Omicron வைரஸ் எதிரொலி.. உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் ஒத்திவைப்பு..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உலக நாடுகளில் பரவி வரும் B.1.1529 ரக கொரோனா வைரஸ்-க்குத் தற்போது Omicron வைரஸ் எனப் பெயரிடப்பட்டு உள்ளது. இப்புதிய வைரஸ் தொற்றுத் தற்போது போட்ஸ்வானா, தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் பரவி உள்ள வேளையில் உலக நாடுகள் இந்த வைரஸ் பரவலை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது.

இந்தச் சூழ்நிலையில் மிகப்பெரிய வர்த்தக மாநாடு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

 அமெரிக்கா - இந்தியா: 2% சரிநிகர் வரி விதிக்க முடிவு..! அமெரிக்கா - இந்தியா: 2% சரிநிகர் வரி விதிக்க முடிவு..!

 Omicron வைரஸ்

Omicron வைரஸ்

ஆம், 4 வருடங்களுக்குப் பின்பு பல முக்கிய விஷயங்களை விவாதிக்க வேண்டிய திட்டத்துடன் உலக வர்த்தக அமைப்பின் அமைச்சர்கள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. Omicron வைரஸ் பரவலின் எதிரொலியாகக் கடைசி நேரத்தில் இந்தக் கூட்டம் ஒத்துவைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

 WTO கூட்டம்

WTO கூட்டம்

4 வருடங்களாக எவ்விதமான முக்கிய முடிவுகளையும் எடுக்க முடியாமல் இருந்த நிலையில் தான் ஜெனிவா-வில் 4 நாள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் இக்கூட்டம் நடப்பதற்கு 4 நாட்கள் முன்னர் திடீரென WTO கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.

ஒத்திவைப்பு

ஒத்திவைப்பு

இதுகுறித்து உலக வர்த்தக அமைப்பின் தலைவர் Anabel Gonzalez இக்கூட்டம் 164 உறுப்பினர்களின் ஒப்புதலுக்கு இணங்க ஒத்திவைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. அனைத்து தரப்புக்கும் சாதகமான முடிவை எடுத்துள்ளோம் எனவும் Anabel Gonzalez கூறியுள்ளார்.

 கஜகஸ்தான்

கஜகஸ்தான்

உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் 2 வருடத்திற்கு ஒரு முறை நடக்கும், ஜூன் 2020ல் கஜகஸ்தானின் தலைநகர் நூர் சுல்தான்-ல் நடக்க வேண்டிய கூட்டம் கோவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக நடக்கவில்லை.

 100 நாடுகளின் அமைச்சர்

100 நாடுகளின் அமைச்சர்

தற்போது ஜெனிவாவில் நடக்க இருந்த கூட்டத்தில் 100க்கும் அதிகமான உலக நாடுகளின் அமைச்சர்கள் மற்றும் 4000 பேர் அதிகாரிகள் கலந்துகொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட காரணத்தால் 4 வருடங்களாக WTO கூட்டம் நடக்காமல் உள்ளது.

 விமானங்களுக்குத் தற்காலிக தடை

விமானங்களுக்குத் தற்காலிக தடை

உலக நாடுகளில் புதிதாகப் பரவி வரும் Omicron வைரஸ் மற்றும் அதன் தன்மையை உலகச் சுகாதார அமைப்பு அறிவிப்பு வெளியிட்ட பின்பு WTO கூட்டம் ஒத்திவைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. தற்போது இந்த வைரஸ் பரவும் பயத்தால் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்களுக்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டு வருகிறது.

 பங்குச்சந்தை மற்றும் கச்சா எண்ணெய்

பங்குச்சந்தை மற்றும் கச்சா எண்ணெய்

Omicron வைரஸ் பரவல் செய்தி மூலம் பங்குச்சந்தை மற்றும் கச்சா எண்ணெய் விலை பெரிய அளவிலான மாற்றத்தை எதிர்கொண்டு உள்ளது. புதிய வைரஸ் தொற்றுப் பரவத் துவங்கினால் கடந்த ஒரு வருடம் சர்வதேச பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியை உலக நாடுகள் இழக்கக் கூடும்.

 Omicron வைரஸ்

Omicron வைரஸ்

மேலும் கோவிட் வேக்சின் நிறுவனங்கள் இந்தப் புதிய Omicron வைரஸ்-ஐ குறித்து ஆய்வு செய்யவும் துவங்கியுள்ளனர். உலக நாடுகளில் பரவி வரும் B.1.1529 ரக கோவிட் வைரஸ் அல்லது Omicron வைரஸ் மிகவும் அதிகப்படியான மியூடேஷன் கொண்ட வைரஸ் ஆக உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

WTO's big conference postponed due to new Omicron Covid variant

WTO's big conference postponed due to new Omicron Covid variantOmicron வைரஸ் எதிரொலி.. உலக வர்த்தக அமைப்பின் கூட்டம் ஒத்திவைப்பு..!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X