தமிழ்நாடு 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அதாவது 1 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான பொருளாதார மதிப்பீட்டைக் கொண்ட மாநிலமாக உயர வேண்டும் என்ற முக்கியமான இலக்குடன் இயங்கி வருகிறது.
இந்த இலக்கை அடைய தமிழ்நாடு அரசு தீவிரமாக இயங்கி வருவது மட்டும் அல்லாமல் பல வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உடன் வர்த்தகத்தைத் துவங்க அரசுடன் ஒப்பந்தம் செய்து வருகிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திராவிட மாடல் என்றால் என்ன என்று ஒரு போட்டியில் விளக்கியுள்ளார்.
முருங்கை-யில் கோடிகளை அள்ளும் கரூர் பெண்.. வெறும் 26 வயதில் கோடீஸ்வரி..!

திராவிட மாடல்
திராவிட மாடல் என்பது மிகவும் எளிமையானது. திராவிட மாடல் முதலில் சுயமரியாதையுடன் தொடங்குகிறது. யாரும் புறக்கணிக்கப்படாமல் அனைவருக்கும் வெற்றிபெறச் சமமான வாய்ப்பை இந்த மாடல் வழங்குகிறது. அனைவருக்கும் கல்வி மற்றும் இடஒதுக்கீடு மூலம் வரலாற்று ரீதியாக ஒடுக்கப்பட்டவர்களின் பல நூற்றாண்டு கால ஒடுக்குமுறையை ஈடுசெய்யத்தக்க அளவிற்கு வாய்ப்புகளைப் பெறுவதை உறுதி செய்வதே திராவிட மாடலின் அடிப்படை என்று விளக்கியுள்ளார்.

சுயாட்சி
திராவிட மாடல் சுயாட்சியில் அதிக கவனம் செலுத்துகிறது மற்றும் ஒன்றியத்திலிருந்து மாநிலத்திற்கு அங்கிருந்து மாவட்டம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கிறது. கீழ் மட்டத்தில் உள்ளவர்கள் எப்போதும் முன்னேறி மேலே செல்லும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறது.

சமம்
எனது கார் ஒட்டுனரின் மகனும், என் மகன் படிக்கும் அதே சிறப்பு வசதிகள் பெற்றுள்ள பள்ளிக்குச் செல்லும் நிலை ஏற்பட்டால் அது நான் வெற்றிகரமான விளைவை உண்டாக்கிவிட்டேன் என்பதை குறிக்கும்.

இவ்வளவுதாங்க
இதை செயல்படுத்தும் ஒரு முறையைத் தான் நாங்கள் திராவிட மாடல் என குறிக்கிறோம் என தமிழ்நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஒரு பேட்டியில் விளக்கியுள்ளார்.

இலங்கை
இந்தியாவின் பொருளாதார நிலை இலங்கையைப் போன்றே இருக்கிறது என சில வாரங்களுக்கு முன்பு ராகுல் காந்தி ட்விட்டரில் சில தரவுகளை வெளியிட்டிருந்தார்.அவரது இந்த கருத்தை நீங்கள் ஏற்கிறீர்களா என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்-யிடம் இப்பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.

விளைவு இதுதான்.. ஆனா
ஆம் , இல்லை என்று இரண்டையும் இதற்கு விடையாக கூறுவேன். ஜனநாயக நடைமுறை இல்லாமல், கட்டுப்பாடுகள் மற்றும் சமன்பாடுகள் இல்லாமல் அதிகராம் குவிக்கப்படும்போது , அது தவறான பாதைக்கே இட்டுச்செல்லும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன்.

இந்தியாவுக்கு வாய்ப்பு இல்லை..
ஆனால் இலங்கையின் அளவு மற்றும் அதன் பொருளாதார கட்டமைப்பின் வகையைக் கருத்தில் கொண்டால், இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் மிகவும் மோசமானது. இதேவேளையில் அத்தகைய அசாதாரண சரிவை எதிர்கொள்ளும் அபாயத்தில் இந்திய பொருளாதாரம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை என்றும் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் விளக்கம் கொடுத்துள்ளார்.
வங்கி வேலையை விட்டு டீ கடை திறந்த கரூர் இளைஞன்..! ரூ.7 கோடி வருமானம்..!