ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.93%..கொஞ்சம் பெட்டர் தான்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மத்திய வங்கிகளின் வட்டி அதிகரிப்பு நடவடிக்கையானது வீண்போகவில்லை என்றே கூறலாம். ஏனெனில் பணவீக்க விகிதமானது சற்றே சரியத் தொடங்கியுள்ளது.

இதற்கிடையில் இன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஜூலை மாதத்திற்கான மொத்த விலை பணவீக்க குறியீட்டினை வெளியிட்டுள்ளது.

இதன் படி ஜூலை மாதத்தில் 13.93% ஆக குறைந்துள்ளது. இது கடந்த ஜூன் மாதத்தில் 15.18% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இது முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், இன்னும் தொடர்ந்து 10% மேலாகவே இருந்து வருகின்றது.

மாதம் ரூ.2 லட்சம் வருமானம்.. ஆட்டோ டிரக்கினையே பீட்சா ஹப்பாக மாற்றிய மொஹபத் .. ! மாதம் ரூ.2 லட்சம் வருமானம்.. ஆட்டோ டிரக்கினையே பீட்சா ஹப்பாக மாற்றிய மொஹபத் .. !

ரிசர்வ் வங்கி + அரசின் நடவடிக்கை

ரிசர்வ் வங்கி + அரசின் நடவடிக்கை

பணவீக்கத்தினை குறைப்பதற்காக மத்திய ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தினை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. மறுபக்கம் விலையினை கட்டுக்குள் வைக்க எண்ணெய் உள்ளிட்ட சிலவற்றிற்கு இறக்குமதி வரியில் சலுகை அறிவித்தது. ஆக அரசின் இந்த நடவடிக்கையும், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையும் நிச்சயம் கைகொடுத்துள்ளது எனலாம்.

இதுவும் ஒரு காரணம்

இதுவும் ஒரு காரணம்

மேற்கண்ட பல்வேறு முயற்சிகளின் மத்தியில் சமையல் எண்ணெய், உணவு பொருட்கள் விலை, பல உற்பத்தி பொருட்களின் விலையும் மிதமாகத் தொடங்கியுள்ளது. இதுவே மொத்த விலை பணவீக்கம் சரிவுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

என்ன காரணம்?
 

என்ன காரணம்?

இந்த பணவீக்கத்திற்கு உணவு பொருட்கள் விலை, கச்சா எண்ணெய் விலை, பெட்ரோலியம் பொருட்கள், இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள், மின்சாரம், கெமிக்கல் மற்றும் கெமிக்கல் பொருட்கள், உணவு பொருட்கள் உள்ளிட்டவையும் இதில் அடங்கும்.

ஜூன் Vs ஜூலை மாத நிலவரம்

ஜூன் Vs ஜூலை மாத நிலவரம்

குறிப்பாக WPI உணவு பொருட்கள் அடிப்படையிலான பணவீக்கம் 12.41%ல் இருந்து ஜூலை மாதத்தில், 9.41% ஆக குறைந்துள்ளது. WPI உணவு குறியீடு ஜூன் மாதத்தில் 178.4லிருந்து, 174.4 ஆக குறைந்துள்ளது. இதே முதன்மை பொருட்களுக்கான குறியீடானது 182.4ல் இருந்து 2.69% குறைந்து, 177.5 ஆக குறைந்துள்ளது. இதே ஜூலை மாதத்தில் கணிமங்களின் விலை 0.96% குறைந்துள்ளது.

உணவு பொருட்கள்

உணவு பொருட்கள்

உணவு பொருட்கள் விலை -2.56%மும், உணவு பொருட்கள் அல்லாத பொருட்கள் விலை -2.61% , கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு விலை -5.05%மும் ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது விலை குறைந்துள்ளன.

இதே எரிபொருள் மற்றும் பவர் இன்டெக்ஸ் ஆனது எல்பிஜி, பெட்ரோலியம், உள்ளிட்டவற்றின் விகிதமும் குறைந்துள்ளது. இதே உற்பத்தி துறை சார்ந்த குறியீடானது 0.42% குறைந்துள்ளது.

ஹேப்பி நியூஸ்.. சில்லறை பணவீக்கம் 6.71% ஆக சரிவு..! ஹேப்பி நியூஸ்.. சில்லறை பணவீக்கம் 6.71% ஆக சரிவு..!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WPI inflation eases to 13.93% in july month

WPI inflation eases to 13.93% in july month/ஜூலை மாதத்தில் மொத்த விலை பணவீக்கம் 13.93%..கொஞ்சம் பெட்டர் தான்!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X