இந்தியாவில் கொரோனா தொற்று மூலம் அதிகளவில் பாதிப்பை அடைந்துள்ள MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் சுமார் 500 மில்லியன் டாலர் அளவிலான தொகை கொண்ட கடன் உதவி திட்டத்திற்கு உலக வங்கியின் நிர்வாக இயக்குனர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்திய வர்த்தகச் சந்தையின் முதுகெலும்பு என்றால் அது MSME நிறுவனங்கள் தான், இந்தக் கொரோனா தொற்று மூலம் பல லட்சம் சிறு,குறு,நடுத்தர நிறுவனங்கள் வர்த்தகத்தை இழந்து, வருமானத்தை இழந்து நிறுவனத்தை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.
இந்தச் சூழ்நிலையில் மத்திய அரசு ஏற்கனவே MSME நிறுவனங்களுக்கு உதவும் வகையில் 3.4 பில்லியன் டாலர் அளவிலான தொகை ஒதுக்கீடு செய்துள்ள வேளையில், தற்போது உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ள 500 மில்லியன் டாலர் மதிப்பிலான நிதியுதவி திட்டம் நாட்டில் இருக்கும் 555,000 MSME நிறுவனங்கள் பலன் பெரும்.
இதற்கு முன் உலக வங்கி ஜூலை 2020ல் அவசர நிதியுதவியாகச் சுமார் 750மில்லியன் டாலர் அளவிலான தொகையை அளித்த நிலையில், தற்போது புதிதாக 2வது முறை நிதியுதவியாக 500 மில்லியன் டாலர் அளவிலான தொகையை அளித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் 5.8 கோடி MSME நிறுவனங்கள் அதில் சுமார் 40 சதவீத நிறுவனங்கள் நிலையான நிதி உதவிகள் பெற முடியாமல் உள்ளது. இந்தியாவின் மொத்த ஜிடிபி-யில் 30 சதவீதமும், 40 சதவீத ஏற்றுமதியும் MSME நிறுவனங்களை மட்டுமே நம்பியுள்ளது.
இந்தியா தற்போது பெற்றுள்ள 500 மில்லியன் டாலர் கடனாக IBRD வங்கியில் இருந்து பெற்றுள்ளது. இந்தத் தொகையை 18.5 வருடத்திற்குள் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications