ரெசசன் கன்பார்ம்.. போட்டி போட்டுக் கொண்டு கணிப்பினை வெளியிடும் IMF, உலக வங்கி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக வங்கி ரெசசன் குறித்த கவலையினை எழுப்பியுள்ளது. 2023ல் சர்வதேச பொருளாதாரம் என்பது மோசமான நிலையில் இருந்து வரும் நிலையில், இது ரெசசனை ஊக்குவிக்கும் என உலக வங்கி கவலை தெரிவித்துள்ளது.

குறிப்பாக சிறிய மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படக் கூடும் என எச்சரித்துள்ளது. தொடர்ந்து இரண்டு வருட பொருளாதார வாய்ப்புகள் குறித்தான எச்சரிக்கையில் இந்த கருத்தினை உலக வங்கி தெரிவித்துள்ளது.

ரெசசன் அச்சத்திலும் ஐடி துறையில் இப்படி ஒரு பிரச்சனை.. எப்போது தான் சரியாகும்? ரெசசன் அச்சத்திலும் ஐடி துறையில் இப்படி ஒரு பிரச்சனை.. எப்போது தான் சரியாகும்?

ரெசசன் அச்சம்

ரெசசன் அச்சம்

மற்றொரு நெருக்கடி என்பது இல்லாவிட்டாலும், இந்த ஆண்டு உலக வளர்ச்சியானது மோசமான பணவீக்கம், மோசமான நிதி புழக்கம், ரஷ்யா உக்ரைன் பிரச்சனை என பல இடையூறுகள் என பலவும் மோசமான தாக்கத்தினை ஏற்படுத்தலாம். இது ரெசசனுக்கு வழிவகுக்கலாம் என கணித்துள்ளது.

எப்படி தடுப்பது?

எப்படி தடுப்பது?

அவசர முயற்சிகள் மற்றும் தேசிய அளவிலான முயற்சிகள் என்பன பலவும், வீழ்ச்சியின் அபாயத்தினை பாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடன் நெருக்கடியினை குறைக்க வேண்டும். முதலீட்டு வளர்ச்சியினை ஊக்குவிக்க வேண்டும். இது சர்வதேச அளவிலான வளர்ச்சியினை ஊக்குவிக்கலாம்.

வளர்ச்சியினை ஆதரிக்கணும்
 

வளர்ச்சியினை ஆதரிக்கணும்

தொடர்ந்து பாதிக்கப்படும் நாடுகள் கவனம் செலுத்த வேண்டும். பணவீக்கத்தினை குறைக்க தொடர்ந்து நெகிழ்வுடன் செயல்பட வேண்டும். பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகள் பணவீக்கத்தினை குறைக்க, ஆக்ரோஷமான வட்டி அதிகரிப்பினை செய்கின்றன. எனினும் அரசுகள் இதில் இருந்து மக்களை காப்பாற்ற பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. இது வளர்ச்சியினை ஆதரிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் எச்சரிக்கை

முன்னதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டாலினா ஜார்ஜுவா, 2023ம் ஆண்டு கடினமான ஒரு ஆண்டாக தொடங்கியுள்ளது. இது கடினமாக இருக்கலாம். உலக பொருளாதாரத்தில் மூன்றில் ஒரு பங்கு ரெசசனை எட்டலாம். ஏனெனில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் சீனா உள்ளிட்ட நாடுகள் மெதுவான வளர்ச்சியினை எட்டியுள்ளன என கூறியிருந்தது.

ரெசசன் விளிம்பில் உள்ள நாடுகள்

ரெசசன் விளிம்பில் உள்ள நாடுகள்

அதுமட்டும் அல்ல ரெசசன் அச்சம் இல்லாத நாடுகள் கூட லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படலாம் என எச்சரித்திருந்தார், குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் மந்த நிலையினை தவிர்க்க முடியாது. அமெரிக்கா ரெசசனின் விளிம்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். சீனாவில் தற்போது கொரோனாவின் தாக்கம் இருந்து வரும் நிலையில், இதுவும் பொருளாதாரத்தில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மந்த நிலையால் என்ன பிரச்சனை?

மந்த நிலையால் என்ன பிரச்சனை?

தொடர்ந்து ஏற்படும் மந்த நிலைக்கு மத்தியில் முதலீடுகள் குறையலாம். ஏற்கனவே முதலீடு செய்ததை கூட முதலீட்டாளர்கள் திரும்ப பெற தொடங்கலாம். மேலும் அன்னிய செலவாணியில் தாக்கம் இருக்கலாம். நாடுகளின் கரன்சி மதிப்பானது சரிவினைக் காணலாம். கடன்கள் மீதான வட்டி விகிதம் என்பது அதிகரிக்கலாம். விலைவாசியும் அதிகரிக்க வழிவகுக்கலாம். மொத்தத்தில் மேற்கொண்டு கீழ்தட்டு மக்கள் மேற்கொண்டு பிரச்சனையை எதிர்கொள்ளலாம்.

இந்தியாவின் கணிப்பு

இந்தியாவின் கணிப்பு

எனினும் இந்த சவாலான காலகட்டத்திலும் இந்தியாவின் வளர்ச்சி விகிதமானது நடப்பு நிதியாண்டில் 7% ஆக வளர்ச்சி காணலாம் என தேசிய புள்ளியியல் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டில் பொருளாதார வளர்ச்சி 8.7% ஆக இருக்கலாம் என கணித்துள்ளது. இது ரெசசன் அச்சத்தில் மத்தியில் மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: recession ரெசசன்
English summary

World bank to alert of global recession risk in economic outlook

World bank to alert of global recession risk in economic outlook
Story first published: Sunday, January 8, 2023, 21:27 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X