WIPRO: சம்பளத்தை 50% குறைத்துக்கொண்ட ரிஷாத் பிரேம்ஜி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தனது ஊழியர்களுக்கான வேரியபிள் பே தொகையை கொடுக்கும் பணியை முடித்துவிட்ட நிலையில், தற்போது சம்பள உயர்வுக்கான பணிகளை வேகப்படுத்தியுள்ளது.

 

இந்த நிலையில் இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ-வின் எக்ஸ்கியூட்டிவ் சேர்மன் ஆக இருக்கும் ரிஷாத் பிரேம்ஜி, 2023 நிதியாண்டுக்கான தனது சம்பளத்தில் தானாக முன்வந்து குறைத்துள்ளார்.

 
 WIPRO: சம்பளத்தை 50% குறைத்துக்கொண்ட ரிஷாத் பிரேம்ஜி..!

விப்ரோ நிறுவனம் அமெரிக்காவில் உள்ள செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனுக்கு சமீபத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் ரிஷாத் பிரேம்ஜி, 2023 நிதியாண்டுக்கான தனது சம்பளத்தில் தானாக முன்வந்து 50 சதவீதம் குறைத்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

2023 நிதியாண்டுக்கு ரிஷாத் ப்ரேம்ஜி-யின் மொத்த வருடாந்திர சம்பளமாக 951,353 டாலர் பெற உள்ளார். இது 2022 ஆம் ஆண்டு ரிஷாத் ப்ரேம்ஜி கிட்டத்தட்ட 1,819,022 டாலர் சம்பளமார பெற்ற நிலையில் தற்போது வெறும் 50 சதவீத தொகையை மட்டுமே பெறுகிறார்.

அமெரிக்காவில் பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான SEC-க்கு விப்ரோ சமர்ப்பித்த 20-F படிவத்தின் படி, 2023 ஆம் ஆண்டுக்கு ரிஷாத் ப்ரேம்ஜி சம்பளம் மற்றும் அலவென்ஸ் ஆக 861,620 டாலரும், நீண்ட கால இழப்பீடு பலன் ஆக 74,343 டாலரும், இதர வருமானமாக 15,390 டாலரும் பெற்றுள்ளார்.

 WIPRO: சம்பளத்தை 50% குறைத்துக்கொண்ட ரிஷாத் பிரேம்ஜி..!

இந்த ஆண்டு ரிஷாத் ப்ரேம்ஜி எவ்விதமான பங்குகளையும் பெறவில்லை, இதோடு அவருடைய நிரந்தக சம்பளத்தை சேர்த்து 2023 நிதியாண்டுக்கு 951,353 டாலர் பெற்றுள்ளார். விப்ரோ லிமிடெட்டின் செயல் தலைவராக திரு. பிரேம்ஜியின் தற்போதைய 5 ஆண்டு பதவிக்காலம் ஜூலை 30, 2024 அன்று முடிவடைகிறது.

TCS: மத்திய அரசிடம் இருந்து வந்த 15000 கோடி ரூபாய் ஆர்டர்.. இன்போசிஸ், விப்ரோ சோகம்..!TCS: மத்திய அரசிடம் இருந்து வந்த 15000 கோடி ரூபாய் ஆர்டர்.. இன்போசிஸ், விப்ரோ சோகம்..!

ரிஷாத் ப்ரேம்ஜி 2007 இல் விப்ரோவில் சேர்ந்தார், இதற்கு முன்பு லண்டனில் உள்ள பெயின் & கம்பெனியில் பணியாற்றினார். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் போது நுகர்வோர் தயாரிப்புகள், ஆட்டோமொபைல், டெலிகாம் மற்றும் இன்சூரன்ஸ் என பிரிவுகளை சார்ந்த துறையில் பணிபுரிந்தார். இதோடு அமெரிக்காவில் உள்ள GE கேபிட்டல் நிறுவனத்தின் காப்பீடு மற்றும் நுகர்வோர் கடன் பிரிவலும் பணியாற்றினார்.

2007 ஆம் ஆண்டு விப்ரோவில் சேரும் போதே நிர்வாக பொறுப்பில் சேர்ந்த ரிஷாத் ப்ரேம்ஜி முதலில் விப்ரோவின் வங்கி மற்றும் நிதிச் சேவைகள் பிரிவில் பொது மேலாளர் பதவியை பெற்றார். இதை தொடடர்ந்து Investor Relations தலைவர் பதவியும், விப்ரோ Strategy மற்றும் M&A பிரிவின் தலைவர் பதவியும் வகித்தார். இதை தொடர்ந்து தான் எக்ஸ்கியூடிவ் சேர்மன் பதவிக்கு 2019ல் வந்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro: Rishad Premji Cuts His Salary to half to just 951353 usd

Wipro: Rishad Premji Cuts His Salary to half to just 951353 usd
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X