உலகின் முன்னணி சமூக வலைதளமான வாட்ஸ் அப் நேற்று திடீரென ஒரு மணி நேரத்திற்கும் மேலாக முடங்கியது
இதனை அடுத்து வாட்ஸ் அப் மூலம் தொழில் செய்பவர்கள், தகவல் பரிமாற்றம் செய்பவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்
இந்த நிலையில் இந்தியாவில் சிறு மற்றும் குறு தொழில் அதிபர்கள் ஒரு மணி நேரம் வாட்ஸ்அப் முடங்கியதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து தெரிவித்துள்ளனர்.
வாட்ஸ் அப் முடக்கம்
நேற்று மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் திடீரென ஒரு மணி நேரம் முடங்கியது என்பதும் இதன் காரணமாக சிறு வணிகங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக வாட்ஸ் அப் ஒரு மணி நேரம் மட்டுமே முடங்கியது என்றும், தொழில்நுட்ப கோளாறை உடனே கண்டுபிடித்து சரி செய்யப்பட்டது என்றும் நிறுவனம் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
பாதிப்பு
இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியை நம்பி பல சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும் அந்த ஒரு மணி நேர வாட்ஸ்அப் முடக்கம் பல்வேறு தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
பாதிப்பு
இந்த நிலையில் வாட்ஸ்அப் செயலியை நம்பி பல சிறு மற்றும் குறு தொழிற்சாலைகள் இயங்கி வருவதாகவும் அந்த ஒரு மணி நேர வாட்ஸ்அப் முடக்கம் பல்வேறு தொழிலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
பேக்கரி வாடிக்கையாளர்கள்
குறிப்பாக கொல்கத்தாவை சேர்ந்த பிரபல பேக்கரி வைத்திருக்கும் பூஜ்கர் என்பவர் தங்களுடைய வாடிக்கையாளர்களை வாட்ஸ்அப் மூலம் மட்டுமே ஆர்டர் கொடுத்து வருவதாகவும் ஒரு மணி நேரம் வாட்ஸ்அப் முடங்கியதால் தங்களுக்கு எந்த விதமான ஆர்டர்களும் வரவில்லை என்றும் அதனால் தங்களுடைய வருமானம் குறைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இன்சூரன்ஸ் நிறுவனம்
மேக்ஸ் லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் வாட்ஸ் அப் முடக்கம் குறித்து கூறியபோது, வாட்ஸ்அப் செயலிழப்பு காரணமாக எங்களது அன்றாட பணி தாமதம் ஆகி அடுத்த நாளுக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்பு கொள்ள முடியாத நிலை
மேலும் சில முக்கியமான பாலிசி கவரேஜ் குறித்து நாங்கள் வாடிக்கையாளரிடம் வாட்ஸ்அப் மூலம்தான் தகவல் பரிமாற்றம் செய்வோம் என்றும் அந்த தகவல் தொடர்புகள் அனைத்தும் வாட்ஸ்அப் முடங்கியதால் நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதேபோல் வாட்ஸ்அப் மெசேஜ் சேவையை நம்பியிருந்த பலர் தங்களுடைய வாடிக்கையாளர்களுடன் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
450 மில்லியன் பயனர்கள்
இந்தியாவில் 450 மில்லியனுக்கும் அதிகமான வாட்ஸ்அப் பயனாளர்கள் இருக்கும் நிலையில் அதில் பெரும்பாலானோர் வணிக நோக்கத்திற்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வாட்ஸ்அப் சேவை முடங்கியதால் தொழில் துறையில் பாதிப்பு ஏற்பட்டது என்றும் பலர் கூறி வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் ஒரு மணி நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றும் சிலர் கூறி வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications