சென்னை: பணி ஓய்வு பெறும்போதோ அல்லது பணியில் இருந்து பாதியில் நிற்கும் போதோ, பி.எஃப் தொகையை சிக்கல் இல்லாமல் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
Public Provident Fund (PPF) என்பதைத் தமிழில் பொது சேமநல நிதியம் என்று அழைப்பார்கள். சுருக்கமாக பி.எஃப் என்று பலரால் அறியப்படும் இந்தக் கணக்கில் நாம் போட்டு வைக்கும் தொகையை (சேமிப்பு வங்கியைப் போன்று) நினைத்தபோதெல்லாம் எடுத்துக்கொள்ள முடியாது.
எனினும் அவசர அவசிய சூழலில் பணத்தை எடுக்க முடியும். ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்து நீக்கப்பட்டாலோ அல்லது விலகி இரண்டு மாதம் வரை வேலை இல்லாமல் இருந்தாலோ பணத்தை எடுக்க முடியும்.
சென்செக்ஸ் கிட்டதட்ட 100 புள்ளிகள் வீழ்ச்சி..! நிஃப்டி 11,900 கீழ் சரிவு..!

கடைசி காலத்தில் கைகொடுக்கும்
இதேபோல் மருத்துவ செலவுக்கு, வீடு கட்ட, உள்ளிட்டவற்றுக்கு குறிப்பிட்ட தொகையை எடுக்க முடியும். ஆனால் பணத்தை எடுக்காமல் வைத்திருந்து ஓய்வு பெறும் வயதில் எடுப்பதே மிகவும் சிறந்த முடிவாகும். கடைசி காலத்தில் அந்த பணம் பெரிய அளவில் கைகொடுக்கும் என்பதால் பணத்தை பி.எஃப் இல் இருந்து கைவைக்காமல் இருப்பதே மிகவும் சிறந்தது.

பென்சனுக்கு உதவும்
பிஃஎப் கணக்கில் எக்ஸ்ட்ரா பிஎஃப் என்று அழைக்கப்படும் கூடுதல் தொகையை நீங்கள் போட்டுவைத்தால் பின்னாளில் அது உங்களுக்கு பெரிய அளவில் கைகொடுக்கும். நல்ல தொகை பென்சன் கிடைக்க இந்த கூடுதல் பிஃஎப் உங்களுக்கு உதவும்.

யுஏஎன் பெயர்
சரி விஷயத்துக்கு வருவோம். பணி ஓய்வு பெறும்போதோ அல்லது பணியில் இருந்து பாதியில் நிற்கும் போதோ, பி.எஃப் தொகையை சிக்கல் இல்லாமல் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம். மிகமுக்கியமான கவனிக்க வேண்டியது. உங்கள் யு.ஏ,என் உடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும். ஆதார் எண்ணில் உள்ள பெயரும், உங்கள் யு.ஏ,என் கணக்கில் உள்ள பெயரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இதேபோல் பான் எண்ணிலும் ஒரே மாதிரி பெயர் இருக்க வேண்டும். இதேபோல் பிறந்த தேதியும், உங்கள் தந்தையின் பெயரும் ஒரே மாதிரி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் எடுக்கும் போது சிக்கலாகிவிடும்.

ஆதாரில் இணையுங்கள்
எப்படி இருக்க வேண்டும். சிக்கல் இல்லாமல் பணத்தை ஓய்வு காலத்தில் எடுக்க உங்கள் யு.ஏ.என் (UAN)-ஐ ஆதாரில் இணைக்கப்பட்ட தொலைப்பேசி எண்ணைக் கொண்டு ஆக்டிவேட் (Activate) செய்ய வேண்டும். பிறகு ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கை யு.ஏ.என் உடன் இணைக்க வேண்டும்.

சிக்கல் இல்லாமல் பெற
பிறந்த தேதி, பணியில் சேர்ந்த மற்றும் விடுபட்ட தேதி, தந்தை பெயர், கணவன் / மனைவி பெயர் போன்றவற்றை பி.எஃப் உறுப்பினர் இணையதளத்தில் (member portal) சரிபார்த்து வைத்திருக்க வேண்டும். அப்படி செய்தால் ஓய்வு பெறும்போது சிக்கல் இல்லாமல் பி.எஃப் தொகையைப் பெறமுடியும்.