யார் இந்த ரத்தன் டாடா.. இவர் மக்களுக்காக என்ன செய்திருக்கிறார்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் மீது யாரேனும் கற்கள் வீசினால் அதனை கொண்டு கட்டிடம் எழுப்புங்கள் என்ற வரிகளுக்கு சொந்தமானவர் ரத்தன் நாவல் டாடா. அப்படி ஒரு தன்னம்பிக்கையுடைய மிகப்பெரும் தொழில் அதிபருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை கூறுவோம்.

உலகையே ஒரு காலகட்டத்தில் இந்தியாவின் பக்கம் திரும்ப வைத்தவர் ரத்தன் டாடா. இவர் மீது வீசப்பட்ட ஒவ்வொரு கற்களும் இன்று வைரமாய், தொழிற்துறையில் ஜொலித்துக் கொண்டுள்ளது.

இந்தியாவில் தொடங்கிய தனது வியாபார குழுமத்தினை, இன்று உலகெங்கிலும் எடுத்துச் சென்றவர் ரத்தன் டாடா.

டாடாவின் வணிகம்

டாடாவின் வணிகம்

நாம் சாப்பிடும் உணவில் போடும் உப்பில் தொடங்கி, டீ, கைக்கடிகாரம், நம் வீட்டுச் சுவற்றில் உள்ள இரும்பு, டிடிஹெச், நகை, டாடா பவர், டாடா டெலிகம்யூனிகேஷன்ஸ், தாஜ் ஹோட்டல்ஸ் என ஒவ்வொன்றிலும் டாடாவின் பங்கு
உண்டு. இப்படி பல துறைகளில் வெற்றிகரமாய் கோலோச்சி வரும் ரத்தன் டாடாவின் பிறந்த தினம் இன்று.

ரத்தன் டாடாவின் பிறப்பு

ரத்தன் டாடாவின் பிறப்பு

1937ல் சூரத் நகரில் நாவல் டாடா சுனு தம்பதியருக்கு மகனாக பிறந்த ரத்தன் டாடா, தனது நிர்வாக மேல்படிப்பை ஹார்வார்டு பல்கலைக்கழக்கத்தில் படித்துள்ளார். அங்கு அவர் படிப்பை முடித்தவுடன் இன்றளவும் மிகப்பெரிய நிறுவனமாக இருக்கும் ஐபிஎம்மில் பணிக்கு சேர்ந்துள்ளார்.

வெற்றியின் ரகசியம்

வெற்றியின் ரகசியம்

எனினும் தாய் நாட்டின் மீதுள்ள பற்றின் காரணமாக இந்தியாவுக்கே திரும்பினார். இதன் பிறகு தனது குடும்ப வணிகத்தில் இறங்கினார். டாடா குழுமம் இவரின் சொந்த நிறுவனமாகவே இருந்தாலும், சிறு சிறு பொறுப்புகளில் இருந்துள்ளார். இதனால் வெற்றியின் ரகசியத்தினையும் தெரிந்து கொண்டுள்ளார்.

டாடா தலைமையில் அசுர வளர்ச்சி

டாடா தலைமையில் அசுர வளர்ச்சி

எனினும் 30 வருட அயராது கடின உழைப்பின் வெற்றிக்கு பின்னர், 1991ல் டாடா குழுமத்தின் தலைவராகவும், நிறுவனராகவும் நியமிக்கப்பட்டார். ஆனால் அதன் பிறகே டாடா குழுமம் அசுர வளர்ச்சியினைக் கண்டது. இதன் பின்னர் தான் இந்தியாவில் குறிப்பிடத்தக்க குழுமங்களில் ஒன்றாக டாடா குழுமம் உருவெடுத்தது.

பலதுறைகளில் வெற்றி

பலதுறைகளில் வெற்றி

சர்வதேச சந்தையில் தங்களது நிறுவனத்திற்கான வாய்ப்புகளை தேடிப்பிடித்து கண்டுபிடித்தார். குறிப்பாக இரும்பு, ஐடி துறை, கெமிக்கல், டீ, கார்கள் என பலவற்றிலும் வெற்றிகரமாக தனது வர்த்தகத்தினை விரிவுபடுத்தினார். இவரின் தலைமைக்கு பின்பு டாடா குழுமம் பல சாதனைகளை படைத்தது என்றே கூறலாம். பல துறைகளையும் தனது வணிகத்தில் உட்புகுத்தினார்.

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS)

டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ் (TCS)

இன்றளவிலும் இந்தியாவில் ஐடி துறையில் உள்ள முன்னணி நிறுவனங்களில் ஒன்று டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ். இது பல ஆயிரம் ஊழியர்களுக்கு வாழ்வழித்து கொண்டுள்ளது. இந்தியா மட்டும் அல்ல, பல உலக நாடுகளிலும் தனது விரிவாக்கத்தினை செய்து வருகின்றது டிசிஎஸ். ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலருக்கும் மேல் வருவாயை கண்டு வரும் ஒரு மிகப்பெரிய ஐடி நிறுவனமாகும்.

