சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிஸ்கட்டுகள் சாப்பிடுவது மிகவும் பிடிக்கும் என்பதை நான் சொல்லவே தேவையில்லை.
அதிலும் குறிப்பாக பல ஆண்டுகளாக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள Parle-G பிஸ்கெட் சாப்பிடுவது என்பது ஒரு தனி பிரியம் தான்.
அந்த வகையில் 25 ஆண்டுகளாக Parle-G நிறுவனம் விலையை ஏற்றாமல் ஐந்து ரூபாய்க்கு பிஸ்கட் தருவது ஆச்சரியமான ஒன்றாகும். ஆனால் இதில் இருக்கும் ஒரு டெக்னிக்கையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அது என்ன என்பதை தற்போது பார்ப்போம்.
Parle-G பிஸ்கட்
1994ஆம் ஆண்டு Parle-G நிறுவனம் 4 ரூபாய்க்கு ஒரு சிறிய பிஸ்கட் பாக்கெட்டை அறிமுகம் செய்தது. அன்று முதல் 2021ஆம் ஆண்டு வரை அதே விலையில் வழங்கி வந்த Parle-G, 2021அம் ஆண்டு ஒரு ரூபாய் உயர்த்தி ஐந்து ரூபாய் என விலை நிர்ணயம் செய்தது.
மலிவு விலை பிஸ்கட்
எளிதில் கிடைக்கக்கூடிய, மிக மலிவான விலையில் கிடைக்கும் Parle-G பிஸ்கட்டுகள் மக்களின் விருப்பத்திற்குரிய ஒன்றாக இருந்து வருகிறது. குறிப்பாக அதன் விலையை மாற்றாமல் 25 ஆண்டுகளாக ஒரே விலையில் எப்படி விற்பனை செய்கிறது என்பதுதான் பலரது ஒரு ஆச்சரியமான விஷயம். ஆனால் இதில் சில நுண்ணறிவு டெக்னிக் இருக்கிறது என்பதை சமூக வலைத்தளத்தில் ஒருவர் பதிவு செய்துள்ளார்.
25 ஆண்டுகளாக ஒரே விலை
1994ஆம் ஆண்டு முதல் 4 ரூபாய்க்கு விற்பனை செய்து வந்த Parle-G பிஸ்கெட் 2021 ஆம் ஆண்டு மட்டும் ஒரு ரூபாய் உயர்த்தி ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்வது எப்படி சாத்தியம் என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு ஆண்டும் விலைவாசி உயர்ந்து கொண்டே வரும் நிலையில் 25 ஆண்டுகளாக எப்படி ஒரு நிறுவனம் விலையை உயர்த்தாமல் தயாரிப்பை வழங்க முடியும் என்பது மிகப்பெரிய கேள்வி அல்லவா? என்று அவர் பதிவு செய்துள்ளார்.
அளவு குறைப்பு
பொதுவாக பிஸ்கட் என்று சொன்னாலே சிறிய பாக்கெட், பெரிய பாக்கெட் என்றுதான் மக்கள் நினைப்பார்களே தவிர அது எத்தனை கிராம் என்று யாரும் உற்று கவனிப்பது கிடையாது. இந்த நுண்ணறி டெக்னிக்கை தான் Parle-G பயன்படுத்தியுள்ளது. Parle-G நிறுவனம் விலையை உயர்த்துவதற்கு பதிலாக மெதுவாகவும் சீராகவும் அதன் அளவை குறைத்துக் கொண்டே வந்துள்ளது.
100 கிராம் முதல் 55 கிராம் வரை
முதலில் 100 கிராம் பாக்கெட் என அறிமுகம் செய்யப்பட்ட Parle-G பிஸ்கட், அதன் பிறகு சில ஆண்டுகளில் 92.5 கிராம் என்றும் அதன் பின்னர் 88 கிராம் என்றும் எடை அளவை மாற்றினார்கள். தற்போதைய நிலவரப்படி 5 ரூபாய்க்கு கிடைக்கும் சிறிய Parle-G பிஸ்கட் பாக்கெட் 55 கிராம் மட்டுமே எடை கொண்டது. அதாவது ஆரம்ப காலத்தில் இருந்த எடையை விட தற்போது 45 சதவீதம் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
க்ரேஸ்ஃபுல் டிகிராடேஷன்
பிஸ்கட் மட்டுமின்றி உருளைக்கிழங்கு சிப்ஸ், சாக்லேட் பார், டூத் பேஸ்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் இந்த வழியை பின்பற்றுகின்றன. விலை உயர்ந்தால் மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி ஏற்படும் என்பதை புரிந்துகொண்ட இந்த நிறுவனங்கள் விலையை உயர்த்துவதற்கு பதிலாக அளவை குறைத்து வருகின்றன. இந்த நுட்பத்திற்கு க்ரேஸ்ஃபுல் டிகிராடேஷன் என்று பெயர். நுகர்வோர்கள் இதை பெரிதாக உணர மாட்டார்கள் என்றும் இந்த தந்திரத்தை பல நிறுவனங்கள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் கடைபிடித்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்!! கணக்கு போட்டுட்டாங்க அக்கவுண்ட்டை தேடி வரும் பணம்!!

தமிழ்நாட்டில் மதுபானம் விற்கப்போகும் அனிருத்.. பெங்களூர்-க்கு அடுத்து சென்னை தான்..!!

கத்தார், பஹ்ரைன், UAE, குவைத்தில் குண்டு மழை.. ஈரான் வைத்த டார்கெட்.. அமெரிக்காவுக்கு நெருக்கடி..!

ஈரான்-ஐ பிடிக்க பணத்தை மலை மலையாய் குவிக்கும் டிரம்ப்.. 24 மணிநேரத்தில் எவ்வளவு செலவானது தெரியுமா..?

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

அடுத்த பிரச்சனை.. கத்தார் LNG உற்பத்தி முழுமையாக நிறுத்தம்.. ஸ்தம்பிக்கப்போகும் உலக நாடுகள்..!!

சென்செக்ஸ் 6,000 புள்ளிகள் சரிவிலிருந்து மீண்டது.. இந்திய சந்தைக்கு ‘டபுள் ஷாக்’..!!

தூங்கிட்டிருந்த மிருகத்த தட்டி எழுப்பிட்டாங்க!! நாளை தங்கம், வெள்ளி சந்தை பத்தி எரிய போகுது!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

தங்கம் 'பெரிய மாற்றம்' வரபோகுது, ஆனந்த் ஸ்ரீனிவாசன் சொன்ன அந்த ஒரு விஷயம்! அதிர்ச்சியில் மிடில்கிளாஸ் மக்கள்!



Click it and Unblock the Notifications