ஐடி ஊழியர்களுக்கு சூப்பர் அட்வைஸ்.. பணி நீக்கம் குறித்து நிபுணர்கள் பலே கருத்து!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முன்னணி ஐடி நிறுவனங்கள் மிக எச்சரிக்கையாக உள்ளன. அவர்கள் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் செலவுகளை அதிகரிக்க விரும்பவில்லை. அவர்கள் அட்ரிஷன் விகிதம் குறைய வேண்டும் என விரும்புகிறார்கள்.

எனினும் இந்த நிலை ஜனவரி மற்றும் பிப்ரவரியில் சாதாரணமாக இருக்கலாம். அவர்கள் மீண்டும் பணியமர்த்தப்படலாம். ஏனெனில் அந்த நேரத்தில் நிலைமை சீரடையலாம் என ஆரின் கேப்பிட்டல் & முன்னாள் இயக்குனர் குழு மெம்பர், டிவி மோகந்தாஸ் பாய் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் ET-க்கு அளித்த பேட்டியினை அடிப்படையாக கொண்டு இந்த கட்டுரை எழுதப்பட்டது.

52 வார உச்சத்தில் சென்செக்ஸ்.. சர்பிரைஸ் கொடுத்த ஐடி பங்குகள்.. ஏன் 1000 புள்ளிகளுக்கு மேலாக உச்சம்!52 வார உச்சத்தில் சென்செக்ஸ்.. சர்பிரைஸ் கொடுத்த ஐடி பங்குகள்.. ஏன் 1000 புள்ளிகளுக்கு மேலாக உச்சம்!

தொடர் பணி நீக்கம்

தொடர் பணி நீக்கம்

குறிப்பாக சர்வதேச சந்தையில் நிலவி வரும் மந்த நிலைக்கு மத்தியில் டெக் நிறுவனங்கள் பலவும் பணி நீக்கம் செய்து வருகின்றன. கடந்த வாரத்தில் மெட்டா நிறுவனம் 11,000 பேரை பணி நீக்கம் செய்தது. இது ஒரு மோசமான நேரம். பல நிறுவனங்களும் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இந்த சமயத்தில் ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது ஒன்று தான்.

இது ஒரு சுழற்சி

இது ஒரு சுழற்சி

சர்வதேச பொருளாதாரம் என்பது ஒரு சுழற்சி முறையில் இருக்கும். . ஆக பணியமர்த்தலும் இருக்கும். அதற்காக நிறுவனங்கள் செலவழிக்கும். எனினும் பணி நீக்கங்களும் நடைபெறும். இது கடந்த 30 ஆண்டுகளாக பல முறை நடந்து கொண்டு தான் உள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் இது பல முறை இருக்கலாம்.

பொருளாதாரம் வீழ்ச்சி

பொருளாதாரம் வீழ்ச்சி


இந்த பணி நீக்கம் என்பது ஐடி துறையில் மட்டும் அல்ல, ஸ்டார்ட் அப் துறையிலும் இருந்து வருகின்றது. இது கடந்த ஒன்றரை வருடங்களாக இருந்து வருகிறது.

அமெரிக்காவில் ஐபிஓ ஏற்றம் என்பது இருந்து வந்தது. எல்லா விதமான உயர் மதிப்பீடுகளும் இருந்து வந்தது. இந்த ஏற்றம் எப்போதும் இருக்கும் என மக்கள் நினைத்தார்கள். ஆனால் இப்போது அமெரிக்காவில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து வருகின்றது. இதனால் நிறுவனங்கள் சரிவினைக் கண்டு வருகின்றன.

