அனில் அம்பானி-யின் மூத்த மருமகள்.. யார் இந்த கிரிஷா ஷா..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பிரபலமான தொழிலதிபராக விளங்கும் அனில் அம்பானியின் பல தோல்விகள் மற்றும் சோகத்திற்கும் மத்தியில், அவருடைய மூத்த மகனான அன்மோல் அம்பானி-க்குத் திருமணம் நடக்க உள்ளது.

 

பணக்கார வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும் அன்மோல் அம்பானி தற்போது பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகிறார். இந்நிலையில் கிரிஷா ஷாவு உடனான திருமணம் அன்மோல் அம்பானி வாழ்க்கையில் முக்கிய நிகழ்வாக இருக்கிறது.

இமயமலை சாமியார் ஒரு முன்னாள் நிதியமைச்சக அதிகாரி.. என்எஸ்ஈ சித்ரா வழக்கில் புதிய திருப்பம்..!

அன்மோல் அம்பானி திருமணம்

அன்மோல் அம்பானி திருமணம்

பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைலவர்கள் சமூக ஊடகங்களில் அன்மோல் அம்பானி மற்றும் கிரிஷா ஷாவு-வின் திருமணத்திற்கு முன்பு நடக்கும் பல்வேறு நிகழ்வுகளின் புகைப்படங்கள் பதிவிட்டு வந்த நிலையில் வைரலாகி வருகிறது.

அன்மோல் அம்பானி - கிரிஷா ஷா

அன்மோல் அம்பானி - கிரிஷா ஷா

ஞாயிற்றுக்கிழமை அன்மோல் அம்பானி மற்றும் கிரிஷா ஷா-வின் திருமணம் மிகவும் சிறப்பாகவும், பிரம்மாண்டமாகவும் நடந்தது. இந்தத் திருமணத்திற்கு ஜெயா பச்சன், அமிதாப் பச்சன், சுப்ரியா சுலே எனப் பரபலங்கள் கலந்து கொண்டனர்.

டினா மற்றும் அனில் அம்பானி
 

டினா மற்றும் அனில் அம்பானி

டினா மற்றும் அனில் அம்பானியின் மகனான அன்மோல் அம்பானி கிரிஷா ஷா-வை இரு குடும்பத்தினர் நட்பு வட்டங்கள் மூலம் சந்தித்துள்ளனர். இது முழுமையாக காதல் திருமணம் இல்லை என்றாலும், திருமணத்திற்கு முன்பு நீண்ட காலம் அன்மோல் அம்பானி கிரிஷா ஷா-வும் பழகியுள்ளனர். இந்தப் பழக்கம் காதலாக மாறி திருமணத்தில் முடிந்துள்ளது.

கிரிஷா ஷா

கிரிஷா ஷா

அன்மோல் அம்பானியின் மனைவியான கிரிஷா ஷா ஒரு சமூகச் சேவகர் மற்றும் தொழிலதிபர் ஆவார். அவர் டிஸ்கோ (Dysco) என்ற சமுகவலைதள நிறுவனத்தை உருவாக்கி நிர்வாகம் செய்து வருகிறார்.

Dysco வலைத்தளம்

Dysco வலைத்தளம்

Dysco வலைத்தளத்தின் மூலம் மக்களை இணைக்க, இணைந்து உருவாக்க, ஒன்றாக இணைந்து சேவை அல்லது வர்த்தகத்தை உருவாக்க மற்றும் ஒன்றாக இணைந்து வேலை செய்ய உதவும் தளமாகும்.

அக்சென்ச்சர் நிறுவனம்

அக்சென்ச்சர் நிறுவனம்

இந்த Dysco நிறுவனத்தை உருவாக்குவதற்கு முன்பு கிரிஷா ஷா இங்கிலாந்தில் அக்சென்ச்சர் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்தார், இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்டார்ட்அப் மற்றும் சமுகவலைதளத் தாக்கம் கிரிஷா ஷா-வை தொத்திக்கொண்ட காரணத்தால் வேலையை விடுத்து இந்தியாவுக்குத் திரும்பி டிஸ்கோவைத் தொடங்கினார்.

கிரிஷா ஷா படிப்பு

கிரிஷா ஷா படிப்பு

கிரிஷா ஷா அரசியல் பொருளாதாரத்தில் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர் மற்றும் லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸில் உயர் படிப்பைத் தொடர்ந்தார், மேலும் சமூகக் கொள்கை மற்றும் மேம்பாட்டில் பட்டம் பெற்றவர் ஆவார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is khrisha Shah? Fiance of Anmol Ambani, Anil Ambani daughter in law

Who is khrisha Shah? Fiance of Anmol Ambani, Anil Ambani daughter in law அனில் அம்பானி-யின் மூத்த மருமகள்.. யார் இந்த கிரிஷா ஷா..!
Story first published: Monday, February 21, 2022, 14:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X