தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த என்ன செய்யலாம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை இன்று தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டு, மாநிலத்தின் நிதி நிலை குறித்து அதிர்ச்சி அளிக்கும் பல விஷயங்களை வெளியிட்ட நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை எப்படி மேம்படுத்தலாம்.

 திமுக ஆட்சி

திமுக ஆட்சி

தமிழ்நாட்டில் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி முதல்வர் முக.ஸ்டாலின் தலைமையில் மலர்ந்துள்ளது. சட்டமன்றத்தில் இந்த ஆட்சியின் முதல் ஆளுநர் உரையில், ஆட்சிக்கு ஆலோசனை வழங்கிட எஸ்தர் டஃப்லோ, பேராசிரியர் ரகுராம் ராஜன், அரவிந்த்சுப்ரமணியன், ரியர் ஜீன் ட்ரீஸ், எஸ்.நாராயண் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டிருப்பது நல்ல முன்னெடுப்பு.

இதை தொடர்ந்து தமிழகப் பொருளாதாரம் மேம்பட என்ன செய்யலாம்.

 

 தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி

தமிழநாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விவசாயம் அதைச்சார்ந்தவையும், தொழில்கள் அதைச் சார்ந்த கட்டுமான அமைப்புகளும், போக்குவரத்து தொழில்நுட்பத்துறை போன்ற துறைகளும் தான் கைகொடுக்கின்றன. இவற்றில் சேவை மற்றும் தொழில்துறைகள் தமிழகத்தில் முன்னிலையில் இருக்கின்றன.

 விவசாயம்

விவசாயம்

விவசாயத்தில் மாநில வருவாய் (ஜிடிபி) மொத்தம் சுமார் 8 சதவீதம் ஆகும். ஆனால் இதைச் சார்ந்துள்ள மக்கள் தொகை அதிகம். பருத்தி, நிலக்கடலை, பயிர் உற்பத்திக்கு வசதியான நீர்வசதிகள் ஏற்படுத்த வேண்டியது கட்டாயம்.

 காய்கறிகள்

காய்கறிகள்

அதுமட்டுமல்ல நெல், கரும்பு போன்ற பயிர்களோடு காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள் எண்ணெய் வித்துக்களை தமிழகத்தில் அதிகமாகப் பயிரிட முன்னெடுக்க வேண்டும்.

 பழங்கள் விளைச்சல்

பழங்கள் விளைச்சல்

தமிழகத்தில் பழ வகைகள் அதிகமாக விளைந்தாலும் அதை விற்பனை செய்யக்கூடிய வகையில் குளிர்சாதனத்துடன் கூடியரயில் வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.

விளைந்த பொருள்களை உழவர் சந்தை போன்று சந்தைப்படுத்தலும் உள்ளிட்ட பிரச்சனைகளை மாநில அரசு கவனிக்க வேண்டிய கடமையை உணர்ந்துள்ளது.

 

 நீண்ட கால கடன்தொகை

நீண்ட கால கடன்தொகை

சிறு குறு தொழில்கள், சுய உதவி குழுக்கள், தொழில்முனைவோருக்கு நீண்ட கால கடன்தொகை குறைந்த வட்டியில் கொடுக்க வேண்டும். விவசாய இடுபொருட்களை மானிய விலையில் கொடுப்பதும், நீர் மேலாண்மையைச் சரிவர சீர்திருத்தி பயன்கொடுக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும்.

 உற்பத்தி மற்றும் தயாரிப்பு

உற்பத்தி மற்றும் தயாரிப்பு

மோட்டார் வாகன உற்பத்தி, ஜவுளி, தோல் பொருட்கள் தமிழகத்தில் அதிகம். அதை விற்பனைப் படுத்தக் கூடியவகையில் சில முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

இதேபோல் இறக்குமதியை விட ஏற்றுமதிக்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

 

 சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி

சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தப்பட்ட பின், மாநிலங்களுக்கு தங்களது சொந்த வருமானத்தை உயர்த்துவதற்கான வாய்ப்புகள் வெகுவாகக் குறைந்துவிட்டன. மறுபுறம் செலவினங்களைக் கட்டுப்படுத்த அதிக முயற்சி எடுக்கப்படவில்லை.

 கடன் சுமை

கடன் சுமை

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஒய்வூதியங்கள், கடன் சேவை, மானியங்கள் போன்ற மூன்று செலவினங்களுக்கு மொத்த வருவாய்க்கும் அதிகமாக இடைவெளிகள் உள்ளன. புதுக்கடன் வாங்க நேர்கிறது. புதிய பொருளாதார வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிகம் செலவிட முடியவில்லை.

இவற்றையெல்லாம் பார்க்கும்போது தமிழக அரசின் மீது தற்போதுள்ள 2.85 லட்சம் கோடி கடன் இந்த நிதியாண்டில் 3.50 லட்சம் கோடியாக அதிகரிக்கலாம்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What can be done to improve the economy of Tamil Nadu? : Tamilnadu Govt's PTR Whitepaper

What can be done to improve the economy of Tamil Nadu? : Tamilnadu Govt's PTR Whitepaper
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X