தமிழ்நாடு பட்ஜெட் 2021ல் என்ன ஸ்பெஷல்..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தமிழ்நாட்டின் நிதிநிலை மிகவும் மோசமாக இருப்பது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் தற்போது தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் சுமார் 2,63,976 ரூபாய் அளவிலான கடன் சுமை இருப்பதாகப் பழனிவேல் தியாகராஜன் தனது வெள்ளை அறிக்கையில் கூறியுள்ளார்.

தமிழ்நாட்டின் கடன் அளவை குறைக்கவும், பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வர்த்தகம் ஆகியவற்றை மேம்படுத்தவும் சிறந்த பட்ஜெட் தேவை என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்தும் இல்லை.

TN Budget 2021: கமிட்டிகள் காப்பாற்றுமா? தமிழ்நாட்டின் பொருளாதாரம் இனி வேற லெவலுக்கு போகுமா..! TN Budget 2021: கமிட்டிகள் காப்பாற்றுமா? தமிழ்நாட்டின் பொருளாதாரம் இனி வேற லெவலுக்கு போகுமா..!

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முதல் முறையாகத் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் அறிக்கையில் என்ன ஸ்பெஷல்..!

ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட்

ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட்

10 ஆண்டுகள் கழித்துத் திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட், மேலும் முதல்வராக ஸ்டாலின் முதல்முறையாகப் பதவியேற்றிய பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட். இதுமட்டும் அல்லாமல் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்-ம் இது தான்.

விவசாயத் துறை பட்ஜெட்

விவசாயத் துறை பட்ஜெட்

தமிழக வரலாற்றில் முதல் முறையாகவும், இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயத் துறைக்கான தனிப் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இன்று பொதுப் பட்ஜெட் அறிக்கையும் நாளை அதாவது ஆகஸ்ட் 14ம் தேதி விவசாயத் துறைக்கான பட்ஜெட் அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நாளை தாக்கல் செய்கிறார்.

டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கை
 

டிஜிட்டல் பட்ஜெட் அறிக்கை

நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், முன்பு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கோரிக்கை வைக்கப்பட்ட டிஜிட்டல் முறையிலான பட்ஜெட் அறிக்கை தாக்கல் தற்போது சாத்தியமாகியுள்ளது. முதல் முறையாகத் தமிழகச் சட்டமன்றத்தில் இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

அனைவருக்கும் லேப்டாப்

அனைவருக்கும் லேப்டாப்

டிஜிட்டல் பட்ஜெட் அல்லது ஈ பட்ஜெட் தாக்கல் என்பதால் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் லேப்டாப்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டை சட்டசபை உறுப்பினர்கள் பார்த்துக் கொள்வார்கள்.

இ-பட்ஜெட் அறிக்கை

இ-பட்ஜெட் அறிக்கை

முன்பெல்லாம் பட்ஜெட் குறித்துத் தமிழ், ஆங்கிலத்தில் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்படும். ஆனால் இந்த முறை முதல் தடவையாகத் தமிழக அரசு இ-பட்ஜெட்டை தாக்கல் செய்கிறது. இதனால் மூலம் எளிதாக மக்களுக்கும், சட்டசபை உறுப்பினர்கள் பட்ஜெட் அறிக்கையைப் பயன்படுத்த முடியும்.

கலைவாணர் அரங்கு

கலைவாணர் அரங்கு

கொரோனா பரவலால் இடநெருக்கடி காரணமாகச் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கத் தாராள இடம் தேவை என்பதால் கலைவாணர் அரங்கில் தாக்கல் செய்யப்படுகிறது.

கடந்த அதிமுக ஆட்சி கலைவாணர் அரங்கில் இடைக்காலப் பட்ஜெட்டை தாக்கல் செய்தது.

வெள்ளை அறிக்கை

வெள்ளை அறிக்கை

தமிழ்நாட்டில் 20 ஆண்டுகளுக்குப் பின் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு பட்ஜெட் அறிக்கை தாக்கலாகிறது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கை மாநிலத்தின் நிதிநிலையை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Special about MK.stalin govt's first Tamilnadu budget

What is Special about MK.stalin govt's first Tamilnadu budget
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X