யார் இந்த சஷிதர் ஜெகதீஷன்.. எதற்காக ஹெச்டிஎஃப்சி வங்கி பங்கு விலை 6% ஏற்றம்.. என்ன காரணம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: தனியார் வங்கிகளில் இன்று முன்னணியில் இருக்கும் வங்கி என்றாலே அது ஹெச்டிஎஃப்சி வங்கி தான். அதிலும் அதிக சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.

இந்த நிலையில் இந்த ஆண்டில் தனது பணி காலம் முடிவடையவிருக்கும் நிலையில், தற்போது சஷிதர் ஜெகதீஷன் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க இந்திய ரிசர்வ் வங்கி அனுமதித்துள்ளது.

இந்த வங்கி பங்கின் விலை பிஎஸ்இ-யில் 1,059.90 ரூபாயினை தொட்டுள்ளது. இந்த வங்கி பங்கின் விலை முந்தைய நாள் முடிவு விலையில் இருந்து 4% ஏற்றம் கண்டுள்ளது.

ஆதித்யா பூரிக்கு பதில் சஷிதர் ஜெகதீஷன்
 

ஆதித்யா பூரிக்கு பதில் சஷிதர் ஜெகதீஷன்

அக்டோபர் மாதத்தில் ஆதித்யா பூரியின் பணிக்காலம் முடிவடைய இருக்கும் நிலையில், தற்போது அவருக்கு பதிலாக சஷிதர் ஜெகதீஷன் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதற்கு ரிசர்வ் வங்கியும் அனுமதி கொடுத்துள்ளது. ஆதித்யா பூரி வங்கி தொடக்கத்தில் இருந்தே இவ்வங்கியுடன் இணைந்து செயலாற்றி வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சந்தை மதிப்பு

இன்றைய சந்தை மதிப்பு

ஆதித்யா பூரி சமீபத்தில் ஜூலை 21 முதல் ஜூலை 23 வரையில், 7.42 மில்லியன் பங்குகள் இருந்த நிலையில், அதன் மதிப்பு 842.87 கோடி ரூபாயாகும். தற்போது மீதம் 0.01% உள்ளதாகவும், இதன் மதிப்பு சுமாராக 43 கோடி ரூபாய் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையில் ஹெச்டிஎஃப்சி வங்கியின், இன்றைய சந்தை மதிப்பு 5.74 டிரில்லியன் ரூபாயாக உள்ளது.

யார் இந்த சஷிதர் ஜெகதீஷன்

யார் இந்த சஷிதர் ஜெகதீஷன்

சஷிதர் ஜெகதீஷன் ஹெச்டிஎஃப்சி வங்கியில் 1996ல் இருந்து பணிபுரிந்து வருகிறார். ஆதித்யா பூரிக்கு மாறாக இவர் குறைந்த சுயவிவரத்தினை வைத்துள்ளார். இவர் வங்கியின் உயர் அதிகாரிகளின் உள்வட்டத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவரினை தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்க ஆர்பிஐ ஒப்புதல் அளித்துள்ளது.

யார் இந்த பரேஷ் சுக்தங்கர்
 

யார் இந்த பரேஷ் சுக்தங்கர்

ஆகஸ்ட் 2018 வரையில், அது பரவலாகவும் நம்பப்பட்டது. இவர் வங்கியின் வலுவான வளர்ச்சியின் நீண்ட காலத்திற்கு அமைப்பதற்கு பொறுப்பாளர்களாகவும் கருதப்பட்டார். இருப்பினும் சுக்தங்கர் வங்கியில் இருந்து திடீரென வெளியேறினார். இது அடுத்தடுத்த பல கேள்விகளை எழுப்பியது.

ஜெகதீஷன் மீது நம்பிக்கை

ஜெகதீஷன் மீது நம்பிக்கை

இந்த நிலையில் 2019ல் ஹெச்டிஎஃப்சி வங்கியின் வாரியம் அவரை தலைமை நிதி அதிகாரி பதவியில் இருந்து, மாற்ற முகவராக நியமித்தது. எனினும் நிதி துறையிலும் தொடர்ந்து ஜெகதீஷன் செயல்பட்டு வந்தார். ஆக ஆதித்யா பூரிக்கு அடுத்து வங்கியினை வளர்ச்சி பாதைக்கு எடுத்து செல்வார் என்ற நம்பிக்கையும் இருந்து வருகிறது.

திறம்பட செயல்பட்டவர்

திறம்பட செயல்பட்டவர்

ஏனெனில் ஒரு மாற்ற முகவராக முக்கிய முடிவுகளை எடுப்பதில் ஜெகதீஷன் முன்னணியில் இருந்துள்ளார். மேலும் டிசம்பர் 2019ல் வங்கிகள் கடுமையான தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொண்ட போது திறம்பட வழி நடத்தினார். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் வங்கியின் மொபைல் சேவைகள் மற்றும் பல சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த நேரத்தில் இந்த வங்கியின் சம்பளம் வாங்கும் வாடிக்கையாளார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த வாரிசு

அடுத்த வாரிசு

ஆக இந்த பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருவர் ஜெகதீஷன். மற்றொருவர் கைசாத் பருச்சா ஆவார். அவர் இந்த தனியார் துறை கடன் வழங்குனரின் வங்கி வணிகத்தினை நிர்வகித்து வருகிறார். மூன்றாவது பெயர் சிட்டி கமர்ஷியல் வங்கியின் தலைவரான சுனில் கார்க்.

நிச்சயம் நல்ல தேர்வு தான்

நிச்சயம் நல்ல தேர்வு தான்

எனினும் இவ்வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் ஆதித்யா, இவ்வங்கியின் அடுத்த வாரிசு பற்றிய தெளிவான முடிவு உள்ளது என்று கூறியிருந்தார். எனினும் இடையில் இது குறித்து எந்த அறிவிப்பும் இல்லை வெளியிடப்படவில்லை.

இந்த நிலையில் தான் தற்போது சஷிதர் ஜெகதீஷன் நியமிக்கப்பட உள்ளார். ஆக இப்படி திறம்பட ஒருவர் புதிய தலைமை நிர்வாகியாக வரும் போது வங்கியின் பங்கு விலை ஏறமலா இருக்கும். நிச்சயம் ஏற்றம் காணத் தானே செய்யும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Who is sashidhar jagdishan? Why HDFC bank share surge 6%?

Sashidhar Jagdishan will be the new CEO of HDFC Bank Ltd, the RBI approved Jagdishan’s candidature from a list of three potential chief executives suggested by the board of the private lender.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X