உலகிலேயே வாழ்வதற்கு எது காஸ்ட்லியான நகரம்.. மலிவான நகரம் எது..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் வாழ்வதற்கான வாழ்க்கை செலவு மிகவும் அதிகமான நகரங்களில் இஸ்ரேல் நாட்டின் டெல் அவீவ் முதலிடத்தில் உள்ளது.

 

இது குறித்து Economist Intelligence Unit (EIU) அமைப்பு, Worldwide Cost of Living index 2021 என்ற ஆய்வினை நடத்தியுள்ளது.

இந்த ஆய்வு வாழ்வதற்கான அடிப்படை செலவில் ஏற்படும் அடிப்படை மாற்றங்களை பிரதிபலிக்கிறது. 2021ல் உலகத்திலேயே முதல் காஸ்ட்லியான நகரம் என இஸ்ரேலின் டெல் அவீவ் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.

வருடத்திற்கு ரூ.2 கோடிக்கு மேல் சம்பளம்.. ஐஐடி கேம்பஸில் தூள் கிளப்பிய இந்திய மாணவர்கள்..!

இஸ்ரேலின் டெல் அவீவ்

இஸ்ரேலின் டெல் அவீவ்

கடந்த ஆண்டில் ஐந்தாவது இடத்தில் இருந்த டெல் அவீவ் இந்த ஆண்டு முதலிடத்தில் உள்ளது. இது கொரோனா காரணமாக சப்ளை சங்கிலியில் ஏற்பட்ட பிரச்சனைகள், தடைகள், தட்டுப்பாடுகள், காரணமாக அதிகரித்த விலை வாசி, அன்னிய பணபரிமாற்ற விகிதம், அதன் நாணயத்தின் மதிப்பு 25 வருடங்களில் இல்லாத அளவு உச்சத்தினை எட்டியது உள்ளிட்ட பல காரணிகளும், நுகர்வோரின் வாழ்க்கை செலவினங்களை அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது.

Array

Array

பிரான்சின் பாரீஸ் நகரம் இந்த ஆண்டில் இரண்டாம் இடத்தினை பிடித்துள்ளது. இது கடந்த ஆண்டில் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதே இரண்டாவது இடத்தினை மற்றொரு நாடான சிங்கப்பூரும் இடம் பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்தினை சேர்ந்த சூரிச்
 

சுவிட்சர்லாந்தினை சேர்ந்த சூரிச்

இதே சுவிட்சர்லாந்தினை சேர்ந்த சூரிச் நகரம் நான்காவது இடத்தினை பிடித்துள்ளது.

சுவிட்சர்லாந்தில் அதிகரித்து வரும் புதிய வகை கொரோனா வழக்குகளுக்கு மத்தியில், கடுமையான கட்டுப்பாடுகளை பரிசீலித்து வருவதாக தெரிகின்றது.

5வது இடத்தில் ஹாங்காங்

5வது இடத்தில் ஹாங்காங்

ஹாங்காங் நகரம் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இது அந்த நகரத்தில் ஆடைகள் மற்றும் பர்சனல் கேர் பொருட்களின் விலையானது குறைந்துள்ள நிலையில் ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த காஸ்ட்லியான நகரங்கள்

அடுத்தடுத்த காஸ்ட்லியான நகரங்கள்

நியூயார்க் நகரம் ஆறாவது இடத்திலும், ஜெனிவா ஏழாவது இடத்திலும், எட்டாவது இடத்தில் கோபன்ஹேகனும், ஒன்பதாவது இடத்தில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரமும், 10வது இடத்தில் ஜப்பானின் ஓசாகாவும் இடம் பெற்றுள்ளன.

மலிவான நகரங்கள் பட்டியல்

மலிவான நகரங்கள் பட்டியல்

இதில் சிரியாவின் டமாஸ்கஸ் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாவது இடத்தில் லிபியாவின் திரிப்பொலி

மூன்றாவது இடத்தில் உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட்

4வது இடத்தில் துனிசியா நாட்டின் துனிஷ்

5வது இடத்தில் கஜகஸ்தானின் அல்மாட்டி

6வது இடத்தில் பாகிஸ்தானி கராச்சி

7வது இடத்தில் இந்தியாவின் அகமதாபாத்

8வது இடத்தில் அல்ஜீரியாவின் அல்ஜியர்ஸ்

9வது இடத்தில் அர்ஜெண்டினாவின் பியூனஸ் அயர்ஸ்

10வது இடத்தில் ஜாம்பியாவின் லுசாக்கா

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Worldwide cost of living 2021 report: 10 most expensive & cheapest cities in the world

Worldwide cost of living 2021 report: 10 most expensive & cheapest cities in the world/ உலகிலேயே வாழ்வதற்கு எது காஸ்ட்லியான நகரம்.. மலிவான நகரம் எது.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X