ஜீரோ பேலன்ஸ் வங்கிக்கணக்கா? உங்களுக்கு ரூ.10,000 கிடைக்க வாய்ப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வங்கியில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 வரை பணம் எடுக்கும் வசதியை மத்திய அரசு கொண்டு வந்துள்ள தகவல் பலருக்கும் தெரியாத ஒன்றாகும்.

மத்திய அரசு பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தை கடந்த 2014 ஆம் ஆண்டு அறிமுகம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே.

இந்த திட்டத்தின் கீழ் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் சில வசதிகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

நீண்டகால விசா வழங்க சிங்கப்பூர் முடிவு... இந்த ஒரே ஒரு காரணம் தான்! நீண்டகால விசா வழங்க சிங்கப்பூர் முடிவு... இந்த ஒரே ஒரு காரணம் தான்!

ஜன்தன் யோஜனா திட்டம்

ஜன்தன் யோஜனா திட்டம்

மத்தியில் பாஜக ஆட்சி பொறுப்பு ஏற்ற பின்னர் பிரதமர் ஜன்தன் யோஜனா திட்டம் தொடங்கப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திட்டத்தின் கீழ் வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஜீரோ பேலன்ஸ் உடன் வங்கி கணக்கை தொடங்கலாம் என்பதும் இந்த கணக்கை தொடங்கியவர்களுக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.10,000 கடன்

ரூ.10,000 கடன்

பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா வங்கி கணக்கு தொடங்கிய ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் ஓவர் டிராப்ட் என்ற வசதி கிடைக்கும். இதற்காக ஜன்தன் யோஜனா வாடிக்கையாளர் வங்கி மேலாளரிடம் பேசி ஓவர் டிராப்ட் வசதியை ஏற்படுத்தி கொள்ளலாம் என்பதும் அதன் மூலம் உங்கள் வங்கி கணக்கில் ரூ.10,000 எளிதாக கடன் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தினசரி வட்டி
 

தினசரி வட்டி

இந்த கணக்கின் மூலம் பெறும் 10,000 ரூபாய் கடனுக்கு தினசரி வட்டி கட்ட வேண்டும் என்பதும் மேலும் இந்த வசதியை பெறுவதற்கு குறைந்தது ஜன் தன் வங்கி கணக்கு தொடங்கி ஆறுமாதங்கள் ஆகியிருக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆவணங்கள்

ஆவணங்கள்

பிரதம மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் கணக்கு தொடங்க ஆதார் அட்டை, பான் கார்டு அல்லது ஓட்டுநர் உரிமம் போன்ற ஏதாவது ஒரு ஆவணம் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருந்தாலே போதும். 10 வயதுக்கு மேற்பட்ட எந்த ஒரு இந்திய குடிமகனும் இந்த கணக்கை தொடங்கலாம்.

ரூபே டெபிட் கார்டு

ரூபே டெபிட் கார்டு

மேலும் ஜன்தன் யோஜனா வங்கி கணக்கை தொடங்குபவர்களுக்கு ரூபே டெபிட் கார்டு கிடைக்கும் என்றும் அந்த கார்டின் மூலம் ஏடிஎம்மில் 2 லட்ச ரூபாய்க்கான காப்பீட்டு தொகையும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த வங்கி கணக்குடன் 30 ஆயிரம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.

மூன்று மடங்கு அதிகம்

மூன்று மடங்கு அதிகம்

இதுவரை பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் 46.25 கோடி பயனாளிகள் கணக்குகள் தொடங்கி பல்வேறு வசதிகளை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு இந்தத் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கை தொடங்கியவர்களின் எண்ணிக்கை 14.72 கோடியாக இருந்த நிலையில் தற்போது அது மூன்று மடங்கு அதிகரித்து 46.25 கோடியாக உள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த வங்கி கணக்கை தொடங்கியவர்களில் 56 சதவீத பெண்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Withdraw Rs 10,000 even on zero balance, know how PM Jan Dhan account holders can do it

Withdraw Rs 10,000 even on zero balance, know how PM Jan Dhan account holders can do it | ஜீரோ பேலன்ஸ் வங்கிக்கணக்கா? உங்களுக்கு ரூ.10,000 கிடைக்க வாய்ப்பு!
Story first published: Tuesday, August 30, 2022, 9:37 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X