24 மணி நேரத்தில் கிரிப்டோகரன்சி மதிப்பு 7.94% சரிவு.. பிரபல கரன்சிகளின் நிலை என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச கிரிப்டோகரன்சி சந்தை மூலதனம் 7.94 சதவீதம் சரிந்து 1.41 ட்ரில்லியன் டாலராக (காலை 8.43 மணி நிலவரத்தின்படி) வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது.

பிட்காயின் மதிப்பும் 30,932 டாலராக சரிந்துள்ளது. 2021-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்குப் பிறகு பிட்காயின் மதிப்பு 30,000 டாலருக்கும் கீழ் சரிந்து வர்த்தகம் செய்யப்பட்டு இருந்தது.

தங்கம் விலை மீண்டும் சரிவு.. இது வாங்க சரியான நேரமா.. இனியும் குறையுமா? தங்கம் விலை மீண்டும் சரிவு.. இது வாங்க சரியான நேரமா.. இனியும் குறையுமா?

என்ன காரணம்?

என்ன காரணம்?

 

ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர், பணவீக்கம் அதிகரிப்பு, இலங்கையில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி போன்ற காரணங்களால் சர்வதேச நிதி சந்தையில் நிலையற்ற தன்மை உள்ளது. அது கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்களிடையிலும் எதிரொலித்துள்ளது. அதனால் எற்பட்ட பதற்றமான சூழலால் முதலீட்டாளர்கள் பணத்தை அதிகளவில் வெளியில் எடுத்துள்ளதாகவும் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

 

எத்திரியம்

எத்திரியம்

கடந்த 24 மணிநேரத்தில் எத்திரியம் விலை 5.9% குறைந்து $2319 ஆக இருந்தது. கடந்த 7 நாட்களில், எத்திரியம் விலை 18.63% குறைந்துள்ளது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் எத்திரியம் தற்போது இரண்டாவது பெரிய கிரிப்டோ சொத்தாக உள்ளது.

பைனான்ஸ்:
 

பைனான்ஸ்:

கடந்த 24 மணிநேரத்தில் பைனான்ஸ் நாணயத்தின் விலை 11.67% குறைந்து $309 ஆக இருந்தது. கடந்த 7 நாட்களில், BNB விலை 20.92% குறைந்துள்ளது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இது தற்போது நான்காவது பெரிய கிரிப்டோசியாக உள்ளது.

எக்ஸ்.ஆர்.பி

எக்ஸ்.ஆர்.பி

எக்ஸ்.ஆர்.பி நாணயத்தின் விலை கடந்த 24 மணிநேரத்தில் 11.87% குறைந்து $0.502 ஆக இருந்தது. கடந்த 7 நாட்களில், எக்ஸ்.ஆர்.பி விலை 19.44% குறைந்துள்ளது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இது தற்போது 6வது பெரிய கிரிப்டோகரன்சியாக உள்ளது.

சோலானா:

சோலானா:

கடந்த 24 மணிநேரத்தில் சோலானா விலை 14.45% குறைந்து $64.90 ஆக உள்ளது. கடந்த 7 நாட்களில், சோலானா விலை 26.42% குறைந்துள்ளது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் இது தற்போது 7வது பெரிய கிரிப்டோசியாக உள்ளது.

கார்டானோ:

கார்டானோ:

கடந்த 24 மணிநேரத்தில் கார்டானோ டோக்கனின் விலை 12.39% குறைந்து $0.6272 ஆக உள்ளது. கடந்த 7 நாட்களில், ADA விலை 12.36% குறைந்துள்ளது. இது தற்போது சந்தை மூலதனத்தின் அடிப்படையில் 8வது பெரிய கிரிப்டோகரன்சியாக உள்ளது.

டெர்ரா:

டெர்ரா:

கடந்த 24 மணி நேரத்தில் டெர்ரா நாணயத்தின் விலை 53% குறைந்து $28.83 ஆக உள்ளது. கடந்த 7 நாட்களில், டெர்ரா விலை 85.96% குறைந்துள்ளது. சந்தை மூலதனத்தின் அடிப்படையில் அதன் தரவரிசை இப்போது 14வது இடத்திற்குச் சரிந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Why Is Cryptocurrency Market Crashing and What Is Top 10 Crypto Prices Now?

Why Is Cryptocurrency Market Crashing and What Is Top 10 Crypto Prices Now? | 24 மணி நேரத்தில் கிரிப்டோகரன்சி மதிப்பு 7.94% சரிவு.. பிரபல கரன்சிகளின் நிலை என்ன?
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X