என்ன சொன்னார் நிர்மலா சீதாராமன்..? யாருக்கு என்ன பயன்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று மே 13, 2020, புதன்கிழமை மாலை பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

இந்த கூட்டத்தில், நேற்று பிரதமர் நரேந்திர மோடி சொன்னது போல இந்திய அரசு ஒதுக்கி இருக்கும் ஒட்டு மொத்த 20 லட்சம் கோடி ரூபாய் உதவித் திட்டங்கள் குறித்து விளக்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய முக்கிய விஷயங்கள் மற்றும் அரசின் திட்டங்களைத் தான் இந்த கட்டுரையில் விரிவாகப் பார்க்க இருக்கிறோம்.

ஆத்ம நிர்பார்

ஆத்ம நிர்பார்

நேற்று கொரோனா வைரஸ் லாக் டவுன் பற்றி, மக்களிடம் உரையாற்றிய பிரதமர் "ஆத்ம நிர்பார்" என ஒரு இந்தி வார்த்தையைப் பயன்படுத்தினார். இதன் பொருள் சுய சார்ப்பு. இந்த சுய சார்புத் திட்டம் இந்தியாவை தனிமைப்படுத்துவதற்காக இல்லை. உள்ளூர் வியாபாரத்தை உலகத்துக்குக் கொண்டு செல்லத் தான் சொல்கிறோம் என்றார் நிர்மலா சீதாராமன்.

சிறு குறு தொழில் முனைவோர்கள்

சிறு குறு தொழில் முனைவோர்கள்

எம் எஸ் எம் இ துறையினருக்கு 3 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் வழங்க இருக்கிறார்களாம். இது 4 ஆண்டு கால கடன். 12 மாதங்களுக்கு அசலைத் திருப்பிச் செலுத்த வேண்டாம். 10 மாதம் மாரிடோரியமும் உண்டாம். இதனால் சுமார் 45 லட்சம் எம் எஸ் எம் இ-யினர் பயன் பெறுவார்கள். இந்த கடனை வாங்க சொத்து பத்துக்கள் எதுவும் தேவை இல்லை.

கடன் திட்டங்கள்

கடன் திட்டங்கள்

subordinate debt-based scheme வழியாக 20,000 கோடி ரூபாய் நிதி கொடுக்க இருக்கிறார்கள். அரசு Credit Guarantee Fund Scheme for Micro and Small Enterprises வழியாக 4,000 கோடி ரூபாயைக் வழங்க இருக்கிறார்களாம்.

ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்

ஃபண்ட் ஆஃப் ஃபண்ட்ஸ்

அது போக 50,000 கோடி ரூபாயை, ஈக்விட்டி வழியாக, யார் எல்லாம் தகுதியானவர்களோ, அந்த எம் எஸ் எம் இ கம்பெனிகளுக்கு எல்லாம் கொடுக்க இருக்கிறார்களாம். இப்படி உதவுவதன் மூலம், சிறு குறு தொழில்முனைவோர்களின் கெபாசிட்டியை அதிகரிக்கவும், அவர்கள் பங்குச் சந்தைகளில் பட்டியலிட்டுக் கொள்ளவும் உதவியாக இருக்குமாம்.

எம் எஸ் எம் இ  உற்பத்தி நிறுவனம்

எம் எஸ் எம் இ உற்பத்தி நிறுவனம்

ஒரு நிறுவனம், இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களில் முதலீடு செய்யும் தொகையைப் பொறுத்து தான் எம் எஸ் எம் இ-யை வரையறை செய்கிறார்கள். இப்போது ஒரு உற்பத்தி நிறுவனம் 25 லட்சம் ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது மைக்ரோ நிறுவனம் (Micro Enterprise).

