RD மற்றும் FD சேமிப்புக்கும் மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்புக்கும் என்ன வித்தியாசம்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பொதுமக்கள் சேமிப்பு திறனை அதிகரித்து உள்ளனர் என்பது தெரிந்ததே.

 

குறிப்பாக FD என்று கூறப்படும் பிக்சட் டெபாசிட், RD என்றும் கூறப்படும் ரெக்கரிங் டெபாசிட் , மியூச்சுவல் ஃபண்ட் உள்பட பல்வேறு விதங்களில் பொதுமக்கள் தங்களுடைய எதிர்கால பாதுகாப்பிற்காக சேமித்து வருகின்றனர்.

ஆனால் அதே நேரத்தில் தாங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை, சரியான முதலீட்டில் சேமிக்க வேண்டும் என்பதுதான் நிதி ஆலோசகர்களின் அறிவுரையாக உள்ளது. அந்த வகையில் RD மற்றும் FDயில் முதலீடு செய்வதற்கும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பதை தற்போது பார்ப்போம்.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்கோமீட்டர் என்றால் என்ன? அதில் எத்தனை வகை உள்ளது?மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் ரிஸ்கோமீட்டர் என்றால் என்ன? அதில் எத்தனை வகை உள்ளது?

RD மற்றும் FD

RD மற்றும் FD

தொடர் வைப்புகள் என்று கூறப்படும் RD மற்றும் நிலையான வைப்புகள் என்று கூறப்படும் FD ஆகியவை நம் நாட்டில் பிரபலமாக உள்ளது என்பதும் இதில் அதிக நபர்கள் சேமித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடப்பட்டது.

பாதுகாப்பான முதலீடு

பாதுகாப்பான முதலீடு

பாதுகாப்பான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை தரும் இந்த சேமிப்பு வகைகளைத்தான் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சேமிப்பு வகைகளை தேர்வு செய்யும் நபர்கள் எதிர்காலத்தில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை சார்ந்துள்ளது.

பணவீக்கம்
 

பணவீக்கம்

ஆண்டுக்காண்டு அதிகரித்து வரும் பணவீக்கம் மற்றும் வரிகள் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் ஒரு முதலீட்டாளர் தனது முதலீடு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டு விரும்புகிற பட்சத்தில் RD மற்றும் FD சேமிப்பு வகைகள் சிறப்பானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு

சேமிப்பு

நாம் செய்யும் ஒரு பெரிய முதலீடு எந்தவிதமான ரிஸ்க்கும் இல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட சதவீத வருமானத்தை பெற்றுக் கொள்வது FD என்பதும் அதே போல் ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை சேமித்து இலக்கை நிர்ணயிப்பது RD சேமிப்பு வகை என்பது குறிப்பிடத்தக்கது.

மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட்


ஆனால் அதே நேரத்தில் ஒரு முதலீட்டாளர் தனது முதலீட்டை முதலீடு செய்வதோடு பணவீக்கம் மற்றும் வரிகள் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்தால் மேற்கண்ட இரண்டு சேமிப்புகளும் சரியாக இருக்காது. அது போன்ற நபர்களுக்கு மியூச்சுவல் ஃபண்ட் சேமிப்பு வகைதான் சரியானதாக இருக்கும்.

வருமானம் அதிகரிக்கும்

வருமானம் அதிகரிக்கும்

RD மற்றும் FD மூலம் வரும் வட்டி விகிதம் உயர்ந்து வரும் பணவீக்கம், வரிகள் காரணமாக நமக்கு நஷ்டத்தை தான் கொடுக்கும் என்பது குறிப்பிடப்பட்டது. எனவே சரியான நிதி ஆலோசகரின் ஆலோசனை பெற்று சரியான ஃபண்டு மேனேஜர் நிர்வகிக்கும் மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால் பணவீக்கம் மற்றும் வரிகள் அதிகரிக்க அதிகரிக்க நமது வருமானமும் அதிகரிக்கும் என்பது குறிப்பிடப்பட்டது.

 புத்திசாலித்தனமான முதலீடு

புத்திசாலித்தனமான முதலீடு

எனவே நமது முதலீட்டின் பாதுகாப்பை மட்டும் கணக்கில் கொள்ளாமல் நமது முதலீடு சரியான வருமானத்தையும் தருகிறதா? என்பதை யோசித்து மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வதே புத்திசாலித்தனம் என நிதி ஆலோசகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What is the difference between FD-RD savings and Mutual Funds

Recurring Deposits and Fixed Deposits are the most popular savings schemes India. They are safe and offer a guaranteed rate of return to investors.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X