பெரிய எண்ணிக்கை இல்லை

பெரிய எண்ணிக்கை இல்லை

ஆனால் மொத்த எண்ணிக்கையானது அடிப்படையுடன் ஒப்பிடும்போது மிகவும் சிறியது.. ஏனெனில் அமெரிக்காவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். ஒரு வேளை 50,000, 1 லட்சம், 2 லட்சம் பேர் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் கவலையாக இருக்கலாம். ஆனால் இந்த எண்ணிக்கை ஒட்டுமொத்த பொருளாதாரத்தில் பார்க்கும்போது சிறிய எண்ணிக்கை தான். இது மிகப்பெரிய எண்ணிக்கை இல்லை.

பணி நீக்கம் இருக்கலாம்

பணி நீக்கம் இருக்கலாம்

இந்தியாவில் சேவைத் துறையில் ஸ்டார்ட் அப்கள் உட்பட ஐந்தரை மில்லியனுக்கும் அதிகமான மக்கள் உள்ளனர். இதற்கிடையில் இந்தியாவில் 10,000, 20,000, 30,000, 40,0000 பேர் பணி நீக்கங்கள் இருக்கலாம். இது மீண்டும் நடக்கலாம். ஆக நாம் அதற்கேற்ப செயல்பட வேண்டும். நீங்கள் ஒவ்வொரு முறையும் வேலையை மாற்றும்போது, உங்களுக்கு 25 - 30% உங்களுக்கு வருமானம் கிடைக்கலாம். நீங்கள் அதிக சம்பளம் வாங்குபவர் என்றால், அந்த வேலையை யாராவது குறைந்த சம்பளத்தில் செய்ய முடியும். நிறுவனங்கள் ஏன் ஒரு நபருக்கு அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும் என யோசிக்கலாம். ஆக இது தொடர்ந்து நடக்கும் ஒரு சம்பவம் தான்.

திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

ஆக தொடர்ந்து ஊழியர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்ல முடியும். நீங்கள் ஒரு மேனேஜராக புரோமோட் செய்யப்படுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்போதிலிருந்து நீங்கள் பணத்தை சேமிக்க கற்றுக் கொள்ளுங்கள். அப்போது தான் உங்களது பணி நீக்க நேரத்தில் உங்களால் சமாளிக்க முடியும்.

ஆபத்தில் இருக்கும் வேலை

ஆபத்தில் இருக்கும் வேலை

ஒரு நபருக்கான செலவு அமெரிக்காவில் ஆகும் செலவில் 20%. ஆக இந்தியாவில் இருப்பதால் இங்கு ஐடி துறை வளர்ச்சி காண்கிறது. அதேசமயம் ஒருவர் 25 வருடங்களாக ஒரே வேலையை செய்கிறார் எனில், அவருக்கு புதிய நிலையில் உள்ள நபரை விட 4 மடங்கு சம்பளம் அதிகம் கிடைக்கலாம். இதனால் நிச்சயம் உங்கள் வேலை ஆபத்தில் இருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஆக உங்களது திறமையை தொடர்ந்து மேம்படுத்துங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.

ஐடி நிறுவனங்கள் மேம்படுத்தல்

ஐடி நிறுவனங்கள் மேம்படுத்தல்

எப்படியிருப்பினும் ஐடி நிறுவனங்கள் தொடர்ந்து வளர்ந்து வரும் நாடுகளில் மேம்படுத்தி வருகின்றன. நாம் பணக்கார நாடு அல்ல. இங்கு போட்டி அதிகளவில் உள்ளது. பல இளைஞர்கள் உள்ளனர். பல திறமையானவர்கள் உள்ளனர். ஆக நீங்கள் திறமையானவர்கள் என்றாலும் கூட நீங்கள் அகற்றப்படலாம். ஏனெனில் உங்களை விட குறைவான சம்பளத்தில் அதே வேலையை இன்னொருவர் பணிபுரியலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

work hard, learn more and save: Expert advice for IT staff

Amidst the slow pace of growth in the IT industry, employees must constantly develop their skills. Only then can you go to the next places. Even if you are fired, you can move on to the next job
Story first published: Monday, November 14, 2022, 18:29 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X