கிங் ஆப் கிரிப்டோவா.. யார் இந்த நிஷாத் சிங்.. இவர் என்ன செய்தார்?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனாவின் வருகைக்கு பிறகு கிரிப்டோகரன்சிகள் என்பது அசாதாரண வளர்ச்சியினை பெற்றன. அவற்றின் மதிப்பு பல மடங்கு அதிகரித்தது. அந்த சமயத்தில் கிரிப்டோடோவில் முதலீடு செய்த லட்சாதிபதிகள் கோடீஸ்வரர்கள். ஆனால் இன்று நிலைமை அப்படியிலை. நிலைமையே தலை கீழாய் மாறியுள்ளது.

கிரிப்டோகரன்சிகளில் எவ்வளவு விரைவில் பணக்காரர் ஆகினார்களோ? அவர்கள் இன்று அதல பாதளத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு சிறந்த உதாரணம் தான் சாம் பேங்க்மேன் ப்ரைட் எனலாம்.

சாங் பேங்க்மேன் மட்டும் அல்ல, உலகம் முழுக்க ஏராளமானவர்கள் கிரிப்டோகரன்சிகள் பல லட்சங்களை இழந்துள்ளனர். எனினும் எஃப்டிஎக்ஸ் கிரிப்டோகளின் முதலீடு செய்ததன் மூலம் அல்ல, இதில் மோசடி செய்ததன் மூலம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தோனேசியா ஜி20 கூட்டம்: முகமது பின் சல்மான் இந்திய பயணம் ரத்து..! இந்தோனேசியா ஜி20 கூட்டம்: முகமது பின் சல்மான் இந்திய பயணம் ரத்து..!

சாம் பேங்க்மேன் ப்ரைட்

சாம் பேங்க்மேன் ப்ரைட்

அமெரிக்காவினை சேர்ந்த சாம் பேங்க்மேன் ப்ரைட் தனது 30 வயதில், 2019ம் ஆண்டு எஃப்டிஎக்ஸ் என்ற கிரிப்டோகரன்சி நிறுவனத்தினை தொடங்கினார். இந்த நிறுவனம் 2 ஆண்டுகளில் அசுர வளர்ச்சியினை எட்டியது. அந்த சமயத்தில் இவரின் சொத்து மதிப்பு 2 லட்சம் கோடிக்கு மேல். உலக பில்லியனர் பட்டியலில் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது சொத்தில் பெரும்பகுதியினை கிரிப்டோகரன்சியிலேயே முதலீடு செய்திருந்தார். இதனால் பலத்த இழப்பினை கண்ட நிலையில்ம் கடந்த வாரம் தனது நிறுவனம் திவாலாகி விட்டதாகவும் அறிவித்தார்.

யார் இந்த நிஷாத் சிங்?

யார் இந்த நிஷாத் சிங்?

அதெல்லாம் சரி, இவருக்கும் நிஷாத் சிங்கிற்கும் என்ன சம்பந்தம்? யார் இந்த நிஷாத், FTX நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாகி சாம் பேங்க்மேன்-ஃப்ரைட் (Sam Bankman-Fried) ஆவார். இதே அதன் இணை நிறுவனர் கேரி வாங் (Gary Wang), இந்த நிறுவனத்தின் பொறியியல் பிரிவு இயக்குநர் தான் நிஷாத் சிங் (Nishad Singh) மூவரும் பஹாமாஸில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பேஸ்புக்கிலும் பணி

பேஸ்புக்கிலும் பணி

நிஷாத் சிங் டிசம்பர் 2017ல் இந்த அல்மேடா ரிசர்ச் மையத்தில் இணைந்தார். இதற்கு முன்பு பேஸ்புக்கில் சாப்ட்வேர் இன்ஜினியர் ஆக குறுகிய காலம் பணியாற்றியவர். அங்கு மெஷின் லேர்னிங் பிரிவில் பணியாற்றிவர் என்பதை லிங்கிட் இன் பக்கத்தின் மூலம் அறிய முடிகிறது.

FTX கிரிப்டோகரன்சி

FTX கிரிப்டோகரன்சி

அலமேடா ரிசர்ச்சில் 17 மாதங்கள் பொறியியல் இயக்குனராக இருந்தார். அதன் பிறகே ஏப்ரல் 2019ல் FTX கிரிப்டோகரன்சி எக்ஸ்சேஞ்சில் பணிக்கு சேர்ந்தார். தற்போது வரையில் அங்கு அதே பதவியில் இதுவரையில் இருந்து வந்தார்.

கட்டுப்படுத்தினார்களா?

கட்டுப்படுத்தினார்களா?

நிஷாத் சிங் 30 வயதான எஃப் டி எக்ஸ் நிறுவனர் சாம் பேங்க்மேன் ஃப்ரைடின் உள்வட்டத்தில் இருந்தார். இதன் இணை நிறுவனர் கேரி வாங் , இந்த நிறுவனத்தின் பொறியியல் பிரிவு இயக்குநர் தான் நிஷாத் சிங் மற்றும் சாம் ஆகியோர் குறியீடு, பரிமாற்றத்தின் பொருந்தக்கூடிய இயந்திரம் மற்றும் நிதி பரிமாற்றத்தினை கட்டுபடுத்துகிறார்கள் என இதனை நன்கு அறிந்தவர்கள் கூறினார்கள்.

ரகசியமாக நிதி மாற்றமா?

ரகசியமாக நிதி மாற்றமா?

FTX-ன் தலைமை செயல் அதிகாரியான சாம் பேங்க்மேன் ப்ரைட், FTX-ல் இருந்து அலமேடாவிற்கு 10 பில்லியன் டாலர் வாடிக்கையாளர் நிதியை ரகசியமாக மாற்றியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. வாடிக்கையாளர்களின் பணம் அலமேடாவுக்கு மாற்றப்படுவது நிறுவனத்திலுள்ள மூத்த அதிகாரிகளாக நிஷாத் சிங் மற்றும் கேரி வாங்கிற்கு தெரியும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

who is nishad singh? King of Crypto currency?

Nishad Singh, who belongs to Indian origin, has been arrested for alleged involvement in financial frauds. This is one of the financial scams that has made the world look back today
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X