டாடா கார்

டாடா கார்

டாடா வாகன தயாரிப்பினை பொறுத்தவரையில் அதிலும் தனக்கென ஒரு தனி அந்தஸ்தினை கொண்டுள்ளது. அதிலும் சொகுசு கார் தயாரிப்புகளுடன் கூட்டு சேர்ந்து அதிலும் வெற்றிகரமாக உற்பத்தியினை செய்து வருகிறது. இன்றைய காலகட்டத்தில் ஒரு ஸ்கூட்டி வாங்க வேண்டும் என்றால் கூட, கிட்டதட்ட 1 லட்சம் ரூபாய் வேண்டும். ஆனால் இப்படியொரு காலகட்டத்தில் மொத்தமாகவே 2 லட்சத்திற்குள் ஒரு கார் வாங்கலாம் என்ற நம்பிக்கையை கொடுத்தது டாடா நானோ தான். இதனால் நடுத்தர மக்களின் கார் கனவு மிக எளிதாக நிறைவேறியது என்றே கூறலாம்.

டாடா ஸ்டீல்

டாடா ஸ்டீல்

இரும்பு துறையிலும் தனது காலடியை பதித்த டாடா, இன்று சர்வதேச அளவில் இரும்பு வணிகத்தினையும் மிகச் சிறப்பாக செய்து வருகின்றார். உலகின் சில நிறுவனங்கள் இந்தியாவினை தேடி வர, சத்தமேயில்லாமல் தனது வணிகத்தினை உலகின் பல நாடுகளுக்கும் விரிவாக்கம் செய்து வந்தார். சொல்லப்போனால் இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு இவரின் பங்கும் கணிசமாக உண்டு. இப்படி நிலையில் தான் இவருக்கு பத்மபூஷன் விருதும், பத்மவிபூஷன் விருதும் அரசு வழங்கி கெளரவித்துள்ளது.

எனக்கு பணம் பெரிதில்லை

எனக்கு பணம் பெரிதில்லை

ஒரு சமயம் டாடா சுமோ கார்கள் தங்களுக்கு வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு மிகப்பெரிய ஆர்டர் ஒன்றை டாடா நிறுவனத்திற்கு கொடுக்க, பாகிஸ்தானுக்கு ஒரு கார் கூட கொடுக்க முடியாது என நிராகரித்து விட்டாராம் டாடா. இன்றைய காலகட்டத்தில் இப்படி ஆர்டர் கிடைத்தால், எந்த நிறுவனமேனும் விட்டுக் கொடுக்குமா என தெரியவில்லை. ஆனால் அந்தளவுக்கு தாய் நாட்டின் மீது பற்று கொண்டவர் டாடா.

பல இளைஞர்களுக்கு வாழ்வு

பல இளைஞர்களுக்கு வாழ்வு

இன்றைய இளைய சமுதாயத்தினருக்கு முன்னோடியாக இருந்து வரும் ரத்தன் டாடா, தொழில் நுணுக்கங்களையும் இளைஞர்களுக்கு பயிற்றுவித்து வருகிறார். இவரின் கொடை வள்ளல் சொல்லி மாளாது. ஏழை குழந்தைகளுக்கும், ஆதரவற்ற குழந்தைகள், மாற்றுதிறனாளிகள் என பல லட்சம் பேருக்கு தனது தொண்டு நிறுவனம் மூலமாக இன்றளவிலும் பல உதவிகளை செய்து வருகின்றார். ஏன் கொரோனா நிவராண நிதியாக 1,500 கோடி ரூபாயினை வழங்கியவர் டாடா.

மாபெரும் தொழிலதிபரின் காதல் தோல்விகள்

மாபெரும் தொழிலதிபரின் காதல் தோல்விகள்

உலகளவில் ஒரு சிறந்த தொழிலதிபராக வலம் வரும் ரத்தன் டாடாவும் காதலில் விழுந்தவர் என்றால் நம்ப முடிகிறதா? இதனை அவரே மும்பையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட போது கூறியுள்ளார். தனது சொந்த வாழ்க்கையில் தோல்வியுற்ற டாடா, அதனை எண்ணி கலங்காமல், அவரது தொலை நோக்கு பார்வையால் தனது வியாபாரத்தில் கவனம் செலுத்தியுள்ளார்.

பல கஷ்டங்கள்

பல கஷ்டங்கள்

இன்று சிறந்த தொழிலதிபதிராக வலம் வரும் ரத்தன் டாடா, தனது இளம் வயதில் தனது தாய் தந்தையரின் விவாகரத்துக்கு பின்பு பல கஷ்டங்களை அனுபவித்ததாகவும் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்தது நினைவுகூறத்தக்கது. ஆக பிரச்சனைகள், கவலைகள், என அவற்றை பற்றி சிந்தித்திருந்தால் இன்று இப்படி வெற்றிகரமான மனிதராக வலம் வர முடியுமா? இன்றளவிலும் தனது பதவியில் இருந்து விலகினாலும், டாடா குழுமத்தினை வெற்றிகரமாக வழி நடத்தி செல்லும் டாடாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is Ratan Tata? What he done for Indians and Indian economy

Ratan Tata updates.. Who is Ratan Tata? What has he done for Indians and Indian economy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X