Year end 2021: ரூ.30,000-க்குள் சிறந்த போன் எது.. நீங்க என்ன ஸ்மார்ட்போன் வச்சிருக்கீங்க..?

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நடப்பு ஆண்டு முடிவடைய இன்னும் சில தினங்களே உள்ளன. இது பலருக்கும் மறக்க முடியாத ஒரு ஆண்டாகவே இருந்திருக்கும். ஏனெனில் கொரோனாவின் தாக்கம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மக்களை படாதபாடி படுத்தி எடுத்து விட்டது எனலாம்.

எனினும் நடப்பு ஆண்டில் நடந்த நல்ல விஷயம் என்னவெனில் ஒவ்வொரு துறையிலும் டிஜிட்டல் தேவையானது அதிகரித்துள்ளது. குறிப்பாக நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தே பணியாற்ற கூறுகின்றன.

பல நிறுவனங்களின் கூட்டங்களும் விர்சுவல் ரீதியாகவே நடந்து வருகின்றன. இன்றளவிலும் கூட, பல நிறுவனங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்து பணியாற்ற கூறி வருகின்றன.

ரூ.30,000 கீழான ஸ்மார்ட்போன்

ரூ.30,000 கீழான ஸ்மார்ட்போன்

இவ்வாறு டிஜிட்டல் தேவையானது அதிகரித்து வரும் நிலையில் ஸ்மார்ட்போன், லேப்டாப் என பலவற்றின் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இதற்கிடையில் நடப்பு ஆண்டில் 30,000 ரூபாய்க்கு கீழான சிறந்த ஸ்மார்ட்போன்களைத் தான் இன்று நாம் பார்க்கவிருக்கிறோம்.

குறிப்பாக முன்னணி பிராண்டாக இருக்கும் ஜியோமி, ஒன்பிளஸ், ரியல்மி, சாம்சங், மோட்டோ உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள் பற்றித் தான் இதில் பார்க்க இருக்கிறோம்.

விலையிலும் பெரும் மாற்றம்

விலையிலும் பெரும் மாற்றம்

நடப்பு ஆண்டில் கொரோனாவின் மத்தியிலும் கூட பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதுவும் 5ஜி சப்போர்ட் செய்யும் அளவுக்கு ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் செமிகண்டக்டர் பற்றாக்குறை, சிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணிகளினால் விலையிலும் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

சாம்சங் கேலக்ஸி M52 5G
 

சாம்சங் கேலக்ஸி M52 5G

எனினும் நாம் தற்போது பார்க்கவிருக்கும் ஸ்மார்ட்போன்களின் விலை சற்று மாறுபடலாம். ஏனெனில் இது வருட இறுதியாதலால் பல ஸ்மார்ட்போன்களுக்கு இயர் என்ட் ஆஃபர் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் விலையில் சற்று மாற்றம் இருக்கலாம்.

சாம்சங் கேலக்ஸி M52 5G- இந்த போனின் விலையானது 29,999 ரூபாயில் இருந்து ஆரம்பமாகின்றது. 5,000 mAh பேட்டரி திறனுடைய இந்த போன் 6.67 இன்ச் - HD+ AMOLED ஸ்கிரீன் உடைய போன் ஆகும்

ஒன்பிளஸ் Nord 2 5G

ஒன்பிளஸ் Nord 2 5G

ஒன்பிளஸ் Nord 2 5G இந்த ஸ்மார்ட்போனின் விலையும் 29,999 ரூபாயாகும். இது 6.2 இன்ச் - HD - Amoled டிஸ்பிளே கொண்ட போனாகும். 50 மெகாபிக்ஸட் திறன் கொண்ட டிரிபிள் கேமாராவினை கொண்டுள்ளது. இந்த போனும் 4,500 mAh பேட்டரி திறனுடைய ஸ்மார்ட்போனாகும்.

 போகோ F3 GT 5G

போகோ F3 GT 5G

போகோ F3 GT 5G ஸ்மார்ட்போன் 5,065 mAh பேட்டரி திறனும், 67W அளவில் மிக வேகமாக பேட்டரி சார்ஜ் ஏறும் திறனும் கொண்டது. இது 8ஜிபி ரேம், 256ஜிபி வரையில் ஸ்டோரேஜ் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலையானது 28,999 ரூபாயாகும்.

மோட்டோ எட்ஜ் 20

மோட்டோ எட்ஜ் 20

மோட்டோ எட்ஜ் 20 ஸ்மார்ட்போன் ஆனது 29,999 ரூபாயாகும். இது 4,000 mAh பேட்டரி திறனுடைய போன் ஆகும். இதிலும் 8ஜிபி ரேம் வரையில் பெற்றுக் கொள்ளலாம். 108 மெகா பிக்சல் கேமராவினை கொண்டுள்ளது. இது 6.7இன்ச் கொண்ட ஹெச் டி டிஸ்பிளேவினை கொண்டுள்ளது.

ஜியோமி Mi 11X 5G

ஜியோமி Mi 11X 5G

ஜியோமி Mi 11X 5G விலையானது 29,999 ரூபாயாகும். இதன் 6.67இன்ச் - fuLL HD - E4 AMOLED டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. 4,520 mAh பேட்டரி திறனுடைய ஸ்மார்ட்போனாகும்.33w அளவுக்கு வேகமாக சார்ஜிங் ஏறும் திறன் கொண்டது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: year end 2021
English summary

Year end 2021: Best Smart phones under Rs.30,000

Year end 2021: Best Smart phones under Rs.30,000/Year end 2021: ரூ.30,000-க்குள் சிறந்த போன் எது.. நீங்க என்ன ஸ்மார்ட்போன் வச்சிருக்கீங்க..?
Story first published: Sunday, December 19, 2021, 18:15 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X