6 லட்சம் வேலைகளை உருவாக்கிய 60,000 ஸ்டார்ட் அப்கள்.. முதுகெலும்பாக உள்ள MSME.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்று நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில், முன்னதாக குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் சிங் உரையாற்றினார்.

அதில் அரசின் பல்வேறு நடவடிக்கைகளையும், திட்டங்களையும் சுட்டிகாட்டியவர், ஸ்டார்ட் அப், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், ஆத்ம நிர்பார் என பல திட்டங்களை பற்றியும் பேசியுள்ளார்.

மேலும் இந்த திட்டங்கள் மூலம் எந்தளவுக்கு மக்கள் பயடைந்துள்ளனர் உள்ளிட்ட பல தகவல்களையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

அரசின் தளராத நம்பிக்கை.. 1000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்..! அரசின் தளராத நம்பிக்கை.. 1000 புள்ளிகளை தாண்டிய சென்செக்ஸ்..!

ஸ்டார்ட் அப்கள்

ஸ்டார்ட் அப்கள்

முன்னதாக ஸ்டார்ட் அப் பற்றி பேசியவர், இந்தியாவில் ஸ்டார்ட் அப் சுற்று சூழல, நமது இளைஞர்களின் தலைமையில் உருவாகி வரும் முடிவற்ற புதிய சாத்தியக் கூறுகளுக்கு சிறந்த எடுத்துக் காட்டு என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும் கடந்த 2016ம் ஆண்டு முதல் 56 துறை சார்ந்த 60,000 ஸ்டார்ட் அப்கள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஸ்டார்ட் அப்கள் மூலம் 6 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன என கூறியுள்ளார்.

எம்எஸ்எம்இ

எம்எஸ்எம்இ

இதே எம்எஸ்எம்இ-க்கள் பற்றிய பேசியவர், எம்எஸ்எம்இ நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முதுகெலும்பாக இருந்து வருகின்றன. இவைகள் சுய சார்பு இந்தியாவை நோக்கி செயல்பட்டு வருகின்றன.

நமது படைகளுக்கு தேவையானது பொருட்களை இந்தியாவிலேயே உருவாக்க வேண்டும். இந்தியாவிலேயே உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ளார். இது நாட்டின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்பதோடு, இறக்குமதியினையும் குறைக்க வழிவகுக்கும். எல்லவற்றிற்கும் மேலாக நடப்பு கணக்கு பற்றாக்குறையும் குறைக்க வழிவகுக்கும் என்பதில் சந்தேகமேதுமில்லை.

ஜவுளித் துறை

ஜவுளித் துறை

ஜவுளித் துறை பற்றி பேசிய குடியரசு தலைவர், சுதந்திர போராட்டத்தில் நமது நாட்டின் அடையாள சின்னமாக விளங்கிய காதி, மீண்டும் சிறு தொழில் முனைவோருக்கு உறுதுணையாக மாறி வருகின்றது.

அரசின் முயற்சியால் கடந்த 2014ம் ஆண்டினை காட்டிலும் காதி விற்பனையானது 3 மடங்காக அதிகரித்துள்ளது.

ஜவுளிப் பூங்காக்கள்

ஜவுளிப் பூங்காக்கள்

மேலும் ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக 4500 கோடி ரூபாய் முதலீட்டில், 7 மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றது. இது மேலும் ஜவுளித் துறை வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என கூறியுள்ளார்.

உண்மையில் இதுபோன்ற வசதிகள் ஜவுளித் துறையில் மட்டும் அல்ல, ஒவ்வொரு துறையிலும் மேம்படுத்தப் பட வேண்டும். இது மேற்கொண்டு வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும். இதுபோன்ற அறிவிப்புகள் பட்ஜெட்டில் வந்தால் நன்றாக இருக்கும் என்பதே இங்கு ஒவ்வொரு துறையினரின் மாபெரும் எதிர்பார்ப்பு.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What President Ram Nath Govind said about start-ups and Atma Nirbar

What President Ram Nath Govind said about start-ups and Atma Nirbar/6 லட்சம் வேலைகளை உருவாக்கிய 60,000 ஸ்டார்ட் அப்கள்.. முதுகெலும்பாக உள்ள MSME.. !
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X