11 ஆண்டு உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. 10.49% ஆக அதிகரிப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நாட்டின் மொத்த விலை பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில், 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 10.49% ஆக அதிகரித்துள்ளது.

 

இதே கடந்த மாதத்தினை காட்டிலும் 3.83% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் இந்த பணவீக்க விகிதமானது 7.39 சதவீதமாக இருந்தது கவனிக்கதக்கது. இதுவே கடந்த ஆண்டில் இதே மாதத்தில் 0.58% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

11 ஆண்டு உச்சத்தில் மொத்த விலை பணவீக்கம்.. 10.49% ஆக அதிகரிப்பு..!

இது சர்வதேச சந்தையில் கமாடிட்டிகளின் விலை அதிகரித்துள்ள நிலையில், இந்த WPI பணவீக்க விகிதமானது இந்த அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது.

இதே ஏப்ரல் மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதமானது 4.92% அதிகரித்துள்ளது. இது உணவு பொருட்களின் விலை விகிதமானது குறைந்துள்ள நிலையில் சற்று குறைந்துள்ளது. எனினும் இது கடந்த மார்ச் மாதத்தில் 3.84% ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.

எரிபொருள் மற்றும் மின்சார பணவீக்கமானது 20.94% ஆக அதிகரித்துள்ளது. எனினும் கடந்த மார்ச் மாதத்துடன் ஒப்பிடும்போது 1% சரிவினைக் கண்டுள்ளது. இதே உற்பத்தி பொருட்களின் பணவீக்கமானது 9.01% ஆகவும் அதிகரித்துள்ளது. இதுவே பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. உணவு பொருட்கள் அல்லாத பணவீக்கம் (Non-food particles inflation) 15.58% ஆகவும் அதிகரித்துள்ளது.

காய்கறிகளின் விலை மற்றும் உணவு பொருட்கள் விலை, முட்டை விலை, இறைச்சி விலை குறைந்துள்ள நிலையில், இது பணவீக்க விகிதத்தினை சற்று குறைத்துள்ளது. எப்படியிருப்பினும் நிபுணர்கள் 9.35% ஆக இந்த மொத்த விலை பணவீக்கத்தினை எதிர்பார்த்த நிலையில், இது எதிர்பார்ப்பினை விட சற்று அதிகரித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் 2010க்கு பிறகு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

இது நடப்பு மாதத்தில் மொத்த விலை பணவீக்க விகிதமானது 13 -13.5% ஆக அதிகரிக்கலாம் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WPI inflation rises to 10.49% in last april 2021

WPI updates.. WPI inflation rises to 10.49% in last april 2021
Story first published: Monday, May 17, 2021, 19:04 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X