பெட்டி கடைக்கு ரூ. 3 கோடி வாடகை! உலகின் டாப் 20 காஸ்ட்லி சாலைகள் பட்டியலில் வந்த இந்திய சாலை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக அளவில் பணக்கார நாடுகள், பணக்காரர்கள், பணக்காரர்கள் வசிக்கும் இடம், அதிகம் செலவழித்து வீடு கட்டி இருக்கும் பணக்காரர்கள், பணக்காரர்கள் வைத்திருக்கும் கார்கள் என பல சுவாரஸ்யமான பட்டியல்கள் நம்மிடம் இருக்கின்றன.

 

ஆனால் உலகிலேயே காஸ்ட்லியான சாலைகளைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா..? இதில் காஸ்ட்லி எனக் குறிப்பிடுவது... இந்த இடத்தில் வாடகைக்கு கடை எடுப்பதற்கு பூர்வீக சொத்துக்களை எல்லாம் விற்க வேண்டும்.

இந்த பட்டியலில் இடம் பிடித்து இருக்கும், சாலைகளில் வாடகைக்கு ஒரு கடை எடுக்க வேண்டும் என்றால்... அத்தனை செலவு பிடிக்கும். அப்படி கடைகளுக்கு செலுத்தும் வாடகை அடிப்படையில் தான், இந்த பட்டியலைத் தயார் செய்து இருக்கிறார்கள்.

கடை

கடை

பொதுவாக ஒரு கடையை நடத்த தோதான இடம், நல்ல காற்றோட்டம், சுத்தமான சூழல், தண்ணீர் வசதி என பிரச்னை இல்லாத சூழல், அதிகம் வாடிக்கையாளர்கள் வந்து போகும் இடமாக இருப்பது என பல விஷயங்கள் முக்கியம். குறிப்பாக அந்த ஏரியாவுக்கு வந்து போகும் மக்கள் என்ன மாதிரியான வாழ்க்கை தரத்தில் வாழ்பவர்கள் என்பதைப் பொறுத்து தான் அங்கு என்ன மாதிரியான பொருட்கள் விற்க முடியும் என்பதையும் பார்க்க முடியும்.

பட்டியல்

பட்டியல்

Main Streets Across the World 2019 என்கிற பட்டியலை குஷ்மென் & வேக்ஃபீல்ட் (Cushman & Wakefield) என்கிற நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் ஹாங்காங் நகரத்தின் காஸ்வே பே (Causeway Bay) என்கிற பகுதியில், ஒரு ஆண்டுக்கு ஒரு சதுர அடிக்கு 2,745 டாலர் கொடுக்க வேண்டுமாம். அப்படி என்றால் இந்திய மதிப்பில் 1,92,150 ரூபாய்.

கணக்கு
 

கணக்கு

அப்படி என்றால் 156 சதுர அடிக்கு காஸ்வே பே பகுதியில் ஒரு பெட்டிக் கடை போட வேண்டும் என்றால் கூட1,92,150 * 156 = 2.99 கோடி ரூபாய், ஆண்டு வாடகையாக செலவழிக்க வேண்டும். எனவே உலகிலேயே காஸ்ட்லியான சாலை என்கிற பெயரை தட்டிச் செல்கிறது ஹாங் காங்கின் காஸ்வே பே.

அமெரிக்கா

அமெரிக்கா

பணக்காரர்கள், காஸ்ட்லி என்றால் அமெரிக்கா இல்லாமலா..? இதோ இருக்கிறதே நியூ யார்க்கின் அப்பர் 5th அவென்யூ தான் உலகின், இரண்டாவது காஸ்ட்லியான தெரு. இங்கு ஒரு சதுர அடிக்கு ஆண்டுக்கு 2,250 டாலர் வாடகை கொடுக்க வேண்டும். இந்திய மதிப்பில் ஒரு சதுர அடிக்கு ஆண்டு வாடகை 1.57 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.

அடுத்தடுத்த இடங்கள்

அடுத்தடுத்த இடங்கள்

முதல் இரண்டு இடங்கள் போக

3வது இடத்தில் - லண்டன் நகரத்தின் நியூ பாண்ட் ஸ்ட்ரீட் (ஒரு சதுர அடிக்கு, ஒரு ஆண்டுக்கு 1,714 டாலர்)

4-வது இடத்தில் - பாரிஸ் நகரத்தின் சாம்ஸ் எலைசீஸ் (ஒரு சதுர அடிக்கு, ஒரு ஆண்டுக்கு 1,478 டாலர்)

5-வது இடத்தில் - இத்தாலி நகரத்தின் வியா மொண்டெனாபொலியோன் (ஒரு சதுர அடிக்கு, ஒரு ஆண்டுக்கு 1,447 டாலர்) என இடம் பிடித்து இருக்கின்றன.

இந்தியா

இந்தியா

உலகின் டாப் 20 காஸ்ட்லி சாலைகள் பட்டியலில் இடம் பிடித்த ஒரே சாலை டெல்லி கான் மார்க்கெட் தான். இந்த கான் மார்க்கெட் பகுதியில் ஒரு சதுர அடிக்கு, ஒரு ஆண்டுக்கு 243 டாலர் வாடகையாக கொடுக்க வேண்டும். இந்திய மதிப்பில், ஒரு சதுர அடிக்கு ஒரு ஆண்டுக்கு 17,000 ரூபாய் கொடுக்க வேண்டுமாம். இப்படித் தான் நம் இந்திய சாலையும் உலகின் காஸ்ட்லியான சாலைகளில் ஒன்றாக இடம் பிடித்து இருக்கிறது.

டெல்லி

டெல்லி

இந்த டெல்லி கான் மார்க்கெட் பகுதியில், ஒரு 100 சதுர அடிக்கு ஒரு பானி பூரி கடை போட வேண்டும் என்றால் கூட, ஆண்டுக்கு 17,000 * 100 = 17,00,000 ரூபாய் வாடகையாக செலவழிக்க வேண்டும். அதாங்க வருஷத்துக்கு 17 லட்சம் ரூபாய். நீங்கள் டெல்லி கான் மார்க்கெட் பகுதியில், ஆரம்பிக்கும் பானி பூரி கடையில் கிடைக்கும் வருமானத்தில் 17 லட்சம் ரூபாய் வாடகை போக, ஏதாவது கையில் நிற்குமா..? என்பதை நீங்களே கணக்கு செய்து பாருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World costliest streets by cushman and wakefield delhi khan market 20th

The Consultant released Main streets Across the world 2019 released by cushman and wakefield. In this list the delhi khan market list as 20th one.
Story first published: Monday, November 25, 2019, 19:28 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X