அதிர்ச்சி கொடுத்த பெங்களூர் Rapido ஒட்டுனர்.. என்ன நடந்தது..?!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க ஆட்டோ அல்லது கால் டாக்ஸி, பைக்கினை பயன்படுத்தி இருக்கலாம். அப்படி செல்லும்போது அந்த வாகனத்தை இயக்கும் நபர் பற்றி தெரிந்து இருக்கிறீர்களா?

அவர்கள் அதற்கு முன்பு என்ன செய்தார்கள் என யோசித்திருக்கிறீர்களா? சரி இப்போ இதெல்லாம் எதற்கு என யோசிப்பது புரிகிறது.

பெங்களூரை சேர்ந்த இளைஞர் ஒருவர் ராபிட்டோ ரைடருடன் செல்லும்போது, தனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவத்தினை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த ட்விட்டர் பதிவு பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

ராபிட்டோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டம்.. போட்டியாளர்கள் கவலை! ராபிட்டோ பைக் டாக்ஸி நிறுவனத்தின் பிரம்மாண்ட திட்டம்.. போட்டியாளர்கள் கவலை!

ட்விட்டரில் பகிர்வு

ட்விட்டரில் பகிர்வு

பராக் ஜெயின் என்ற நபர் தான் ட்விட்டரில் தனது அனுபவத்தினை பகிர்ந்தவர். அவரை ராபிட்டோவில் அழைத்து சென்றவர் பெயர் விக்னேஷ் நாகபூசனம். இவர்கள் பைக்கில் பயணம் செய்தபோது பேசியதை தான், பராக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை @Peakbengaluru என்று கூறுகிறார். விக்னேஷ் ராபிட்டோவில் பணியில் சேருவதற்கு முன்பு வீவொர்க்கில் பணிபுரிந்தவர். பராக்கினை தற்போது ஏற்றிச் செல்ல வந்த அதே கட்டிடத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பணிபுரிந்தவராம்.

சீனாவில் தடை

சீனாவில் தடை

மார்ச் 2020ல் சீன நிறுவனங்களின் பல்வேறு ஆப்கள் இந்தியாவில் தடை செய்யப்பட்டன. அந்த சமயத்தில் வேலையை இழந்தவர் தான் விக்னேஷ். அதனை தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று தொடங்கியது. இதனால் தனது வேலையும் கிடைக்கவில்லையாம். இந்த காலகட்டத்தில் தனக்கு பிடித்தமான படங்களை இயக்குவதில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார்.

குறும்படம் தயாரிப்பு
 

குறும்படம் தயாரிப்பு

கையிலிருந்த சேமிப்புகளை வைத்து ஒரு குறும்படமும் இயக்கியுள்ளார். அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது. சுமார் 15 திரைப்பட விழாக்களில் வெற்றியும் பெற்றுள்ளார். ஓடிடியில் இருந்து வட்டி கிடைத்துள்ளது. எனினும் சில வணிக பிரச்சனையால் அதனை தவிர்த்துள்ளார்.

பகுதி நேரமாக ரைடர் பணி

பகுதி நேரமாக ரைடர் பணி


அதேசமயம் தன்னிடம் இருந்த சேமிப்புகளும் இழந்த நிலையில், பொருளாதாரத்தில் மிக நலிவடைந்துள்ளார். வாழ்வாதரத்திற்காக ராபிட்டோவில் பகுதி நேரமாக ரைடராகவும் சேர்ந்துள்ளார். இதனை தன் தாயிடம் கூறினால், அவர் கவலைபடுவார் என்பதால், அதனையும் யாரிடமும் கூறவில்லையாம்.

 பலத்த வரவேற்பு

பலத்த வரவேற்பு

பராக்கின் இந்த பதிவானது இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இது குறித்து பல நெட்டிசன்களும் தங்களது கமண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். பலரும் விக்னேஷை பாராட்டி வருகின்றனர்.
உண்மையில் கொரோனாவால் பல ஆயிரம் இளைஞர்கள் தங்களது வேலையினை இழந்து கஷ்டப்பட்டு வருகின்றனர். எனினும் வாழ்வில் எதையேனும் சாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பயணித்து வருகின்றனர். விக்னேஷ் போன்ற இளைஞர்களின் முயற்சியானது,அவர்களுக்கு நல்லதொரு வெற்றியை பெற வாழ்த்துவோமே.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: rapido ராபிட்டோ
English summary

Youth who lost his job due to Corona: How to become a Rapido rider?

Youth who lost his job due to Corona: How to become a Rapido rider?/அதிர்ச்சி கொடுத்த பெங்களூர் Rapido ஒட்டுனர்.. என்ன நடந்தது..?!
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X