மாதம் 8000 சம்பளம் வாங்கியவர், தினமும் 6 கோடி சம்பாதிக்கிறார்.. யார் இந்த நிதின்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் ப்ரோகரேஜ் நிறுவனங்களில் Zerodha மிகவும் முக்கியமான ஒன்றாகும். இந்த Zerodha நிறுவனத்தை நிதின் காமத் தனது சகோதரர் மற்றும் ஐந்து பேருடன் இணைந்து தொடங்கினார். ஒரு சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனமாகத் துவங்கி இன்று மாபெரும் நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கால் சென்டரில் 8000 ரூபாய்க்கு பணியாற்றி வந்த நிதின் காமத் இந்த ஆண்டு 2000 கோடி ரூபாய் அளவில் சம்பாதித்து உள்ளார்.

பொதுவாக ஸ்டார்ட்அப் என்றாலே ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரியே சேர்ந்தவர்கள் மிகவும் அதிகமாக இருப்பார்கள், ஆனால் நிதின் காமத் ஐஐஎம் கல்லூரியில் இருந்து வந்த ஊழியர்களை நிறுவனத்தில் சேர்க்க கூடாது என்பது உறுதியாக உள்ளாராம். ஏன் தெரியுமா..?

ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா நீங்க.. கேஷ் ஆன் டெலிவரி-க்கு பிளிப்கார்ட் எடுக்க போகும் முடிவு! ஆன்லைன் ஷாப்பிங் செய்பவரா நீங்க.. கேஷ் ஆன் டெலிவரி-க்கு பிளிப்கார்ட் எடுக்க போகும் முடிவு!

நிதின் காமத்

நிதின் காமத்

நிதின் காமத் தலைமையிலான Zerodha நிறுவனத்தின் மொத்த லாபம் 2022ஆம் நிதியாண்டில் 2,094 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதேபோல் இந்நிறுவனத்தின் வருமானம் 4964 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

கால் சென்டர்

கால் சென்டர்

ஒரு காலத்தில் கால் சென்டரில் மாதம் 8000 ரூபாய்க்கு வேலை பார்த்த நிதின் காமத் இன்று தினந்தோறும் கோடிகளில் சம்பாதிக்கிறார். இந்தியாவில் ஸ்டார்ட்அப் கலாச்சாரம் துவங்கும் முன்பே மேற்கத்திய நாடுகளுக்கு இணையாக ஸ்டார்ட்அப் நிறுவனமான உருவானது Zerodha நிறுவனம்.

தரகு நிறுவனங்கள்

தரகு நிறுவனங்கள்

பங்குச்சந்தை தரகு நிறுவனங்கள் மத்தியில் மிகவும் வித்தியாசமாக ஸ்மார்ட்போனில் வர்த்தகம் செய்யும் சேவையைக் கொண்டு வந்ததில் இருந்து சாமானிய மக்களும் எளிதாக வர்த்தகம் செய்யும் அளவுக்கு Zerodha தளத்தை மேம்படுத்தியது என இந்திய சந்தைக்குச் சாதகமாக இருந்த காரணத்தால் வேகமாக வளர்ந்து யூனிகார்ன் அந்தஸ்தை பெற்றது.

17 வயது

17 வயது

17 வயது முதல் பங்குச்சந்தை வர்த்தகத்தில் ஈடுப்பட்டு வரும் Zerodha தலைவர் நிதின் காமத், 2001 முதல் 2005 வரையிலான காலக்கட்டத்தில் கால் சென்டரில் பணியாற்றி வந்தனர். இந்த நிலையில் ஜிம் ஒன்றில் என்ஆர்ஐ-ஐ ஒருவரை சந்தித்த போது, அவர் நிதின் காமத் பங்கு முதலீட்டு போர்ட்போலியோவை பார்தார்.

ஜிம் - என்ஆர்ஐ

ஜிம் - என்ஆர்ஐ

இதில் வியந்து போன அந்த என்ஆர்ஐ, தனது கணக்கை நிர்வாகம் செய்ய நிதின் காமத்-க்கு கொடுத்தார். அங்கிருந்து தான் அவருடைய பயணம் துவங்கியது. சுமார் 12 ப்ரோகரேஜ் நிறுவனத்தில் பணியாற்றிய நித்தின் காமத், ப்ரோகரேஜ் நிறுவனங்கள் பல ஆண்டுகளாக மாறாமல் அப்படியே இருந்ததை உணர்ந்தார்.

புதிய தளம்

புதிய தளம்

இங்குத் தான் Zerodha என்ற புதிய தளத்தை உருவாக்குவதற்கு ஐடியா உதயமானது. இந்த நேரத்தில் தேசிய பங்குச்சந்தை இலவசமாகச் சாப்ட்வேர்-ஐ கொடுத்து வந்தது, இதைப் பயன்படுத்தி நிதின் காமத் தனது சகோதரர் நிகில் காமத் மேலும் ஐந்து பேருடன் இணைந்து Zerodha தொடங்கப்பட்டது.

1000 வாடிக்கையாளர்கள்

1000 வாடிக்கையாளர்கள்

முதல் வருடத்தில் 1000 வாடிக்கையாளர்களைப் பெற்ற ZERODHA மாதம் 100 வாடிக்கையாளர் சேர்ந்து வந்த நிலையில் 2011 ஆம் ஆண்டில் மாதம் 400 வாடிக்கையாளர்களைச் சேர்க்க துவங்கியது.2009ல் ZERODHA நிறுவனத்தில் முதலீட்டை திரட்ட நிதின் காமத் முயற்சி செய்த போது அவருடைய கல்வி, வர்த்தகத் துறையில் முன் அனுபவம் இல்லாததைக் கண்டு யாரும் முதலீடு அளிக்கவில்லை.

ஐஐடி, ஐஐஎம் கல்லூரி

ஐஐடி, ஐஐஎம் கல்லூரி

உலகமே ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்லூரி மாணவர்களை ஈர்த்து வரும் வேலையில் நிதின் காமத் தனது நிறுவனத்தில் ஒரு ஐஐடி, ஐஐஎம் மாணவர்களைச் சேர்க்கவில்லை. இதற்குக் காரணமாக இந்தக் கல்லூரியில் இருந்து வரும் மாணவர்கள் நிறுவனத்தின் வளர்ச்சியைக் காட்டிலும் தங்களின் சொந்த வளர்ச்சிக்கு மட்டுமே அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள் என நிதின் காமத் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zerodha Nithin Kamath: call center worker earns 8000 per month now earns 6 crore per day

Zerodha Nithin Kamath: call center worker earns 8000 per month now earns 6 crore per day
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X