மற்றவைகள் உற்பத்தி

மற்றவைகள் உற்பத்தி

ஒரு உற்பத்தி நிறுவனம் 5 கோடி ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது சிறு நிறுவனம் (Small Enterprise).
ஒரு உற்பத்தி நிறுவனம் 10 கோடி ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் உற்பத்தி சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது நடுத்தர நிறுவனம் (Medium Enterprise).

எம் எஸ் எம் இ சேவை நிறுவனம்

எம் எஸ் எம் இ சேவை நிறுவனம்

உற்பத்தி நிறுவனத்தைப் போல, சேவை சார்ந்த தொழில் செய்யும் நிறுவனங்கள் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் (Plant Machinery or Equipment) செய்யும் முதலீடுகளைப் பொறுத்து பிரிக்கிறார்கள். இப்போது ஒரு சேவை நிறுவனம் 10 லட்சம் ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது மைக்ரோ நிறுவனம் (Micro Enterprise).

 சேவை மற்றவைகள்

சேவை மற்றவைகள்

ஒரு சேவை நிறுவனம் 2 கோடி ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது சிறு நிறுவனம் (Small Enterprise).
ஒரு சேவை நிறுவனம் 5 கோடி ரூபாய்க்குள் இயந்திரங்கள் மற்றும் சாதனங்களில் முதலீடு செய்து இருந்தால் அது நடுத்தர நிறுவனம் (Medium Enterprise).

புதிய விளக்கம் - 1

புதிய விளக்கம் - 1

இப்போது புதிய விளக்கத்தின் படி, ஒரு நிறுவனத்தின் மொத்த முதலீடு மற்றும் டேர்ன் ஓவர் பொறுத்து அவர்கள் எந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் என மாறுபடுமாம். இந்த வரம்பு உற்பத்தி & சேவை இரண்டு தரப்பினருக்குமே பொருந்துமாம். கீழே யார் எந்த ரகம் என விரிவாகக் கொடுத்து இருக்கிறோம்.

புதிய விளக்கம் 2

புதிய விளக்கம் 2

1. 1 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 5 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் - மைக்ரோ நிறுவனம் (Micro Enterprise).
2. 10 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 50 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் - சிறு நிறுவனம் (Small Enterprise).
3. 20 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 100 கோடி ரூபாய் டேர்ன் ஓவர் - நடுத்தர நிறுவனம் (Medium Enterprise).

200 கோடி

200 கோடி

அரசு கொள்முதலில் 200 கோடி ரூபாய் வரைக்குமான டெண்டர்களுக்கு குளோபல் டெண்டர் அனுமதிக்கப்படாதாம். இதனால் எம் எஸ் எம் இ கம்பெனிகளுக்கு பெரிய டெண்டர்களை எடுத்து ஒரு கை பார்க்க ஒரு நல்ல வாய்ப்பு உருவாகும் என்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.

பணம் செட்டில் ஆகும்

பணம் செட்டில் ஆகும்

அடுத்த 45 நாட்களுக்குள் எம் எஸ் எம் இ கம்பெனிகளுக்கு மத்திய அரசு மற்றும், மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் அனைத்தும், கொடுக்க வேண்டிய பாக்கி பணத்தை எல்லாம் கொடுத்து முடிக்கப்படும் எனச் சொல்லி எம் எஸ் எம் இ கம்பெனிகள் வயிற்றில் பால் வார்த்து இருக்கிறார் நிதி அமைச்சர்.

பி எஃப்

பி எஃப்

100 ஊழியர்களுக்கு கீழ் வேலை பார்க்கும் கம்பெனிகளில் பெரும்பாலானவர்கள் மாதம் 15,000 ரூபாய் மட்டுமே சம்பளம் வாங்குகிறார்கள் என்றால், அந்த கம்பெனிகளின் தரப்பில் இருந்து செலுத்த வேண்டிய பிஎஃப் (Employer & Employee) பணத்தை ஜூன் - ஆகஸ்ட் வரை அரசே செலுத்த இருக்கிறதாம். இதனால் 3.67 லட்சம் கம்பெனிகளும், 72.2 லட்சம் ஊழியர்களும் பயன்பெறுவார்களாம்.

