ராணி எலிசபெத் மறைவு: பிரிட்டன் கரன்சி முதல் அஞ்சல் தலை வரையில் மாற்றங்கள்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டனின் இரண்டாம் எலிசபெத் ராணி உடல்நலக் குறைவால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காலமானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் பிரிட்டனின் கரன்சி முதல் அஞ்சல் தலை வரையில் பற்பல மாற்றங்கள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

இது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை என்றாலும், புதிய அரசர் வரும்போது, வரவிருக்கும் மாற்றங்களை வரலாறு மூலம் அறிய முடிகிறது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத், 96 வயதானவர். உடல் நலப் பிரச்சனை காரணமாக சமீபத்திய காலமாகவே இருந்து வந்தார். கடந்த சில தினங்களாகவே அவரின் உடல்நலம் மோசமானதனை அடுத்து தீவிர கண்கானிப்பிலும் இருந்து வந்தார்.

சரக்கு ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்..!!சரக்கு ஆர்டர் செய்தது தப்பா.. ரூ.4 லட்சத்தை ஆட்டைய போட்ட கும்பல்..!!

அடுத்த மன்னர் யார்?

அடுத்த மன்னர் யார்?

1926-ம் ஆண்டு பிறந்த இரண்டாம் எலிசபெத், பிரிட்டனின் ராணியாக அரசுப் பணியை ஏற்று, 70 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். பிரிட்டனில் நீண்ட காலம் அரசுப் பணியில் இருந்த சாதனையை செய்தவர். இத்தகைய ராணியின் மறைவு பிரிட்டனில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையில் அடுத்த மன்னராக எலிசபெத்தின் மூத்த மகன் சார்லஸ் அரியணை ஏறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

கரன்சி

கரன்சி

ராணி எலிசபெத் மகாராணியான பிறகு அவர் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள், கரன்சிகள் பிரிட்டனை அலகரித்து வருகின்றன. இது காமன்வெல்த்திலும் பரவியுள்ளது. கிட்டதட்ட ஒரு தசாப்தத்திற்கு ஒரு முறை அவரது நினைவாக புதிய நாணயங்கள் வடிவமைக்கப்பட்டு வந்தன. தற்போது மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் ஏறலாம் என்ற நிலையில், பிரிட்டீஸ் நாணயத்தில் மிகப்பெரிய மாற்றம் காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கரன்சிகள் வெளியாகலாம்
 

புதிய கரன்சிகள் வெளியாகலாம்

புதிய மன்னர் சார்லஸின் புகைப்படம் பொறிக்கப்பட்டு, கரன்சிகள் மற்றும் நாணயங்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கரன்சிகள் மற்றும் நாணயங்களின் இடது பக்கத்தில் சார்லஸின் புகைப்படம் இருக்கும் என்றும், வலதுபுறம் மகாராணியின் புகைப்படம் இருக்கும் என்றும் எதிர்பார்க்கபபடுகிறது. எனினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை.

தேசிய கீதம்

தேசிய கீதம்

காட் சேவ்ஸ் த குயின் என்ற தேசிய கீதம் இனி மாறலாம். கடந்த 70 வருடங்களாகவே பிரிட்டனில் இது தேசிய கீதமாக இருந்து வந்த நிலையில், மன்னர் சார்லஸ்- காக இனி அது காட் சேவ்ஸ் த கிங் என மாறலாம்.

 கொடிகள்

கொடிகள்

மூன்றாம் மன்னர் சார்லஸ், 1960ல் பிரிட்டன் இரண்டாம் ராணி எலிசபெத் பெற்ற கொடியை பெற முடியும். எலிசபெத்தின் கிரீடத்தில் E என்ற எழுத்துடன் நீல நிற பின்னணியில் ரோஜாக்களுடன் இருக்கும். ஆக சார்லஸ்-க்கும் தற்போது தனிப்பட்ட கொடி உள்ளது. எனினும் இனி அதிலும் மாற்றம் இருக்கலாம்.

அஞ்சல் அமைப்பு

அஞ்சல் அமைப்பு

ராணி எலிசபெத்தின் தலை, இங்கிலாந்தின் அனைத்து தபால் தலைகளிலும் உள்ளது. சமீபத்தில் பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆட்சியின் 70 ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றது. இது நாள் பிளாட்டினம் ஜூபிலி விழாகவாக கொண்டாடப்பட்டது. இதற்காக கடந்த பிப்ரவரி மாதமே தபால் தலைகள் வெளியிடப்பட்டன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What changes will Queen Elizabeth's death bring about from currency to postage stamps?

What changes will Queen Elizabeth's death bring about from currency to postage stamps?/ராணி எலிசபெத் மறைவு.. கரன்சி முதல் அஞ்சல் தலை வரையில் என்னென்ன மாற்றங்கள் வரலாம்?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X