5 மாதத்தில் $570 மில்லியன்.. மும்பையை கலக்கும் 19 வயது இளைஞர்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் இன்ஸ்டென்ட் மளிகை பொருள் டெலிவரி சேவை துறையில் 5 மாதங்களுக்கு முன்பு 19 வயது மட்டுமே ஆன இரு இளைஞர்களால் துவங்கப்பட்ட Zepto நிறுவனம் 100 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்துள்ளது.

 

இது மட்டும் அல்லாமல் Zepto நிறுவனம் இந்த 5 மாதத்தில் மட்டும் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியைப் பதிவு செய்து 570 மில்லியன் டாலர் அளவிலான மதிப்பீட்டைப் பெற்றுள்ளது.

இக்குறுகிய காலத்தில் Zepto நிறுவனம் ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்துள்ள காரணத்தால் தற்போது இந்தியா முழுவதும் குறிப்பாக ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மத்தியில் பெரிய அளவிலான வரவேற்பைப் பெற்றுள்ளது.

எஸ்பிஐ வங்கியின் புதிய 3 இன் 1 அக்கவுன்ட்.. பங்குச்சந்தை முதலீட்டுக்கு பெஸ்ட் சாய்ஸ்..!

 ஆதித் பளிச்சா

ஆதித் பளிச்சா

ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வந்த ஆதித் பளிச்சா படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு இந்தியா திரும்பியவர், அவரின் பால்ய நண்பரான கைவல்யா வோஹ்ரா உடன் இணைந்து உருவாக்கிய நிறுவனம் தான் Zepto.

 10 நிமிடத்தில் டெலிவரி

10 நிமிடத்தில் டெலிவரி

இந்த நிறுவனம் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் தினசரி தேவை பொருட்களை ஆர்டர் செய்த 10 நிமிடத்தில் டெலிவரி செய்யும் தளத்தை உருவாக்கியுள்ளது. முதலில் மும்பையில் மட்டுமே இருந்த Zepto 5 மாதத்தில் பெங்களூரு, டெல்லி, மற்றும் இதர முக்கியமான 4 நகரங்களில் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

 100 மில்லியன் டாலர்
 

100 மில்லியன் டாலர்

இந்த நிறுவனத்தின் வர்த்தக மாடல் சிறப்பாக இருந்த காரணத்தால் முதலீட்டாளர்கள் மிகவும் ஆர்வமுடன் முதலீடு செய்த நிலையில் 60 மில்லியன் டாலர் முதலீட்டை ஈர்த்த 45 நாட்களில் Y Combinator தலைமையிலான முதலீட்டுச் சுற்றில் புதிதாக 100 மில்லியன் டாலர் முதலீட்டைப் பெற்றுள்ளது Zepto.

 Zepto நிறுவனம்

Zepto நிறுவனம்

தற்போது ஆதித் பளிச்சா Zepto நிறுவனத்தின் துணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். இந்த முதலீட்டுச் சுற்றில் Y Combinator உடன் கிளேட் புக் கேப்பிடல் பார்ட்னர்ஸ், நெக்சஸ் வென்சர் பார்ட்னர்ஸ், பேயர் கேபிடல் மற்றும் சிலிக்கான் வேலி முதலீட்டாளரான லேட்சி க்ரூம் ஆகியோர் முதலீடு செய்துள்ளனர்.

 1 டிரில்லியன் டாலர் ரீடைல் சந்தை

1 டிரில்லியன் டாலர் ரீடைல் சந்தை

வெறும் 5 மாதமே ஆன நிறுவனம் சுமார் 160 மில்லியன் டாலர் முதலீட்டை குறுகிய காலத்தில் திரட்டியதற்கு மிக முக்கியக் காரணம் இந்தியாவின் ஆன்லைன் மளிகை பொருட்கள் டெலிவரி வர்த்தகம் சுமார் 1 டிரில்லியன் டாலர் ரீடைல் சந்தையில் இப்போது ராகெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால் இத்துறையில் வளர்ச்சி வாய்ப்புகள் ஏராளம், இதேபோல் Zepto நிறுவனத்தில் முதலீட்டாளர்கள் ஆர்வமுடன் முதலீடு செய்ய மிக முக்கியமான காரணம் 10 நிமிட டெலிவரி கான்செப்ட் தான்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zepto: instant grocery delivery startup by 19yr old teens got valuation $570 million within 5 months

Zepto: instant grocery delivery startup by 19yr old teens got valuation $570 million within 5months
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X