இது புதுசு இல்ல..எப்பவும் நடக்குறது தான்.. ஆன்போர்டிங் குறித்து HCL CEO பளீச்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஐடி நிறுவனங்கள் சமீபத்திய மாதங்களாக பற்பல அதிரடியான மாற்றங்களை கண்டு வருகின்றன. குறிப்பாக பணியமர்த்தல் குறைப்பு, பணி நீக்கம், தற்காலிகமாக பணியமர்த்தல் நிறுத்தம், வேலைக்காக தேர்வு செய்தவர்களை மீண்டும் நிறுவனங்களுக்கு அழைக்காமல், காலம் தாழ்த்தி வருதல் உள்ளிட்ட பல பிரச்சனைகள் இருந்து வருகின்றன.

இது குறித்து ஹெச்சிஎல் டெக்னாலஜி நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி வினீத் நாயர், BT-க்கு அளித்துள்ள பேட்டியில் ஆன்போர்டிங் குறித்து தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் செம அப்டேட்.. ஐடி ஊழியர்கள் செம ஹேப்பி! இன்போசிஸ் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் செம அப்டேட்.. ஐடி ஊழியர்கள் செம ஹேப்பி!

ஐடி பிரெஷ்ஷர்கள் கவலை

ஐடி பிரெஷ்ஷர்கள் கவலை

ஐடி நிறுவனங்கள் பலவும் ஊழியர்களை இண்டர்வியூ மூலம் தேர்வு செய்திருந்தாலும், அவர்களை நிறுவனங்களில் ஆன்போர்டிங் செய்வதில் தாமதம் செய்து வருகின்றன. இது ஐடி துறையில் பெரும் சல சலப்பினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஐடி பிரெஷ்ஷர்கள் மத்தியில் இன்னும் பெரும் கவலையினை ஏற்படுத்தியுள்ளது.

இருக்கும் பிரச்சனை தான்

இருக்கும் பிரச்சனை தான்

ஆனால் இது ஐடி துறையில் ஒன்றும் பெரிய விஷயம் அல்ல, இதற்கு முன்பும் இதுபோன்று நடந்து வந்தது. இது ஐடி துறைக்கு இருக்கும் ஒன்று தான் என ஹெச் சி எல் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான வினீத் நாயர் கூறியுள்ளார்.

தேவையில் பெரியளவில் மாற்றம் ஏற்படும்போது இதுபொன்ற பிரச்சனைகள் இருக்கும் ஒன்று தான். ஆக இது ஐடி துறைக்கு ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. இது இதற்கு முன்பும் நடந்த ஒன்று தான். இது குறித்து கவலைப்பட வேண்டியதும் இல்லை.

முன்னணி நிறுவனங்கள் தாமதம்

முன்னணி நிறுவனங்கள் தாமதம்

இந்திய ஐடி நிறுவனங்களான இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, எம்பஸிஸ், அசெஞ்சர், கேப்ஜெமினி., டெலாய்ட் உள்ளிட்ட பல நிறுவனங்களும் ஆன்போர்டிங்கினை தாமதம் செய்துள்ளன.

ஐடி நிறுவனங்களால் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி திறமையாளர்களுக்கான தேவையை, நிறுவனங்களால் துல்லியமாக கணிக்க முடியவில்லை. இதன் காரணமாக ஆன்போர்டிங் செய்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தேவையா? இல்லையா?

தேவையா? இல்லையா?

ஒரு ஊழியர் தேவையா இல்லையா என்பதை 18 மாதங்களுக்கு முன்பே தீர்மானிக்க வேண்டும். ஆனால் நிறுவனங்கள் தேவையை தவறாக கணிக்கின்றன. ஒரு புதிய ஊழியர் தேவையான பயிற்சியினை பெற்று பணியில் அமர்வதற்கு ஆறு முதல் 9 மாதங்கள் வரையில் ஆகும். ஆனால் ஊழியர்கள் ஒரு வருடத்திற்கு முன்பே இந்த ஆஃபரை பெறுகின்றனர்.மொத்தத்தில் நிறுவனங்களின் கணிப்பு என்பது திருத்தம் செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.

ஆன்போர்டிங் - தேவை

ஆன்போர்டிங் - தேவை

 

நிறுவனங்களின் ஆன்போர்டிங் பிரச்சனையானது தேவையானது சரிவினைக் கண்டு வருவதை சுட்டிக் காட்டுகின்றது. இது குறித்த சர்ச்சையானது சமீபத்திய மாதங்களாகவே அவ்வப்போது வெளியாகி வந்த வண்ணம் இருந்து வருகின்றது.

இது குறித்து இன்ஃபோசிஸ் ஊழியர்கள் இணையும் தேதிக்கு 2 - 3 வாரங்களுக்கு முன்பாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. அவர்களுக்கு போதிய பயிற்சியும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

கேப்ஜெமினி

கேப்ஜெமினி

கேப்ஜெமினி நிறுவனமும் இப்படி ஒரு அறிவிப்பினை கொடுத்துள்ளது. உங்கள் பிரச்சனையை நாங்கள் புரிந்து கொள்கிறோம். உறுதியாக இருங்கள். வழங்கப்பட்ட கடிதங்கள் அனைத்தையும் நாங்கள் மதிப்போம், எங்களின் ஆன்போர்டிங் ஆனது வாடிக்கையாளர்களின் தேவையுடன் இணைந்துள்ளது. புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பயிற்சி சரியான நேரத்தில் கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

wipro infosys onboarding delay issue: Ex HCL CEO vineet nayar says this has happened before

IT companies continue to delay onboarding new hires for months. Former CEO of HCL Vineet Nair said that this has happened before in the IT sector.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X