வாட்ஸ்அப் தகவல் திருட்டு.. மக்களே உஷார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இதுவரையில் உலகில் யாரும் கேள்விப்பட்டிராத வகையில் மிகப்பெரிய அளவிலான தகவல் திருட்டு நடந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அதுவும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தினமும் பயன்படுத்தும் முக்கியச் செயலியாக இருக்கும் வாட்ஸ்அப் தரவுகள் திருடப்பட்டு உள்ளதாகவும், அது விற்பனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் வாட்ஸ்அப் பயன்படுத்தும் இளைஞர்களே, தாத்தா, பாட்டிகளே உஷாரா இருங்க. இந்தத் தகவல் திருட்டு மூலம் சாமானிய மக்களுக்கு என்ன பாதிப்பு..?

வாட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்க.. உஷார்..! வாட்ஸ்அப் பயன்படுத்துபவரா நீங்க.. உஷார்..!

வாட்ஸ்அப்

வாட்ஸ்அப்

உலகில் மிகப்பெரிய தகவல் திருட்டில் கிட்டத்தட்ட 500 மில்லியன் அதாவது 50 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தொலைபேசி எண்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. Cybernews இன் அறிக்கையின்படி, ஒரு நடிகர் ஹேக்கிங் கம்யூனிட்டி ஃபோரம்-ல் ஒரு விளம்பரத்தை வெளியிட்டு உள்ளார்.

 2022 டேட்டாபேஸ்

2022 டேட்டாபேஸ்

இந்த விளம்பரத்தில் 2022 டேட்டாபேஸ் அடிப்படையிலான சுமார் 48.7 கோடி வாட்ஸ்அப் பயனர் மொபைல் எண்களை விற்பனை செய்வதாகக் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த டேட்டாபேஸ்-ல் அமெரிக்கா, இங்கிலாந்து, எகிப்து, இத்தாலி, சவுதி அரேபியா மற்றும் இந்தியா உட்பட 84 நாடுகளைச் சேர்ந்த வாட்ஸ்அப் பயனர்களின் மொபைல் எண்கள் உள்ளன.

ஃபிஷிங் தாக்குதல்

ஃபிஷிங் தாக்குதல்

இந்தத் தகவல்களைப் பெரும்பாலும் ஃபிஷிங் தாக்குதல்களைச் செய்பவர்கள் பயன்படுத்துவார்கள், என்பதால் வாட்ஸ்அப் பயனர்கள் தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள், செய்திகளில் வரும் இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம், இதேபோல் முன்பின் தெரியாத நம்பர்களில் இருந்து வரும் மெசேஜ்களை அணுகக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது.

32 மில்லியன் அமெரிக்கப் பயனர்

32 மில்லியன் அமெரிக்கப் பயனர்

உலகில் மிகப்பெரிய தகவல் திருட்டில் கிட்டத்தட்ட 50 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தொலைப்பேசி எண்கள் கொண்ட தரவுத் தொகுப்பில் 32 மில்லியன் அமெரிக்கப் பயனர் வாட்ஸ்அப் எண்கள் இருப்பதாக இந்த விளம்பரத்தில் பதிவிடப்பட்டு உள்ளது.

பிற முக்கிய நாடுகள்

பிற முக்கிய நாடுகள்

இதேபோல் எகிப்தில் 45 மில்லியன், இத்தாலியில் 35 மில்லியன், சவுதி அரேபியாவில் 29 மில்லியன், பிரான்சில் 20 மில்லியன் மற்றும் துருக்கியில் 20 மில்லியன் வாட்ஸ்அப் எண்கள் கொண்டு உள்ளது. இதோடு 10 மில்லியன் ரஷ்யர்கள் மற்றும் 11 மில்லியனுக்கும் அதிகமான பிரிட்டன் குடிமக்களின் தொலைப்பேசி எண்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

விலை

விலை

இந்தச் சர்ச்சைக்குறிய நடிகரின் பதிவில் அமெரிக்க 32 மில்லியன் மக்களின் தரவுத்தொகுப்பை 7,000 டாலருக்கு (சுமார் ரூ.5,71,690) விற்பனை செய்வதாகத் தெரிவித்துள்ளார். இதேபோல் பிரிட்டன் மற்றும் ஜெர்மனி தரவுத்தொகுப்புகளைத் தத்தம் 2,500 டாலர் (தோராயமாக ₹2,04,175) மற்றும் 2,000 டாலருக்கு (தோராயமாக ₹1,63,340) விற்பனை செய்ய உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனம்

மெட்டா நிறுவனத்தில் இருக்கும் செயலிகளின் தரவுகள் கசிவது இது முதல் முறையல்ல, கடந்த ஆண்டு 500 மில்லியன் பேஸ்புக் பயணர்களின் தரவுகள் இலவசமாகப் பகிரப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்தப் பேஸ்புக் தரவுகள் வெளியானபோது பேஸ்புக் கணக்கின் போன் நம்பர் உட்படப் பல தரவுகள் வெளியிடப்பட்டது.

பொய்..?!

பொய்..?!

இதே வேளையில் 50 கோடி வாட்ஸ்அப் பயனர்களின் தொலைப்பேசி எண்கள் ஆன்லைனில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக வெளி வந்துள்ள செய்தி பொய்யாகவும் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது எனக் கூறப்படுகிறது. முக்கியமாக மெட்டா இந்தச் செய்திக்கு ரியாக்ட் செய்யாமல் உள்ளது கூடுதல் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WhatsApp data breach: India, USA, UK with 84 countries 500 million users’ phone numbers on sale

WhatsApp data breach: India, USA, UK with 84 countries 500 million users’ phone numbers on sale
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X