கொரோனா வைரஸால் ஒலிம்பிக் தள்ளிப் போனால் என்ன ஆகும்..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகின் மிகப் பெரிய விளையாட்டுத் திருவிழாக்களில் ஒன்று ஒலிம்பிக்.

இந்த 2020-ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் நாட்டில் நடக்க இருப்பதை நாம் அறிவோம்.

ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுக்க பரவிக் கொண்டு இருப்பதால் ஒலிம்பிக் போட்டி கூட தடை பட வாய்ப்பு இருப்பதாகச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

 கொரோனா வைரஸால் ஒலிம்பிக் தள்ளிப் போனால் என்ன ஆகும்..?

உறுப்பினர் கருத்து

"ஜப்பானில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளை, தள்ளிப் போடலாமா? என்ன செய்யலாம் என்பதை தீர்மானிக்க இன்னும் 3 மாத காலம் இருக்கிறது" என சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலின் நீண்ட கால உறுப்பினராக இருக்கும் டிக் பவுண்ட் (Dick Pound) சொல்லி அனைத்து விளையாட்டுத் துறை ரசிகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறார்.

கை விரிப்பு

மேலும், இந்த ஜப்பான் 2020 ஒலிம்பிக் போட்டியை நடத்துவது, தங்கள் கையில் எதுவும் இல்லை. எல்லாம் கொரோனா வைரஸ் கையில் தான் இருக்கிறது எனச் சொல்லி இருக்கிறார்கள். இதை மறுக்கவும் முடியவில்லை. இந்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி சொன்ன படி ஒலிம்பிக் போட்டி தொடங்குமா? என்பதே தற்போது சந்தேகத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

 கொரோனா வைரஸால் ஒலிம்பிக் தள்ளிப் போனால் என்ன ஆகும்..?

போட்டிகள் ரத்து

கடந்த 1896-ம் ஆண்டில் இருந்து மாடர்ன் ஒலிம்ப்க் போட்டிகள் நடந்து கொண்டு இருக்கின்றன. 1916, 1940, 1944 என மிகச் சில ஆண்டுகள் மட்டுமே ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. மத்த படி உலகில் என்ன பிரச்சனை வந்தாலும் ஒலிம்பிக் போட்டிகள் தன் போக்கில் நடந்துகொண்டு தான் இருந்தன.

ஒத்திவைப்பு

ஒருவேளை இந்த கொரோனா வைரஸ் பாதிப்பால், ஒலிம்பிக் போட்டிகளை ஒத்தி வைத்தால் என்ன? என்று கேட்கிறீர்களா. ஜப்பான் நாடு, அதிகாரபூர்வமாக 12.6 பில்லியன் டாலர் பணத்தை செலவழித்து, இந்த போட்டிக்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. ஜப்பானின் தேசிய ஆடிட் கமிட்டி குழுவோ, ஜப்பானில் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டிகளுக்காக, மேலே சொன்ன தொகையை விட சுமாராக இரண்டு மடங்கு அதிகம் செலவழித்துக் கொண்டு இருக்கிறார்களாம்.

 கொரோனா வைரஸால் ஒலிம்பிக் தள்ளிப் போனால் என்ன ஆகும்..?

தொய்வு

இந்த நேரத்தில் போட்டிகளை ஒத்தி வைத்தால், மீண்டும் கூடுதல் செலவழித்து போட்டி ஏற்பாடுகளைச் செய்ய வேண்டி இருக்கும். அதோடு மற்ற சர்வதேச போட்டிகளுக்கு தகுந்தாற் போல ஒலிம்பிக் தேதிகளையும் திட்டமிட வேண்டி இருக்குமாம். இதை ஒரு சாதாரண சூழலாக (a force majeure) என்று சொல்கிறார் டிக் பாண்ட்.

எமர்ஜென்சி ஃபண்ட்

பொதுவாக ஒலிம்பிக் போட்டி மூலம் வரும் வருவாயில் ஒரு பெரிய பகுதி வருவாயை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி எடுத்துக் கொள்ளும். ஐ ஓ சிக்கு வரும் வருவாயில் ஒரு பெரிய தொகையை மற்ற சர்வதேச விளையாட்டு அமைப்புகளுக்கு கொடுப்பார்கள். எனவே தற்போது சுமார் 1 பில்லியன் டாலருக்கு ஒரு எமர்ஜென்சி ஃபண்டை திரட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.

 கொரோனா வைரஸால் ஒலிம்பிக் தள்ளிப் போனால் என்ன ஆகும்..?

இன்சூரன்ஸ்

ஒலிம்பிக் போட்டிகளை ஒளிபரப்ப இருப்பவர்கள், தங்களுக்கு வியாபாரம் ஆக வில்லை என்றாலும் நஷ்டம் வராமல் இருக்க இன்சூரன்ஸ் செய்து இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறதாம். எனவே இவர்களுக்கு ஓரளவுக்காவது ஏற்பட இருக்கும் நஷ்டத்தை சமாளித்து விடலாம் என்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.

ஒலிம்பிக் கமிட்டிக்கு நஷ்டம்

ஒருவேளை போட்டிகள் ரத்து செய்யப்பட்டால், ஐ ஓ சிக்கு ஒரு பெரிய நஷ்டம் ஏற்படும். ஒலிம்பிக் கமிட்டிக்கு சுமார் 73% வருவாய் ஒலிம்பிக் போட்டிகள் ஒளிபரப்பில் இருந்து தான் கிடைக்கிறது. எனவே போட்டி ரத்தாகாமல் நல்ல படியாக நடந்தால் சரி. நடக்கும் என நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

What will happen if Tokyo Olympic postponed

The International Olympic committee said that conducting Tokyo Olympics is largely out of the IOC's hands, depending on the virus spread.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X