ஜீ என்டர்டெய்ன்மென்ட்டுக்கு என்ன ஆச்சு.. ஏன் இந்த வீழ்ச்சி..கதறும் நிர்வாகம்!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இன்றைய இல்லத்தரசிகளுக்கு ஜீ டிவி என்றாலே தெரியாமல் இருக்காது. ஏனெனில் அந்தளவுக்கு மக்கள் மனதில் பதிந்து போன ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே இருக்கிறது என்று கூறலாம்.

 

அதிலும் இந்த சேனலில் வரும் செம்பருத்தி சீரியல் என்றால் சின்ன குழந்தை முதல் பெரியோர் வரை ஞாபகத்தில் வைத்திருக்கும் ஒரு அம்சமாகவே இருக்கிறது.

அந்தளவுக்கு பேரும் புகழும் கொண்ட ஒரு சேனலைத்தான் நமக்கெல்லாம் தெரியும். ஆனால் அதன் மறுபுறம் நிதி ரீதியாக இந்த நிறுவனம் சற்று பின்னடைவை சந்தித்து இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆனால் உண்மை தான். இதோ ஆதாரம்.

மக்களுக்கு அதிர்ச்சி செய்தி: டெலிகாம் கட்டணம் 30% உயரும் அபாயம்..!

லாபம் வீழ்ச்சி

லாபம் வீழ்ச்சி

ஜீ என்டர்டெய்ன்மென்ட் எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனம் கடந்த செவ்வாய்கிழமையன்று மும்பை பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில், தனது அக்டோபர் - டிசம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில் நிகரலாபம் 37.87% வீழ்ச்சி கண்டு, 349.43 கோடி ரூபாய் லாபத்தை கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

வருவாயும் வீழ்ச்சி

வருவாயும் வீழ்ச்சி

எசெல் குழுமத்தை சேர்ந்த இந்த பொழுதுபோக்கு அம்சத்தை கொண்ட இந்த நிறுவனம் கடந்த ஆண்டு இதே காலாண்டில் 562.38 கோடி ரூபாய் லாபம் கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சரி லாபம் தான் இவ்வளவு வீழ்ச்சி கண்டிருக்கிறது எனில், வருவாயிலும் சுமார் 6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டிருப்பதாக இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருவாய் எவ்வளவு?
 

வருவாய் எவ்வளவு?

சுபாஷ் சந்திரா தலைமையிலான இந்த ஊடக நிறுவனத்தின் ஒருங்கிணைந்த வருவாயும் 6 சதவிகிதம் வீழ்ச்சி கண்டு, 2,119.60 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே டிசம்பர் காலாண்டில் 2,252.75 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதற்கு முக்கிய காரணம் விளம்பர வருவாய் வீழ்ச்சி கண்டதே என்றும் கூறப்படுகிறது.

கடுமையான சூழல்

கடுமையான சூழல்

மிக கடுமையான பொருளாதார சூழல் காரணமாக கடந்த டிசம்பர் காலாண்டில் விளம்பர பிரிவின் வருவாய் 15.8% வீழ்ச்சி கண்டு, 1,230.80 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது குறித்து ஜீ நிறுவனம் தனது விளம்பரதாரர்களில் பெரும்பாலானவர்கள் மிக மெதுவான வளர்ச்சி காலத்தை கடந்து வருவதாகவும், இது விளம்பர வருவாயை குறைக்க வழி வகுத்ததாகவும் தெரிவித்துள்ளது.

சந்தா அதிகரிப்பு

சந்தா அதிகரிப்பு

இந்த கடுமையான நிலையிலும் கூட சந்தோஷப்படக் கூடிய விஷயம் என்னவெனில், கடந்த டிசம்பர் காலாண்டில் சந்தா வருவாய் 15.4% அதிகரித்து, 713.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே உள்நாட்டு சந்தா வருவாய் 21.7% அதிகரித்து 661.70 கோடி ரூபாயாகவும் உள்ளது தான். ஆக இது பார்வையாளர்களை அதிகம் ஈர்த்துள்ளது என்று தானே இதன் பொருள். இது இனி வரும் காலத்தில் மேம்படுத்த உதவும் என்றும் நம்பப்படுகிறது.

வரிக்கு முந்தைய லாபம்

வரிக்கு முந்தைய லாபம்

எபிடா என்னும் வட்டி, வரி தேய்மானம் கடன் தொகைக்கு முந்தைய வருமானம் 25% வீழ்ச்சி கண்டு 565.80 கோடி ரூபாயாகவும் இருந்துள்ளது. இதன் மார்ஜின் விளிம்புகள் 27.6% ஆகவும் இருந்துள்ளது. ஆக மொத்தம் கடந்த மூன்றாவது காலாண்டில் செலவினங்கள் 5% அதிகரித்து 1,482.90 ரூபாயாக அதிகரித்துள்ளதாகவும் ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நிர்வாகம் என்ன சொல்கிறது

நிர்வாகம் என்ன சொல்கிறது

டிசம்பர் காலாண்டில் வீழ்ச்சி கண்டது குறித்து, ஜீ என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான புனித் கோயங்கா கூறுகையில், மிக மோசமான கட்டம் எங்களுக்கு பின்னால் இருப்பதாக நான் நம்புகிறேன். அடுத்த காலாண்டில் இது முன்னேற்றத்தை காணும் என்றும் நாங்கள் நம்புகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.

டிராய் கட்டணம்

டிராய் கட்டணம்

மேலும் டிராய் கட்டண விகிதத்துக்கு எதிராக நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். ஆக இறுதித் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறோம். எனினும் எங்கள் சந்தையில் உள்ள வலுவான சேனல்களின் போர்ட்ஃபோலியோ எந்தவொரு ஒழுங்குமுறை மாற்றங்களையும் திறமையாக வழி நடத்த உதவும் என்றும் நான் நம்புகிறேன் என்றும் கோயங்கா தெரிவித்துள்ளார்.

புது சேனல்

புது சேனல்

அடுத்த சில மாதங்களில் நாங்கள் புதியதாக இரண்டு சேனல்களை தொடங்க நாங்கள் தயாராகி வருகிறோம். மேலும் நாங்கள் தொடர்ந்து ஜீ எண்டர்டெயின்மென்டில் முதலீடு செய்கிறோம். இது எங்களுக்கு பிற்காலத்தில் மிக உதவும் என நம்புகிறேன். மேலும் தற்போது நிலவி வரும் மந்த நிலையானது நிலையற்றது தான். ஆக மந்த நிலையை கடந்து விடுவோம் என்றும் கூறியுள்ளார்.

பங்கு விலை என்ன?

பங்கு விலை என்ன?

இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் பங்கு விலையானது, காலாண்டு முடிவுகள் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், பங்கு விலையும் 2.98% வீழ்ச்சி கண்டு 275.60 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zee entertainment profit down 38% to Rs349 crore in Q3

Zeel reported consolidated net profit declined 37.87% to Rs.349.43 crore in the December quarter. And it share price now nearly down 3% to 275.60 in today.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X