அமெரிக்காவின் அந்த அதிரடி நடவடிக்கை.. கலக்கத்தில் இந்திய ஐடி நிறுவனங்கள்.. சரியும் பங்குகள்.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொதுவாவே விசா என்றாலே மற்ற நாடுகளுக்கு பயணம் செய்ய உதவும் ஒன்றாகும். சிலர் வேலை பயணமாக செல்வர், சிலர் தொழில் நிமித்தமாக செல்வர். சிலர் சுற்றுலாக்காக செல்வர்.

அதெல்லாம் சரி அதென்னா ஹெச் 1பி விசா? ஹெச் 1பி விசா என்பது அதிக திறன் வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களுக்காக அமெரிக்கா கொடுக்கும் ஒரு விசா. இது குடியுரிமை அல்லாத விசாவாகும்.

இந்த விசா மூலம் சிறப்பு பணிகளுக்கு திறன் வாய்ந்த அமெரிக்கர்கள் இல்லாத போது, மற்ற நாட்டை சேர்ந்த பணியாளர்களை நிரப்ப இது பயன்படும் ஒரு விசாவாகும்.

யாருக்கு ஹெச் 1பி விசா
 

யாருக்கு ஹெச் 1பி விசா

இந்த ஹெச் 1பி விசாவுக்கு குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படித்திருந்தால் மட்டுமே கிடைக்கும். இப்படி பல கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கிடைக்கும் இந்த விசா மூலம் சட்டபூர்வமாக மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி பணியாற்ற முடியும். மேலும் இந்த விசாவினை அதிகரிக்க நினைத்தால், அதிகபட்சமாக 6 வருடங்கள் மட்டுமே அதிகரிக்க முடியும்.

யார் யாருக்கு வழங்கப்படும்

யார் யாருக்கு வழங்கப்படும்

இந்த விசாவானது சாப்ட்வேர் மற்றும் கணினி பொறியாளர்கள், கட்டிட வடிவமைப்பாளர்கள், அறிவியலாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படுகிறது. இந்த நிலையில், இந்த ஹெச் 1பி விசாவுக்கான விதிமுறைகளை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இது குறித்து பல மாதங்களாகவே டிரம்ப் தலைமையிலான அரசு பரிந்துரைகளை கூறி வருகின்றது.

ஹெச் 1பி விசாவுக்கான கட்டுப்பாடுகள்

ஹெச் 1பி விசாவுக்கான கட்டுப்பாடுகள்

இந்த திட்டம் மூலம் அமெரிக்க இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்புகள் கிடைக்கும். அதிலும் தற்போது கொரோனா காரணமாக அமெரிக்காவில் பல லட்சம் பேர் வேலையிழந்துள்ள நிலையில், மேற்கொண்டு, வேலையின்மையை குறைக்கவும், அமெரிக்கர்களுக்கும் உதவும் வகையில் இந்த கட்டுப்பாடுகளை அதிகரிக்க உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன.

பாதிப்பு யாருக்கு
 

பாதிப்பு யாருக்கு

ஒரு வேளை இந்த ஹெச் 1பி விசா தடை செய்யப்பட்டால், அதனால் அதிகம் பாதிக்கப்பட போவது ஐடி ஊழியர்களும், ஐடி நிறுவனங்களும் தான் என்றும் ஒரு தரப்பு கூறி வருகின்றது. ஆனால் இன்று வெளியான ஒரு செய்தியில் ஹெச் 1பி விசா தடை ஐடி நிறுவனங்களை பெரிதும் பாதிக்காது என்றும் கூறியுள்ளது.

விசாவை தடை செய்யலாம்

விசாவை தடை செய்யலாம்

ஆனால் இதற்கு மத்தியில் ஜூன் 22 ஆன இன்று விப்ரோ, இன்ஃபோசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட ஐடி நிறுவனங்களின் பங்குகள் சற்று வீழ்ச்சியினை கண்டுள்ளன. இந்த ஹெச் 1பி விசாவால் ஐடி துறையில் பாதிப்பு இருக்கலாம் என்ற எண்ணமே முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வருகின்றது. ஏனெனில் இது புலம் பெயர் விசாக்களை தடை செய்யக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தடை செய்யலாம்

தடை செய்யலாம்

இது குறித்து பரப்பரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் அமெரிக்கா ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடந்த சில தினங்களுக்கு முன்பு இன்னும் இரண்டு நாட்களில் ஹெச் 1பி விசாவுக்கான தடையினை எதிர்பார்க்கலாம் என்றும் உறுதிப்படுத்தினார். இன்று அந்த அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் சில அறிக்கைகளின் படி, ஒவ்வொரு விசாவுக்கும் ஏற்றவாறு பாதிப்பு இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்வளவு பேரா?

இவ்வளவு பேரா?

இந்தியாவில் இருந்து சுமார் 4 லட்சம் பேர் ஹெச் 1பி விசா வைத்துள்ள ஊழியர்கள் அமெரிக்காவில் உள்ளனர். இதே எல் -1 விசா வைத்துள்ளவர்கள் சுமார் 1 லட்சம் பேர் இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அமெரிக்கா ஊழியர்களுக்கான வேலையினை பாதுக்காக்கும் பொருட்டு இனி குறைக்கலாம் என்ற கருத்தும் நிலவி வருகின்றது. இதோடு தற்போது கொரோனாவும் சேர்ந்துள்ளது.

வீட்டில் இருந்து பணிபுரிய கூறலாம்

வீட்டில் இருந்து பணிபுரிய கூறலாம்

கொரோனாவினால் ஏற்கனவே 75 சதவீத ஊழியர்கள் வீட்டில் இருந்து பணி புரிந்து வரும் நிலையில், சில முக்கிய இந்திய நிறுவனங்கள் அதன் பணியாளர்களை வீட்டில் இருந்தே வழக்கபோல 2025 வரை பணிபுரிய கூறலாம் என்றும் கூறப்படுகிறது. இது செலவினங்களைக் குறைக்க உதவும் என்றும் நிபுணர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

செலவினம் குறையும்

செலவினம் குறையும்

இதற்கிடையில் தான் Gartner முன்னறிவித்த 5.8 சதவீத வளர்ச்சிக்கு எதிராக, 2020ம் ஆண்டில் செலவினங்களை 8 சதவீதம் குறைக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது அடுத்த நிதியாண்டின் பிற்பாதியில் மீண்டு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள் பணம் நிறைந்தவை மற்றும் சந்தை சார்ந்தவை. ரூபாயின் பலவீனம் அவர்களுக்கு எதிரான ஒரு பாதுகாப்பானதாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

சில பங்குகள் விலை

சில பங்குகள் விலை

ஆக இதெல்லாம் அடி பங்குகளில் தான் எதிரொலிக்கின்றன. இன்று நிஃப்டி ஐடி துறை குறியீடு 0.18 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது. குறிப்பாக விப்ரோவின் பங்குகள் 2 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளன. இதுவே டிசிஎஸ் நிறுவனமும், இன்ஃஃபோசிஸ் நிறுவனமும் சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. இதன் காரணமாக இத்துறை சார்ந்த குறியீடும் சிவப்பு நிறத்தில் காணப்பட்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Wipro, TCS and Infosys shares are in red on H 1B visa reports

Nifty IT index only sectorial index that was in red at that time, also Wipro down 2% and those of Infosys and TCS also down.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X