புதிய சிஇஓ நியமனம்.. விப்ரோ அதிரடி.. கிட்டதட்ட 7% ஏற்றம் கண்ட விப்ரோ பங்கு.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: ஐடி துறையில் முன்னணி நிறுவனமான விப்ரோ நிறுவனம் தனது புதிய தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனரை நியமித்துள்ளது.

 

இது குறித்து வெளியான செய்தியில், கடந்த ஆண்டு தனது குடும்ப சூழ்நிலை காரணமாக தான் பதவி விலக போவதாக அபுதாலி நீமுச்வாலா அறிவித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு பதிலாக தியரி டெலாபோர்டே நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

 புதிய சிஇஓ நியமனம்.. விப்ரோ அதிரடி.. கிட்டதட்ட 7% ஏற்றம் கண்ட விப்ரோ பங்கு.. !

மேலும் தற்போதைய தலைமை செயல் அதிகாரி அபிதாலி, நீமுச்வாலாவிடம் இருந்து, டெலாபோர்ட், ஜூன் 1-ம் தேதியில் இருந்து தனது பொறுப்பை ஏற்றுக் கொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது மும்பை பங்குச் சந்தையில் கிட்டதட்ட 7 சதவீதம் அதிகரித்துள்ளது. தற்போது இதன் பங்கு விலையானது 6.57 சதவீதம் அதிகரித்து 212.25 ரூபாயாகவும் வர்த்தகமாகி வருகிறது.

தியரி டெலாபோர்ட் சமீப காலம் வரை காப்ஜெமினி குழுமத்தின் தலைமை இயக்க அதிகரியாகவும், அதன் குழும உறுப்பினராகவும் இருந்தவர். காப்ஜெமினியுடனான 25 ஆண்டுகளாக வாழ்க்கையில், பல தலைமை பதவிகளை வகித்து வந்தவர். மேலும் அவர் கேப்ஜெமினியுடன் இந்தியாவின் செயல்பாடுகளையும் மேற்பார்வையிட்டார்.

அதோடு அவரது லிங்க்ட் இன் விவரத்தின் படி, பிரபல கார்ப்பரேட் நிர்வாகி ஆர்தர் ஆண்டர்சனுடன் 1992-ல் சீனியர் ஆடிட்டராக தனது பணியை தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்துடன் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த பின்னரே, பின்னர் கேப்ஜெமினிக்கு சென்றுள்ளார். அங்கு அதிகபட்சமாக 25 ஆண்டுகாலம் பணியாற்றி வந்திருக்கிறார்.

டெலாபோர்ட் தனது இளங்கலை படிப்பினை பாரிஸிலிருந்தும், முதுகலை பட்டப்படிப்பை சோர்போன் பல்கலைக் கழகத்திலும் படித்துள்ளார்.

விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக அபிதாலி நீமுச்வாலா முன்னதாக டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2015-ல் தான் விப்ரோவிலும் அபுதாலி இணைந்தார்.

டெலாபோர்டே பாரிஸை தளமாகக் கொண்ட நிலையில்ரிஷாத் பிரேம்ஜிக்கு அறிக்கை அளிக்கப்போவதாக பிஎஸ்இ-க்கு இந்த நிறுவனம் அளித்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இது குறித்து ரிஸாத் பிரேம்ஜி, டெலாபோர்டேவை தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனராக வரவேற்பதில் நான் மிக மகிழ்ச்சியடைகிறேன். அவரின் அனுபவம் வாய்ந்த திறனினால் விப்ரோவினை அடுத்தகட்ட வளர்ச்சியிக்கு வழி நடத்த, சரியான நபர் டெலாபோர்டே என்று நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro share price gain nearly 7% on appointment of new ceo and md

IT major wipro appointment of Thierry delaporte as CEO and MD, he will be replacing abidali neemuchwala.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X