் 18 மில்லியன் டன் ஸ்டீல் பொருட்களை உற்பத்தி செய்கிறது. இதில் 2019இல் கைப்பற்றப்பட்ட 1.5 மில்லியன் டன் உற்பத்தித் திறன் கொண்டு மோனெட் இஸ்பெட் நிறுவனத்தையும் சேர்த்தது.

இந்நிலையில் அடுத்த 6 முதல் 8 மாதத்தில் JSW ஸ்டீல் நிறுவனத்தின உற்பத்தித் திறன் சுமார் 26 மில்லியன் டன் ஆக உயர உள்ளது. இதில் டோல்வி தொழிற்சாலை 5 மில்லியன் டன் உற்பத்திக்கான விரிவாக்க பணிகள் மற்றும் 3.5 உற்பத்தித் திறன் கொண்ட புஷன் பவர் & ஸ்டீல் லிமிடெட் நிறுவனமும் இதில் இணைகிறது.

 

ஆதிக்கம்

ஆதிக்கம்

தற்போது நாட்டின் மோசமான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக இந்தியாவில் ஸ்டீல் தேவை குறைவாக இருக்கிறது. இது JSW ஸ்டீல் நிறுவனத்திற்குச் சவாலான விஷயமாக இருந்தாலும், தேவை அதிகரிக்கும் போதும் ஸ்டீல் உற்பத்தி மற்றும் விற்பனையில் இந்நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சொல்லப்போனால் அடுத்த 10 வருடத்திற்கு நாட்டில் ஸ்டீல் தேவை தொடர்ந்து வளர்ச்சி பாதையில் இருந்தால் கண்டிப்பாக JSW ஸ்டீல் லாபகரமான நிறுவனமாக மாறும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What Bhushan Power & Steel’s Acquisition Will Mean For JSW Steel

A year after it was declared a winning bidder, JSW Steel Ltd. has finally been allowed to take over insolvent Bhushan Power & Steel Ltd. But since then, the Sajjan Jindal-led steel mill’s debt has gone up and domestic demand for the alloy has declined amid a slowing economy.
Story first published: Tuesday, February 18, 2020, 17:36 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X