செக் பவுன்ஸ், செக் மோசடியா.. இனி கொஞ்சம் அலர்ட்டா இருங்க.. !

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பணம் இல்லாமல் செக் பவுன்ஸ் ஆவது மற்றும் செக் மோசடி வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் சமீபத்தில் உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதன்படி முதல் கட்டமாக டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சிறந்த நீதி மன்றங்களை அமைக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது.

செக் பவுன்ஸ் மற்றும் செக் மோசடி வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆக விரைந்து நடவடிக்கை எடுக்கவும், அதனை தடுக்க வங்கிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும், மோசடிகள் தொடர்ந்து வருகின்றன.

ஆகஸ்ட் 1 முதல் நீங்கள் கொடுக்கும் செக் செல்லாமல் போகலாம்... இந்த ஒன்றை செய்யவில்லை என்றால்... ஆகஸ்ட் 1 முதல் நீங்கள் கொடுக்கும் செக் செல்லாமல் போகலாம்... இந்த ஒன்றை செய்யவில்லை என்றால்...

 உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு

உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம், செக் பவுன்ஸ் வழக்குகளை விரைந்து முடிக்க ஐந்து மாநிலங்களில் செப்டம்பர் 1 முதல் ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்ட சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

5 மாநிலங்களில் அதிகம்

5 மாநிலங்களில் அதிகம்

குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் வழக்குகள் அதிக அளவில் இருப்பதால், அங்கு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், நீதிபதி பி.ஆர்.கவாய்இ நீதிபதி எஸ்.ரவீந்திர பட் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு கடந்த மே மாதமே உத்தவிட்டிருந்தது.

எப்போது?

எப்போது?

இந்த சிறப்பு நீதிமன்றத்திற்கான பணிகள் செப்டம்பர் 1ம் தேதிக்கு பிறகு தொடங்கும் என கூறப்பட்டிருந்தது. மேலும், நீதிமன்றத்தின் உத்தரவை 5 மாநிலங்களின் உயர் நீதிமன்றங்களின் பதிவாளர் ஜெனரலுக்குத் தெரிவிக்குமாறு உச்ச நீதிமன்றம் அதன் பொதுச் செயலாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

 யார் பொறுப்பு?

யார் பொறுப்பு?

இதற்கிடையில் ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்றம் ஒருவரின் காசோலையை மற்றொருவர் நிரப்பினாலும் அதற்கு டிராயர் தான் பொறுபேற்க வேண்டும் என்பதை கூறியுள்ளது. இது குறித்து நீதிபதி டிஓய் சந்திரசூட் மற்றும் ஏ எஸ் போபண்ணா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச், காசோலை பவுன்ஸ் வழக்கில் மேல் முறையீட்டுக்கு அனுமதிக்கும்போது, இதனை கூறியுள்ளது. 

எதற்காக காசோலை கொடுக்கபபட்டது?

எதற்காக காசோலை கொடுக்கபபட்டது?

வழக்கில் குற்றம் சாட்டபட்டவர் பணம் பெறுபவருக்கு கையொப்பமிடப்பட்ட காசோலையை வழங்கியதை ஒப்புக் கொண்டார். மேலும் காசோலையில் நிரப்பட்ட விவரங்கள் சரியானதா? இது யாருடைய கையெழுத்து என்பதை நிபுணரை பயன்படுத்த டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எதற்கு பொறுப்பு

எதற்கு பொறுப்பு

மேலும் காசோலையில் கையெழுத்து போடப்பட்டு, அதனை பணம் பெறுபவருக்கு கொடுக்கும் டிராயர், அதனை கடனை செலுத்துவதற்காகவோ அல்லது கொடுத்த கடமையை நிறைவேற்ற கொடுக்கப்பட்டிருந்தால் அதற்கு அவரே பொறுப்பாவார் என்று உச்ச நீதிமன்றம் தனது தரப்பில் கூறியுள்ளது.

 எதற்காக வழங்கப்பட்டது?

எதற்காக வழங்கப்பட்டது?

ஆனால் காசோலையில் உள்ள விவரங்கள் டிராயரால் அல்ல, வேறு யாரோ ஒருவரால் நிரப்பப்பட்டிருப்பது என்பதை காடிலும், அந்த காசோலை எதற்காக வழங்கப்பட்டது. கடனை செலுத்துவதற்காக வழங்கப்பட்டதா அல்லது வேறு என்ன காரணத்திற்காக வழங்கப்பட்டது என்பது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் செக்கினை மோசடி மூலம் வேண்டுமென்றே பவுன்ஸ் செய்தாலும் இனி பிரச்சனை தான். பணத்தை வாங்கிவிட்டு செக் கொடுத்து ஏமாற்றுபவர்களும் இதன் மூலம் சிக்கலில் மாட்டலாம். மொத்தத்தில் செக்கினை மோசடி மூலம் வேண்டுமென்றே பவுன்ஸ் செய்தாலும் இனி பிரச்சனை தான். பணத்தை வாங்கிவிட்டு செக் கொடுத்து ஏமாற்றுபவர்களும் இதன் மூலம் சிக்கலில் மாட்டலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: cheque காசோலை
English summary

your cheque, your responsibility, Even someone else fills details: Observes Supreme court

your check, your responsibility, Even someone else fills details: Observes SC/செக் பவுன்ஸ், செக் மோசடியா.. இனி கொஞ்சம் அலர்ட்டா இருங்க.. !
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X