செம அடி வாங்கும் இந்திய ரூபாய்! மேலும் சரியுமா..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தற்போது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73.96 ரூபாய்க்கு வர்த்தகமாகிக் கொண்டு இருக்கிறது.

ஆனால் இன்று காலை 74.08 ரூபாயைத் தொட்டு வர்த்தகமானது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஏன் என்றால், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அதிகபட்ச அளவே 74.48 ரூபாய் தான். ஆக இந்திய ரூபாய் மதிப்பு தன் வாழ்நாள் சரிவை நோக்கி பயணிக்கிறதா? ஏன் இப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிகிறது என்பதைப் பார்ப்போம்.

1. சந்தை சரிவு

1. சந்தை சரிவு

கடந்த 50 நாளில் சென்செக்ஸ் சுமாராக 6,400 புள்ளிகள் சரிந்து இருக்கிறது. இதனால் சந்தையை நம்பி முதலீடு செய்பவர்கள் கூட, தங்கள் பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என டாலரில் தஞ்சம் புகுந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே டாலர் வலுவடைந்து கொண்டு இருக்கிறது, மறு பக்கம் ரூபாய் மதிப்பு தேய்கிறது.

2. யெஸ் பேங்க் பிரச்சனை

2. யெஸ் பேங்க் பிரச்சனை

யெஸ் பேங்கின் நிர்வாகத்தை ஆர்பிஐ எடுத்துக் கொண்டதை நாம் அறிவோம். குறிப்பாக, யெஸ் பேங்க் வாடிக்கையாளர்கள் தங்கள் யெஸ் பேங்க் வங்கிக் கணக்கில் இருந்து 50,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும் எனச் சொன்ன கட்டுப்பாடுகளையும் நாம் அறிவோம். இந்த செய்திகள் இந்திய சந்தைகளில் பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கின்றன. இதுவும் ரூபாய் மதிப்பு குறைய ஒரு காரணமாகச் சொல்கிறார்கள்.

3. அமெரிக்க ஃபெடரல் வங்கி

3. அமெரிக்க ஃபெடரல் வங்கி

அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் வங்கி, தன் வட்டி விகிதத்தை 0.5 சதவிகிதம் வரை குறைத்து இருக்கிறது. கடந்த 2008 பொருளாதார நெருக்கடி காலத்துக்குப் பின் 0.5 சதவிகிதம் வட்டி விகிதத்தைக் குறைத்து இருப்பது இதுவே முதல் முறையாம். டாலர் வலுவடைய இது ஒரு மிக முக்கிய காரணமாகி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

4. உலக சந்தை பதற்றம்

4. உலக சந்தை பதற்றம்

அமெரிக்காவின் நாஸ்டாக் தொடங்கி ஐரோப்பாவின் எஃப் டி எஸ் இ, சி ஏ சி, டி ஏ எக்ஸ் சந்தைகள் எல்லாமே சரிவில் தான் நிறைவடைந்து இருக்கின்றன. இன்று வர்த்தகமாகிக் கொண்டு இருக்கும், ஆசியாவின் சந்தைகள் எல்லாமே படு பயங்கர சரிவில் தான் வர்த்தகமாகிக் கொண்டு இருக்கின்றன. இது முதலீட்டாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மீண்டும் தங்கள் பணத்தின் பாதுகாப்புக்காக டாலரில் முதலீடு செய்கிறார்கள். டாலர் வலு பெற்றுக் கொண்டி இருக்கிறது.

5. கொரோனா

5. கொரோனா

கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பரவிக் கொண்டு இருப்பதால், ஒட்டு மொத்த உலக பொருளாதாரமே வளர்ச்சி காண முடியாமல் தவித்துக் கொண்டு இருக்கிறது. உலக சந்தைகள் தொடங்கி இந்திய சந்தைகள் வரை, தங்கம் விலை தொடங்கி டாலர் மதிப்பு வரை எல்லாவற்றுக்கும் கொரோனா ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. கொரோனா கட்டுப்படுத்தினால் மீண்டும் ஓரளவுக்கு பழைய நிலைக்கு வரலாம். டாலர் Vs இந்திய ரூபாய் கூட 72 - 72.5 லெவல்களுக்கு வரலாம் என்கிறார்கள் அனலிஸ்ட்கள். ஒருவேளை, இப்படியே போனால், வரலாறு காணாத அளவுக்கு, அமெரிக்க டாலருக்கு நிகரான சந்தை மதிப்பு 74.48-ஐத் தாண்ட வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why indian rupee is falling towards 74.48

Indian currency rupee is falling more and mroe towards it all time low 74.48. What are the reasons for indian rupee fall.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X