பணவீக்கத்தினால் ஐடி பங்குகள் தடம் புரளுமா.. நிபுணர்களின் கணிப்பு என்ன?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில் பல்வேறு நாடுகளிலும் பணவீக்கம் என்பது பதம் பார்க்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பொருளாதாரம் மந்த நிலையை எட்டலாமோ என்ற அச்சத்தின் மத்தியில் பங்கு சந்தைகள் சரிவினைக் கண்டு வருகின்றன.

 

டாலருக்கு எதிரான முக்கிய கரன்சிகளின் மதிப்பானது வரலாறு காணாத அளவு சரிவினைக் காணத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் இந்திய ஐடி பங்குகள் நடப்பு காலாண்டில் பெரியளவில் ஏற்றம் காணவில்லை. இது பணவீக்கத்தினால் வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில் சரிவினைக் கண்டு வருகின்றன.

ஆர்பிஐ அறிவித்த 30,307 கோடி ரூபாய் ஈவுத்தொகை.. மத்திய அரசு கணிப்பு என்ன தெரியுமா..?!

மார்ஜின் பாதிக்கப்படலாம்

மார்ஜின் பாதிக்கப்படலாம்

சர்வதேச அளவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியில் ஜேபி மார்கன் அதிகரித்து வரும் பணவீக்கம் என்பது, நிறுவனங்களின் மார்ஜின் விகிதத்தில் பாதிப்பினை ஏற்படுத்தலாம். இது அதன் பங்கினில் பிரதிபலிக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகின்றது. இதற்கிடையில் ஜேபி மார்கன் நிறுவனம் ஐடி துறை மீதான தனது நிலைபாட்டினை குறைத்துள்ளது.

சம்பள பணவீக்கம்

சம்பள பணவீக்கம்

தற்போது ஐடி துறையில் தேவை அதிகரித்து வரும் நிலையில், சப்ளையில் பற்றாக்குறையே இருந்து வருகின்றது. இதற்கிடையில் சம்பள பணவீக்கம் என்பது அதிகரித்துள்ளது. இது இன்னும் சில காலத்திற்கு தொடரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் சமீபத்திய உச்சத்தில் இருந்து சற்று குறைந்துள்ளது என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

வருவாய் வளர்ச்சி
 

வருவாய் வளர்ச்சி

எப்படியிருப்பினும் வரும் காலாண்டுகளில் வலுவான வளர்ச்சியினை காணலாம். வலுவான ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளது. இது இப்பங்கின் ஏற்றத்திற்கு வழிவகுக்கலாம்.

நாஸ்டாக்கில் தொழில் நுட்ப பங்குகளில் நாம் கண்டிருக்கும் வீழ்ச்சி கண்டுள்ளதையடுத்து, இதே போன்று இந்திய தகவல் தொழில் நுட்பத்தில் வீழ்ச்சி இருக்குமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதில் பெரியளவில் தொடர்பு இல்லாவிட்டாலும், இது ஒப்பிடத்தக்கவையே. அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியில் தாக்கம் இருக்கலாம் என்றாலும், அது இந்திய பங்குகளில் மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய சந்தை நிலவரம்?

இன்றைய சந்தை நிலவரம்?

இன்று சென்செக்ஸ் 1534.16 புள்ளிகள் அல்லது 2.91 சதவீதம் அதிகரித்து, 54,326.39 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 456.75 புள்ளிகள் அலது 2.89 சதவீதம் அதிகரித்து, 16,266.15 புள்ளிகளாக வர்த்தகமாகி முடிவடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Will Inflation Influence IT Shares?

Fears of inflation in the US market have led to a sharp decline in IT stocks in the last session, raising fears of an impact on the Indian market as well.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X