இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு அனுமதி..? மத்திய அரசு புதிய குழு ஆய்வு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலகளவில் கிரிப்டோகரன்சி மீதான முதலீடுகள் அதிகரித்து வரும் நிலையில் இந்திய அரசு கிரிப்டோ மீதான முதலீடுகளுக்குத் தடை விதித்துள்ள நிலையில், தற்போது மத்திய அரசு கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை இந்தியாவில் முறைப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யப் புதிய குழுவை அமைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 

2019ல் முன்னாள் நிதியியல் செயலாளர் சுபாஷ் கர்க் கிரிப்டோகரன்சி மீதான வர்த்தகத் தடை மற்றும் கொடுத்த பரிந்துரைகள் தற்போதைய நிலைக்கு ஏற்புடையதாக இல்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் புதிய குழுவை நியமித்துக் கிரிப்டோகரன்சி வர்த்தகத்தை முறைப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 பிளாக்செயின் தொழில்நுட்பம்

பிளாக்செயின் தொழில்நுட்பம்

மோடி தலைமையிலான அரசு அமைத்துள்ள இப்புதிய குழு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எப்படிக் கிரிப்டோகரன்சியை ஒகு டிஜிட்டல் சொத்தாகவும், நாணயத்திற்கு மாறாக மாற்றும் ஒரு சொத்தாக மாற்ற வேண்டும் என்பதற்கான வழிகளை ஆய்வு செய்ய உள்ளது.

 ரிசர்வ் வங்கி-யில் டிஜிட்டல் ரூபாய் திட்டம்

ரிசர்வ் வங்கி-யில் டிஜிட்டல் ரூபாய் திட்டம்

மேலும் இந்தப் புதிய குழு ரிசர்வ் வங்கி சில மாதங்களுக்கு முன்பு அறிமுகம் செய்த டிஜிட்டல் ரூபாய் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான வழிகளையும், இத்திட்டத்தை மையமாக வைத்து ஆய்வு செய்ய உள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது.

 கிரிப்டோ வர்த்தகம்
 

கிரிப்டோ வர்த்தகம்

இப்புதிய குழு அமைக்கும் முடிவை அரசு எடுத்துள்ளதாக மட்டுமே தகவல் கிடைத்துள்ளது, இதை இன்னும் செயல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்குழு எப்போது இயங்க துவங்கும் என்பது குறித்தும் தகவல் கிடைக்கவில்லை, ஆனால் இக்குழுவின் பரிந்துரைகள் வலிமையாக இருந்தால் இந்தியாவில் கிரிப்டோ வர்த்தகத்திற்கு அதிகாரப்பூர்வமாக அனுமதி அளிக்கப்படும்.

 சீனா-வின் டிஜிட்டல் நாணயம்

சீனா-வின் டிஜிட்டல் நாணயம்

உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக விளங்கும் சீனா கொரோனாவில் இருந்து மீண்டு வந்துள்ளது மட்டும் அல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தையும் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்நிலையில் சீனா பல ஆண்டுகள் முயற்சிக்குப் பின்பு டிஜிட்டல் கரன்சியை மக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளது.

 டிஜிட்டல் நாணயம்

டிஜிட்டல் நாணயம்

சீனா அரசு தற்போது அறிமுகப்படுத்தியுள்ள டிஜிட்டல் யுவான் அல்லது e-CNY மூலம் உலக நாடுகளை விடவும் சீனா டிஜிட்டல் நிதியியல் சேவையில் முன்னோடியாக இருப்பது மட்டும் அல்லாமல் தற்போது டிஜிட்டல் கரன்சியிலும் முதன்மை நாடாகத் திகழ்கிறது.

 டிஜிட்டல் யுவான்

டிஜிட்டல் யுவான்

இந்த டிஜிட்டல் யுவான் கிரிப்டோகரன்சி இல்லா எனத் தெளிவுபடுத்தும் சீனா தன் நாட்டில் தற்போது பயன்பாட்டில் இருக்கும் நாணயம், மற்றும் காகித பணத்தை, புழக்கத்தில் இருந்து நீக்கி டிஜிட்டல் கரன்சியை முதன்மை பரிமாற்ற நாணயமாக மாற்றும் முயற்சியாக உள்ளது. மேலும் இதைச் சீனாவில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

 பீப்பள் பேங்க் ஆப் சீனா

பீப்பள் பேங்க் ஆப் சீனா

சீனாவின் மிகப்பெரிய வங்கியாகவும், பொதுத்துறை வங்கியாகவும் இருக்கும் பீப்பள் பேங்க் ஆப் சீனா 2014ஆம் ஆண்டு முதல் டிஜிட்டல் கரன்சி மற்றும் எலக்ட்ரானிக் பேமெண்ட் திட்டத்தை உருவாக்கும் பணியில் ஈட்டுப்பட்டு தற்போது பயன்பாட்டுக்குக் கொண்டுள்ள வந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Will Government Allow Cryptocurrency Trading in India: New panel SetUp by Govt

Will Government Allow Cryptocurrency Trading in India: New panel SetUp by Govt
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X