என் பி எஃப் சி, மியூச்சுவல் ஃபண்ட்

என் பி எஃப் சி, மியூச்சுவல் ஃபண்ட்

வங்கி அல்லத நிதி நிறுவனங்கள், மியூச்சுவல் அண்ட் கம்பெனிகள் மற்றும் வீட்டுக் கடன் கம்பெனிகளுக்கு பணம் கிடைபப்தில் சிரமங்கள் இருக்கின்றன. எனவே 30,000 கோடி ரூபாயை, மத்திய அரசு சிறப்பு லிக்விடிட்டி திட்டத்தின் கீழ் கொடுக்க இருக்கிறார்களாம்.

மின் பகிர்மானம்

மின் பகிர்மானம்

இந்தியாவில் இருக்கும் மின்சார பகிர்மான கம்பெனிகளுக்கு ஏற்பட்டு இருக்கும் நிதி நெருக்கடியால், மின்சாரத்தை உற்பத்தி செய்யும் கம்பெனிகளுக்கு பணத்தைச் செலுத்த முடியவில்லை. இந்த பிரச்சனைய போக்க, 90,000 கோடி ரூபாயை, மின் பகிர்மான கம்பெனிகளுக்கு, கொடுக்க இருக்கிறார்களாம். இதனால் மின்சார வாரியத்திடம் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கூட நன்மை கிடைக்குமாம்.

ரியல் எஸ்டேட்

ரியல் எஸ்டேட்

கொரோனா வைரஸ் பிரச்சனை force majeure-ஆக கருதப்படும் எனச் சொல்லி இருக்கிறார் நிதி அமைச்சர். இதனால் 25 மார்ச் 2020 அன்று அல்லது அதற்குப் பின் காலாவதியாக இருக்கும் பதிவு செய்யப்பட்ட ரியல் எஸ்டேட் திட்டங்களை, ரிஜிஸ்டர் செய்யவும், திட்டங்களை முடிக்கும் தேதியும், 6 மாதங்களுக்கு ஒத்தி வைக்கப்படும் எனச் சொல்லி இருக்கிறார்.

வருமான வரி

வருமான வரி

1. கடந்த 2019 - 20 நிதி ஆண்டுக்கு, ஜூலை 31-க்குள் வருமான வரிப் படிவங்களைச் சமர்பிக்க வேண்டும். அந்த கடைசி தேதி ஜூலை 31-ல் இருந்து நவம்பர் 30-ஆக நீட்டித்து இருக்கிறார்கள். இது எல்லா வருமான வரி ரிட்டன்களுக்கும் பொருந்தும்.
2. விவாத் சே விஸ்வாஸ் என்கிற அரசு திட்டமும் டிசம்பர் 31 வரை நீட்டித்து இருக்கிறார்கள்.

டிடிஎஸ் டிசிஎஸ்

டிடிஎஸ் டிசிஎஸ்

காண்டிராக்டர்களுக்கு பேமெண்ட் செய்வது, ப்ரொஃபஷனல்களுக்கு செலுத்தும் கட்டணம், வட்டி, வாடகை, டிவிடெண்ட், கமிஷன், தரகுக் கட்டணம் போன்றவைகளுக்கு வசூலிக்கும் டிடிஎஸ் (TDS - Ta Deducted at Source) 25 % குறைத்து இருக்கிறார்கள். இதே போல சில டிசிஎஸ் (TCS - Tax Collected at Source) வரி பிடித்தங்களையும் 25 % குறைத்து இருக்கிறார்கள். இது நாளை முதல் 31 மார்ச் 2021-வரை அமலில் இருக்குமாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What nirmala sitharaman said in today press meet

Today central finance minister nirmala sitharaman gave a press meet regarding 20 lakh crore remaining packages. We have listed out the major points what she said in today meeting.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X