விஸ்வரூபம் எடுக்கும் யெஸ் வங்கி DHFL கடன் மோசடி.. சிபிஐ அதிரடி சோதனை..! முழு விபரம்

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்திய வங்கிகளில் தொடர்ந்து கடன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில் தற்போது யெஸ் வங்கி DHFL கடன் மோசடி வழக்கு மிகப்பெரியதாக வெடித்துள்ளது.

யெஸ் வங்கி DHFL கடன் மோசடி வழக்கு தொடர்பாக அஷ்வினி போன்சலே, ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா உள்ளிட்ட பல முக்கியத் தொழிலதிபர்களுக்குச் சொந்தமாக மகாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை மற்றும் புனே மாவட்டங்களில் உள்ள வீடுகளில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) சனிக்கிழமை சோதனை நடத்தியது.

ரூ.52 லட்சம் கோடி இழப்பு.. 2035 வரையில் மீண்டு வர முடியாது.. ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்..! ரூ.52 லட்சம் கோடி இழப்பு.. 2035 வரையில் மீண்டு வர முடியாது.. ரிசர்வ் வங்கி ரிப்போர்ட்..!

யெஸ் வங்கி - டிஎச்எஃப்எல்

யெஸ் வங்கி - டிஎச்எஃப்எல்

யெஸ் வங்கி - டிஎச்எஃப்எல் 3700 கோடி ரூபாய் கடன் மோசடி வழக்கு தொடர்பாக அவினாஷ் போசேலே இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (ஏபிஐஎல்) குழும நிறுவனங்களின் ப்ரோடோடர் அவினாஷ் போசலே -வுக்குச் சொந்தமான வீடு, அலுவலகம் ஆகியவற்றில் சிபிஐ தலைமையகத்தைச் சேர்ந்த குழுவும், மகாராஷ்டிர மாநில பிரிவுடன் இணைந்து சோதனை நடத்தியது.

 ராணா கபூர்

ராணா கபூர்

சில ஆண்டுகளுக்கு முன்பு, ராணா கபூர் தலைமையிலான யெஸ் வங்கியில் இருந்து டிஎச்எஃப்எல் பெற்ற ரூ.3,700 கோடியில் கணிசமான பகுதி ரேடியஸ் குழுமத்திற்குத் திருப்பி விடப்பட்டதைச் சிபிஐ அறிந்தது. பின்னர், டிஹெச்எஃப்எல் யெஸ் வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தவில்லை.

DHFL குழுமம்

DHFL குழுமம்

இதைத் தொடர்ந்து பாந்த்ரா ரெக்லமேஷனில் உள்ள குடிசை மறுவாழ்வுத் திட்டத்திற்காக DHFL குழும நிறுவனத்திற்குக் கூடுதலாக ரூ.750 கோடி கடனை யெஸ் வங்கி அனுமதித்தது. ஆனால் அந்தப் பணம் அந்தக் குறிப்பிட்ட திட்டத்திற்குப் பயன்படுத்தப்படவில்லை என்பதும் சிபிஐ விசாரணையில் தெரிய வந்தது.

ரூ. 750 கோடி கடன்

ரூ. 750 கோடி கடன்

ரேடியஸ் மற்றும் சுமர் குழுக்கள் சாண்டாக்ரூஸில் ஒரு கூட்டு முயற்சி திட்டத்தை உருவாக்கிக்கொண்டிருந்தன, அதற்காக அவர்கள் யெஸ் வங்கியில் ரூ. 750 கோடி கடன் வாங்கித் திருப்பிச் செலுத்துவதில் சிரமப்பட்டனர்.

கடன் திருப்புதல்

கடன் திருப்புதல்

இந்த நிலையில் யெஸ் பேங்கில் இருந்து DHFL பெற்ற ரூ.750 கோடி கடனில் இருந்து, 450 கோடி ரூபாயை ரேடியஸ்-சுமர் குழுமத்திற்கு அளித்தது DHFL, அந்தப் பணத்தை யெஸ் பேங்கிற்குச் செலுத்துவதற்குப் பயன்படுத்தியது.

கடன் மோசடி

கடன் மோசடி

யெஸ் வங்கியின் முதலீட்டு கடன் தற்போது மிகப்பெரிய மோசடியாக மாறியுள்ளது குற்றம் சாட்டப்பட்டது. இதன் அடிப்படையில் தான் ரேடியஸ் குரூப் ரியல் எஸ்டேட் நிறுவன தலைவர் சஞ்சய் சாப்ரியாவை சிபிஐ வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

ராணா கபூர் மகள்

ராணா கபூர் மகள்

இந்தக் கடன் சுழச்சியில் தான் யெஸ் வங்கியின் தலைவர் ராணா கபூர் DHFL குழுமத்திடமிருந்து சுமார் ரூ.600 கோடி கடனை கிக்பேக்-காகத் தனது மகள்கள் நிறுவனமான DOIT அர்பன் வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்குக் கடனாகப் பெற்றார்.

 ஷாஹித் பல்வா - வினோத் கோயங்கா

ஷாஹித் பல்வா - வினோத் கோயங்கா

காங்கிராஸ் ஆட்சிக் காலத்தில் நடந்த 2ஜி அலைக்கற்றை ஊழலில் அதிகம் நன்மை அடைந்தவர்களில் முக்கியமானவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்ட டிபி ரியாலிட்டியின் ப்ரோமோட்டர் ஷாஹித் பல்வா மற்றும் மற்றொரு ரியல் எஸ்டேட் டெவலப்பர் வினோத் கோயங்கா ஆகியோருக்குச் சொந்தமான இடங்களிலும் இன்று சோதனை நடத்தியுள்ளது சிபிஐ.

அமலாக்க இயக்குனரகம்

அமலாக்க இயக்குனரகம்

கடந்த ஆண்டு, அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 (ஃபெமா) கீழ் மற்றொரு விசாரணையில், அவினாஷ் போசலே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் (ED) பறிமுதல் செய்தது.

சிபிஐ சோதனை

சிபிஐ சோதனை

போசலே மற்றும் அவரது குடும்பத்தினர் துபாயில் ஃபெமா சட்டத்தை மீறி அசையா சொத்துகளை வாங்கியது சிபிஐ விசாரணையில் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது. இன்று மும்பை மற்றும் புனேவில் உள்ள எட்டு இடங்களில் சிபிஐ சனிக்கிழமை சோதனை நடத்தியது.

உத்தவ் தாக்கரே

உத்தவ் தாக்கரே

2020 ஆம் ஆண்டில், மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, மாநிலத்தில் உள்ள ரியல் எஸ்டேட் டெவலப்பர்களுக்கான "குவிக் ரெஸ்பான்ஸ்" குழுவின் உறுப்பினர்களாக ஷாஹித் பல்வா மற்றும் வினோத் கோயங்கா ஆகியோரை நியமித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Yes Bank-DHFL fraud case getting bigger: CBI raids 8 places in Mumbai, Pune

Yes Bank-DHFL fraud case getting bigger: CBI raids 8 places in Mumbai, Pune விஸ்வரூபம் எடுக்கும் யெஸ் வங்கி DHFL கடன் மோசடி.. சிபிஐ அதிரடி சோதனை..! முழு விபரம்
Story first published: Saturday, April 30, 2022, 19:47 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X