Steve Jobs-ஐ பில்லியனராக்கிய நிறுவனம் எது தெரியுமா..? சத்தியமா ஆப்பிள் இல்லை..!!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டிஜிட்டல் உலகின் ஐன்ஸ்டீன் எனப் பலராலும் போற்றப்படுபவர் ஸ்டீவ் ஜாப்ஸ், இவருடைய செயல்திறன், திட்டம், எண்ணம், நோக்கம் அனைத்தும் எதிர்காலத்திற்கான ஒன்றாக இருந்தது.

யாரும் யோசிக்காததையும், யாரும் முயற்சி செய்யாததையும் செய்து காட்டுபவர் ஸ்டீவ் ஜாப்ஸ். உதாரணமாக கம்ப்யூட்டர் எல்லாம் பெரிய பெரிய வர்த்தக நிறுவனங்களுக்குத் தான் எனக் கூறப்பட்ட நிலையில் மக்கின்டாஷ் கம்ப்யூட்டரை அறிமுகம் செய்தது மட்டும் அல்லாமல் முதல் முறையாகக் கம்ப்யூட்டர் உடன் Mouse அறிமுகம் செய்தார்.

இதோடு நிற்காமல் ஐபாட், ஐபோன், ஐ மியூசிக் எனப் பல விஷயங்களை முதன் முதலாக அறிமுகம் செய்தவர் ஸ்டீவ் ஜாப்ஸ். ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனரான ஸ்டீவ் ஜாப்ஸ் முதன் முதலில் பில்லியனராக்கியது ஆப்பிள் இல்லை என்றால் உங்களால் நம்ப முடியுமா..?

75 டிஜிட்டல் வங்கியியல் கிளை திறந்து வைத்த மோடி.. ஜம்மு காஷ்மீர் வங்கி உட்பட..! 75 டிஜிட்டல் வங்கியியல் கிளை திறந்து வைத்த மோடி.. ஜம்மு காஷ்மீர் வங்கி உட்பட..!

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ்

ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்தில் அவர் துரத்தியடிக்கப்பட்ட கதை எல்லோருக்கும் தெரியும். அப்படி ஆப்பிள் நிறுவனத்தை விட்டு வெளியேறிய ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள்-க்குப் போட்டியாக இரண்டு நிறுவனத்தை உருவாக்கினார். அதில் ஒன்று பிக்சார், மற்றொன்று NEXT என்னும் கம்ப்யூட்டர் நிறுவனம்.

Pixar Animation நிறுவனம்

Pixar Animation நிறுவனம்

1986 ஆம் ஆண்டி ஸ்டீவ் ஜாப்ஸ் லூகாஸ்பிலிம் லிமிடெட் என்னும் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பிரிவை மட்டும் தனியாக வாங்கி Pixar Animation Studios என்ற பெயரில் தனியொரு நிறுவனத்தை உருவாக்கினார்.

அனிமேஷன் துறை
 

அனிமேஷன் துறை

ஸ்டீவ் ஜாப்ஸ் தலைமையிலான Pixar நிறுவனம் அனிமேஷன் துறையைத் தலைகீழாகப் புரட்டிப்போட்டது என்றால் மிகையில்லை, அனிமேஷன் கிராபிக்ஸ் குவாலிட்டியை இதுவரை யாரும் பார்த்திடாத வகையில் இருந்து. இன்றளவும் பிக்சார் நிறுவனத்தின் திரைப்படங்களுக்குத் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

லாரன்ஸ் லெவி

லாரன்ஸ் லெவி

90களில் Pixar நிறுவனத்தின் முதல் பெரிய படமான Toy Story-ஐ உருவாக்க தடுமாறி வந்த நிலையில் ஸ்டீவ் ஜாப்ஸ், லாரன்ஸ் லெவி என்பவரை தலைமை நிதியியல் அதிகாரியாக நியமித்தார். இவர் வர்த்தகத்திலும், செயல்முறையிலும் பல மாற்றங்களைச் செய்து வெற்றி பாதையைக் காட்டினார்.

Pixar ஐபிஓ - பில்லியனர்

Pixar ஐபிஓ - பில்லியனர்

இந்த நிலையில் தான் Toy Story படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து pixar நிறுவனத்தை 1995 ஆம் ஆண்டு ஐபிஓ வெளியிட முடிவு செய்தார் ஸ்டீவ் ஜாப்ஸ், பட்டியலிடப்பட்ட முதல் நாளிலேயே பிக்சார் நிறுவன பங்குகள் பெரிய அளவிலான முதலீட்டை பெற்று ஸ்டீவ் ஜாப்ஸ் முதல் முறையாகப் பில்லியனர் ஆனார்.

ஆப்பிள் நிறுவனம்

ஆப்பிள் நிறுவனம்

இதேவேளையில் ஆப்பிள் நிறுவனம் பெரும் தடுமாற்றம் அடையவே ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய NEXT நிறுவனத்தை ஆப்பிள் நிறுவனம் வாங்குவதாகவும், தான் மீண்டும் ஆப்பிள் நிறுவனத்தின் சிஇஓ-வாகவும் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தது.

முன்னுதாரணமாக

முன்னுதாரணமாக

1997 ஆம் ஆண்டு ஆப்பிள் சிஇஓ-வாக மீண்டும் ஸ்டீல் ஜாப்ஸ் பதவியேற்றார், 2006ல் பிக்சார் நிறுவனத்தை மொத்தமாக வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது, 2011-ல் ஸ்டீவ் ஜாப்ஸ் மரணம் அடைந்தார். இன்று வரையில் பல கோடி டெக் வல்லுனர்களுக்கும், தலைவர்களுக்கும் ஸ்டீவ் ஜாப்ஸ் முன்னுதாரணமாக உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

When Steve Jobs became Billionaire For The First Time; But apple not make Him

When Steve Jobs became Billionaire For The First Time; But apple not make Him
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X