யார் இந்த ரோஷினி நாடார்.. இவருக்கும் HCL-க்கும் என்ன சம்பந்தம்..இனி இவர் தான் தலைவர்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் இணை நிறுவனம் ஷிவ் நாடார், இயக்குனர்கள் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

இதனால் தற்போது நிர்வாகம் சாரா இயக்குனராக இருந்துவரும் ரோஷினி நாடார், புதிய தலைவராக இன்று முதல் (ஜூலை 17,2020) நியக்கமிப்பட்டுள்ளார்.

ஷிவ் நாடார் அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் குழுவின் தலைவர் பதவியிலிருந்து விலகினாலும், அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும், தலைமை மூலோபாயாக அதிகாரியாகவும் தொடருவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹெச்சிஎல்லின் புதிய தலைவர்
 

ஹெச்சிஎல்லின் புதிய தலைவர்

இந்தியாவின் முன்னணி தகவல் தொழில் நுட்ப நிறுவனமாக இருந்து வரும் ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், சர்வதேச அளவில் தனது வணிகத்தினை விரிவுபடுத்தியுள்ளது. ஆக இந்த நிறுவனத்திற்கு 38 வயதான ரோஷினி நாடார் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். சரி யார் இந்த ரோஷினி நாடார். இவருக்கும் ஹெச்சிஎல்லும் என்ன சம்பந்தம், இவரை பற்றிய சில தகவல்களைக் காண்போம்.

ஷிவ் நாடாரின் ஒரே மகள்

ஷிவ் நாடாரின் ஒரே மகள்

இன்று இந்தியாவில் உள்ள பணக்கார பெண்களில் இவரும் ஒருவர். தமிழகத்தினை (திருநெல்வேலியை) சேர்ந்த ஷிவ் நாடாரின் ஒரே மகள் தான் இந்த ரோஷினி நாடார். இவருடைய கணவர் பெயர் ஷிக்தர் மல்கோத்ரா. இவருக்கு இரு குழந்தைகளும் உள்ளன. இவருக்கு வர்த்தகம் தவிர இசைக் கலைஞர், யோகா என இதில் எல்லாம் மிகுந்த ஈடுபாடு உண்டாம்.

என்ன படித்துள்ளார்?

என்ன படித்துள்ளார்?

இவர் வளர்ந்தது புது டெல்லியில் தானாம். அமெரிக்காவில் உள்ள நார்த் வெஸ்டர்ன் பல்கலைகழகத்தில் வானொலி, தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் சம்பந்தமான இளங்கலை பட்டத்தினை படித்துள்ளார். அதோடு கெல்லாக்ஸ் வணிகவியல் கல்லூரியில் நிர்வாகவியல் முதுகலைப்பட்டம் பெற்றுள்ளார். படித்த முடித்த கையோடு ஸ்கை நியூஸ் (இங்கிலாந்து), சிஎன்என் (அமெரிக்கா) போன்ற பத்திரிக்கைகளில் சில காலம் செய்தி தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்தியாவின் பணக்கார பெண்
 

இந்தியாவின் பணக்கார பெண்

சிறந்த கொடையாளரான ரோஷினி நாடார், அதிகாரம் மிக்க தொழிலதிபர்களாகவும் பல விருதுகளையும் பெற்றுள்ளார். இந்தியாவிலேயே பணக்கார பெண் ஆன ரோஷினி நாடார் ஆகும். இவரின் சொத்து மதிப்பு 31,400 கோடி ரூபாயாகும். கடந்த 2017, 2018, 2019ம் ஆண்டுகளில் தொடர்ச்சியாக போர்ப்ஸ் பத்திரிக்கையில் 100 செல்வாக்குமிக்க பட்டியலில் ரோஷினி உள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is roshini nadar? The new chairperson of HCL

Roshni Nadar is the new Chairman of HCL Technologies; the 38-year-old succeeds her father Shiv Nadar.
Story first published: Friday, July 17, 2020, 17:33 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X