இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னர்- ரபி சங்கர்.. யார் இவர்..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், தொடர்ந்து சரிவில் இருந்து காப்பாற்ற அனைத்து வழிகளிலும் போராடி வரும் இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக ஒரு துணை கவர்னரை தேர்வு செய்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தேர்வை நாடாளுமன்றத்தின் நியமன குழு ஆய்வு செய்து ஒப்புதல் அளித்துள்ளது.

 

இதன் மூலம் இந்திய ரிசர்வ் வங்கியின் 4வது துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளதாக ஆர்பிஐ தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது.

4வது துணை கவர்னராக ரபி சங்கர்

4வது துணை கவர்னராக ரபி சங்கர்

ரிசர்வ் வங்கியில் தற்போது துணை கவர்னராக இருக்கும் பி.பி. கனுங்கோ ஏப்ரல் 2ஆம் தேதி ஓய்வுபெற்ற நிலையில், இப்பதவியில் ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார். இதன் மூலம் மகேஷ் குமார் ஜெயின், மைக்கேல் பத்ரா, ரஜேஷ்வர் ராவ் ஆகியோரை தொடர்ந்து 4வது துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

பின்டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி

பின்டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி

பொருளாதாரத்தில் M.Phil பட்டம் பெற்ற ரபி சங்கர் ரிசர்வ் வங்கியில் பல முக்கியப் பதவிகளிலும், பணிகளையும் செய்திருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் பின்டெக் இன்பர்மேஷன் டெக்னாலஜி மற்றும் ரிஸ்க் மேனேஜ்மென்ட் பிரிவுகளை நிர்வாகம் செய்ய உள்ளார்.

IMF குழு
 

IMF குழு

ரிசர்வ் வங்கியின் பல முக்கியக் குழுக்களில் இடம்பெற்று உள்ள ரபி சங்கர் 2005-11 வரையிலான காலகட்டத்தில் பங்களாதேஷ் ரிசர்வ் வங்கியின் பாண்ட் மார்கெட் மற்றும் டெபிட் மேனேஜ்மென்ட் பிராசஸ் ஆகியவற்றை உருவாக்க IMF நியமித்த குழுவில் ரபி சங்கர் மிக முக்கியமானவர். இது மட்டும் அல்லாமல் 2008-2014 வரையில் மத்திய நிதியமைச்சகத்தில் பணியாற்றியவர் இவர்.

IFTAS பிரிவின் தலைவர்

IFTAS பிரிவின் தலைவர்

இவை அனைத்தையும் தாண்டி ரிசர்வ் வங்கியின் துணை நிறுவனமான இந்தியன் பைனான்சியல் டெக்னாலஜி அண்ட் அலைய்டு சர்வீசஸ் (IFTAS) பிரிவின் தலைவராக ஜூன் 2020ல் நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய துணை கவர்னராக ரபி சங்கர் நியமிக்கப்பட்டு உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is Rabi Shankar? RBI Named him as 4th deputy governor

RBI latest update.. Who is Rabi Shankar? RBI Named him as 4th deputy governor
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X