கொரோனாவை தூக்கி சாப்பிட்ட ஜெப் பெசோஸ்.. பணக்காரர்கள் பட்டியலில் ஆச்சரியம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொரோனா-வின் தாக்கத்தின் காரணமாக வல்லரசு நாடுகள் முதல் ஏழை நாடுகள் வரையில் அனைவரும் கடுமையான பொருளாதாரச் சரிவைச் சந்தித்து வருகிறது எல்லோருக்கும் தெரியும். பணக்காரர்கள் முதல் சாமானியர்கள் வரையில் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் எனத் தவித்து வருகின்றனர்.

பணக்காரர்களை கதற விடும் கொரோனா! டிமிக்கி கொடுத்த Amazon

இந்த மோசமான நேரத்தில் ஒருவரின் சொத்து மதிப்பு மட்டும் உயர்ந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடியுமா..?

அமெரிக்காவிற்கு அவரச கோரிக்கை.. பயத்தில் இந்திய ஐடி ஊழியர்கள்..!

அமேசான் ஜெப் பெசோஸ்
 

அமேசான் ஜெப் பெசோஸ்

அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு உலகம் முழுவதும் ஆன்லைன் ஷாப்பிங் சேவை வழங்கும் அமேசான் நிறுவனத்தின் தலைவர் ஜெப் பெசோஸ்அவர்களின் சொத்து மதிப்பு மட்டும் உயர்ந்துள்ளது.

சாமானியர்களுக்கு அடுத்த 3 மாதம் முழுமையாகச் சம்பளம் வருமா என நிறுவனங்களை எதிர்நோக்கிக் காத்துக்கொண்டு இருக்கும் இச்சூழ்நிலையில் ஜெப் பெசோஸ்-இன் மொத்த சொத்து மதிப்பு மட்டும் 2020ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 5.9 பில்லியன் டாலர் வரையில் உயர்ந்துள்ளது.

ஆச்சரியம்

ஆச்சரியம்

இதில் என்ன ஆச்சரியம் என்றால், உலகின் டாப் 20 பெரும் பணக்காரர்கள் பட்டியில் அனைவருமே வர்த்தகச் சரிவின் காரணமாகச் சொத்து மதிப்பில் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்ட நிலையில் ஜெப் பெசோஸ்-இன் சொத்து மதிப்பு மட்டும் உயர்ந்துள்ளது.

இது பணக்காரர்களை மட்டுமல்லாமல் பல நாடுகளையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.

 மார்ச் 31

மார்ச் 31

2020ஆம் ஆண்டின் முதல் 3 மாத காலத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகளவில் இருந்தது அனைவருக்குமே தெரியும், முதலில் மக்கள் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் சீனாவில் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கிய அதே வேளையில் உலக நாடுகளிலும் இது பரவத் துவங்கியது.

அடுத்தடுத்து சில வாரங்களில் தென் கொரியா, இத்தாலி, அமெரிக்கா, இந்தியா போன்ற முக்கியமான பொருளாதார நாடுகளை அதிகளவில் பாதித்தது. இதனால் சர்வதேச பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதித்தது.

டாப் 10 பணக்காரர்கள்
 

டாப் 10 பணக்காரர்கள்

இந்த 3 மாத காலகட்டத்தில் பில் கேட்ஸ் 15.2 பில்லியன் டாலர், பெர்னார்டு அர்னால்ட் 30.7 பில்லியன் டாலர், வாரன் பபெட் 18.8 பில்லியன் டாலர், மார்க் ஜூக்கர்பெர்க் 18.2 பில்லியன் டாலர், லேரி எலிசன் 3.14 பில்லியன் டாலர், ஸ்டீவ் பால்மர் 2.99 பில்லியன் டாலர், லேரி பேஜ் 10.1 பில்லியன் டாலர், அமான்சியோ ஆர்டிகோ 21.1 பில்லியன் டாலர் ஆகிய முன்னணி பணக்காரர்கள் எதிர்பார்க்காத அளவிற்குச் சொத்து மதிப்பில் சரிவை சந்தித்தனர்.

அட நம்ம ஊரு முகேஷ் அம்பானியின் சொத்தி மதிப்பு கூட 19 பில்லியன் டாலர் வரையில் சரிந்துள்ளது.

 2.35 பில்லியன் டாலர்

2.35 பில்லியன் டாலர்

ஆனால் ஜெப் பிசோஸ்-இன் சொத்து மதிப்பு இந்த 3 மாத காலத்தில் மட்டும் மொத்தமாக 5.9 பில்லியன் டாலர் வபரையில் உயர்ந்து, கொரோனா தாக்கத்தால் 3.08 பில்லியன் டாலர் சரிந்தது. இதனால் இவரது சொத்து மதிப்பு இக்காலகட்டத்தில் மட்டும் 2.35 பில்லியன் டாலர் உயர்ந்துள்ளது

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

World wealthiest people are losing billions due to corona - except Jeff Bezos

Amazon CEO Jeff Bezos is the only one of the world's five richest people that hasn't lost money in 2020, the Bloomberg Billionaires Index shows.Bezos made nearly $6 billion in the past three months, bringing his total net worth to $121 billion.Since being identified in Wuhan, China, in December, the virus has infected over 820,000 people and killed more than 40,000 across the globe.
Story first published: Thursday, April 2, 2020, 6:42 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X