பிரிட்டன் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் எடுக்கும் முதல் நடவடிக்கை.. சர்க்கரை வரி ரத்தா?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரிட்டன் பிரதமராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்ட லிஸ் ட்ரஸ் அவர்கள் தனது முதல் நடவடிக்கையாக சர்க்கரை வரியை ரத்து செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குளிர்பானங்களுக்கு கடந்த பல ஆண்டுகளாக விதிக்கப்பட்டுள்ள சர்க்கரை வரி ரத்து செய்யப்பட்டால் குளிர்பான நிறுவனங்கள் மகிழ்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரிட்டன் பிரதமர் லிஸ் ட்ரஸ் அவர்கள் எடுக்கப்போகும் இந்த முதல் நடவடிக்கைக்கு அந்நாட்டு மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வரலாறு காணாத சரிவில் பிரிட்டன் பவுண்ட்.. என்ன செய்ய போகிறார் லிஸ் ட்ரஸ்? வரலாறு காணாத சரிவில் பிரிட்டன் பவுண்ட்.. என்ன செய்ய போகிறார் லிஸ் ட்ரஸ்?

பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸ்

பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸ்

பிரிட்டிஷ் பிரதமர் லிஸ் ட்ரஸ் குளிர்பானங்கள் மீதான சர்க்கரை வரிகளை ரத்து செய்யவும், நாட்டின் வாழ்க்கை செலவு நெருக்கடியை தணிக்க சில உடல் பருமன் எதிர்ப்பு நடவடிக்கைகளை கைவிடவும் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

நிதி அமைச்சருக்கு உத்தரவு

நிதி அமைச்சருக்கு உத்தரவு

உடல் பருமன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்ய பிரிட்டன் நிதியமைச்சர் குவாசி குவார்டெங் அவர்களுக்கும், சுகாதார அதிகாரிகளுக்கும் பிரதமர் அலுவலகத்தில் இருந்து உத்தரவு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமரின் இந்த நடவடிக்கை சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

புதிய வரிகள் இல்லை

புதிய வரிகள் இல்லை

இதுகுறித்து டெய்லி மெயிலுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் லிஸ் ட்ரஸ் அளித்த பேட்டியில், ' நம் நாட்டு மக்கள் என்ன சாப்பிட வேண்டும் என்று அரசாங்கம் கூற விரும்பவில்லை" என்று கூறியிருந்தார். மேலும் கொழுப்பு, உப்பு அல்லது சர்க்கரை அதிகம் உள்ள பானங்கள் மீது புதிய வரிகளை விதிக்க மாட்டோம் என்றும் அவர் கூறினார்.

 ‘சர்க்கரை வரி’ என்றால் என்ன?

‘சர்க்கரை வரி’ என்றால் என்ன?

2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் குளிர்பானங்கள் மீதான சர்க்கரை வரி அமலுக்கு வந்தது. இந்த வரி மில்லியன் கணக்கான குழந்தைகளின் உடல் பருமனை சமாளிக்க உதவுவதை நோக்கமாக கொண்டதாக கூறப்பட்டது. குளிர்பான உற்பத்தியாளர்கள் தாங்கள் விற்கும் குளிர்பானத்தில் சர்க்கரை அதிகம் சேர்த்தால் அந்த பானங்களுக்கு வரி செலுத்த வேண்டும் என்ற முறை அமல்படுத்தப்பட்டது.

எவ்வளவு வரி?

எவ்வளவு வரி?

சர்க்கரை வரி என்பது 100 மில்லிக்கு 8 கிராம் சர்க்கரைக்கு மேல் உள்ள பானங்கள் லிட்டருக்கு 24 காசு வரி செலுத்த வேண்டும். 100 மில்லிக்கு 5 கிராம் - 8 கிராம் சர்க்கரை இருந்தால் லிட்டருக்கு 18 காசுகள் வரி செலுத்த வேண்டும். ஆனால் அதே நேரத்தில் சர்க்கரை சேர்க்கப்படாத தூய பழச்சாறுகளுக்கு வரிவிலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல் பால் மற்றும் கால்சியம் கலந்த பானங்களுக்கும் வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளன.

 குறைந்த சர்க்கரை அளவு

குறைந்த சர்க்கரை அளவு

இந்த வரிவிதிப்பு காரணமாக Fanta, Ribena மற்றும் Lucozade போன்ற முன்னணி பிராண்டுகள் தாங்கள் உற்பத்தி செய்யும் பானங்களின் சர்க்கரை அளவை குறைக்க தொடங்கியது. குளிர்பானங்களில் சர்க்கரை குறைந்ததால் உடல் பருமன், புற்றுநோய், நீரிழிவு, இதய நோய்கள், ​​மூட்டுவலி மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகள் குறைந்ததாகவும் கூறப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is Sugar tax? UK PM Liz Truss preparing to scrap it?

What is Sugar tax? UK PM Liz Truss preparing to scrap it? | பிரிட்டனின் புதிய பிரதமர் லிஸ் ட்ரஸ் எடுக்கும் முதல் நடவடிக்கை.. சர்க்கரை வரி ரத்தா?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X