பிரேசில் நிறுவனத்தினை வாங்கும் விப்ரோ.. தட தட ஏற்றத்தில் பங்கு விலை..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்வதேச ஐடி நிறுவனமான விப்ரோ நிறுவனத்தின் பங்கு விலையானது 4% ஏற்றம் கண்டுள்ளது. ஐடி துறையின் முக்கிய நிறுவனமான விப்ரோ நிறுவனம், பிரேசில் ஐடி நிறுவனமான IVIA Servios de lnformitica Ltda நிறுவனத்தினை கையகப்படுத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

முன்னணி ஐடி நிறுவனமான விப்ரோவின் பங்கு விலையானது, தற்போது 2.53% அதிகரித்து 283.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது.

பிரேசில் நிறுவனத்தினை வாங்கும் விப்ரோ.. தட தட ஏற்றத்தில் பங்கு விலை..!

 

கடந்த வெள்ளிக்கிழமையன்று 276.50 ரூபாயாக இதன் பங்கு விலையானது முடிவடைந்த நிலையில், தற்போது 283.50 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

விப்ரோ நிறுவனம் IVIA நிறுவனத்தினை 22.4 மில்லியன் டாலர் முதலீடு செய்து கையகப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

விப்ரோவின் பங்கு விலையானது 5 நாள், 20 நாள், 50 நாள், 100 நாள் மற்றும் 200 நாள் மூவிங் ஆவரேஜ் மேலாக வர்த்தகமாகி வருகின்றது. இந்த நிறுவனத்தின் பங்கு விலையானது 13% ஏற்றம் கண்டுள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் இருந்து 14.56% ஏற்றம் கண்டுள்ளது.

விப்ரோ நிறுவனத்தின் சந்தை மூலதனம் 1.61 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் 4.32 லட்சம் பங்கானது கைமாறியுள்ளது. இதனால் இந்த பங்கு பரிமாற்றத்தின் டர்ன்ஓவர் 12.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

IVIA நிறுவனமானது பிரேசில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு கணினி மேம்பாடு மற்றும் பராமரிப்பு, ஆலோசனை மற்றும் திட்ட மேலாண்மை, சேவைகள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்குபவர். SAP தடம் குறிப்பதற்காக கூகிள் கிளவுட் உடன் நிறுவனம் ஒத்துழைத்த பிறகு விப்ரோ பங்கு விலையானது 3% அதிகரித்துள்ளது.

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ஒருங்கிணைந்த லாபம் ஓரளவு அதிகரித்து 2,390.40 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே காலாண்டில் ஒருங்கிணைந்த லாபம் 2,387.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில் இந்த நிறுவனத்தின் வருவாய் 15,571 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. எனினும் இது முந்தைய காலாண்டில் 15.566.6 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இது பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் தான் காணப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro share price increased 3.54% on acquisition of Brazilian company

Wipro share price update.. Wipro share price increased 3.54% on acquisition of Brazilian company.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X