குட்டி துபாய் ஆக மாறும் ஜிம்பாப்வே.. பணக்காரர்களுக்கு மட்டும் தனி இடம்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜிம்பாப்வே நாட்டுத் தலைவர்கள் அந்நாட்டில் புதிய தலைநகர்-ஐ உருவாக்க முடிவு செய்துள்ளனர். இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இந்தப் புதிய தலைநகரில் பணக்காரர்கள் மட்டுமே இருப்பார்கள்.

அவர்களுக்கான இடமாக இது இருக்க வேண்டும் என்றும், துபாய் போல ஒரு நகரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக இந்த முடிவு எடுத்துள்ளது.

ஜிம்பாப்வே நாட்டின் நாணயம் மதிப்பு மிகவும் மோசமான நிலைக்குச் சென்றுள்ளது மட்டும் அல்லாமல் வருடாந்திர பணவீக்கம் 244 சதவீதமாக உள்ளது. 2017க்குப் பின் அதிபர் Emmerson Mnangagwa ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு புதிய முதலீடுகளை ஈர்த்துப் பொருளாதாரம் மேம்பட்டு உள்ளது.

ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்கம் எவ்வளவு தெரியுமா..? ஜிம்பாப்வே நாட்டின் பணவீக்கம் எவ்வளவு தெரியுமா..?

ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே

ஜிம்பாப்வே நாட்டின் தலைநகராக இருக்கும் ஹராரே நகரத்தை மாற்றிவிட்டு, இப்புதிய ஆடம்பர மற்றும் நவீன நகரமான மவுண்ட் ஹம்டன் ஆக அறிவிக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த மவுண்ட் ஹம்டன் பகுதி ஹராரே-வில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மவுண்ட் ஹம்டன்

மவுண்ட் ஹம்டன்

இந்தப் பிரம்மாண்ட மற்றும் மிகப்பெரிய திட்டத்தை ஜிம்பாப்வே நாட்டின் பில்லியனரான ஷாஜி உல் மல் கையில் எடுத்துள்ளார். ஏற்கனவே ஜிம்பாப்வே நாட்டின் நாடாளுமன்ற கட்டிடம் இப்பகுதிக்கு வந்துள்ள நிலையில் அமைச்சர்கள் அனைவரும் இப்புதிய நகரத்திற்குக் குடியேறத் தயாராகியுள்ளனர்.

ஷாஜி உல் மல்க்

ஷாஜி உல் மல்க்

இப்புதிய நகரை அமைக்கும் திட்டத்திற்காக ஜிம்பாப்வே நாட்டின் பில்லியனரான ஷாஜி உல் மல்க் 500 மில்லியன் டாலர் முதலீடு செய்துள்ள நிலையில் இத்திட்டத்திற்கு 50 பில்லியன் டாலர் வரையில் செலவாகும் எந கணிக்கப்பட்டு உள்ளது.

துபாய்

துபாய்

இத்திட்டத்தின் முடிவில் ஜிம்பாப்வே நாட்டின் புதிய தலைநகரான மவுண்ட் ஹாம்டன் துபாய் போல இருக்கும் என ஷாஜி உல் மல்க் தெரிவித்துள்ளனர்.

முக்கியக் கட்டிடங்கள்

முக்கியக் கட்டிடங்கள்

ஜிம்பாப்வே நாட்டின் புதிய தலைநகரான மவுண்ட் ஹாம்டன் பகுதியில் அந்நாட்டின் நாடாளுமன்றம், மத்திய வங்கி, சுப்ரீம் கோர்டு, தாதுகள் ஏலம் விடும் அலுவலகம், பங்குச்சந்தை, அதிபர் மாளிகை, ஆடம்பர வில்லா என மேம்பட்ட நகரங்களில் இருக்கும் அனைத்தும் இப்பகுதியில் அமையும்.

முக்கிய நபர்கள்

முக்கிய நபர்கள்

மேலும் இப்பகுதியில் அரசியல் தலைவர்கள், வங்கி அதிகாரிகள், நீதிபதிகள், வழக்கறிஞர், தொழிலதிபர்கள் எனப் பொருளாதாரம், வர்த்தகம், அரசு தொடர்பான அனைத்து முக்கிய நபர்களும் இப்பகுதியில் குடியேற உள்ளனர்.

ஹராரே நிலை என்ன

ஹராரே நிலை என்ன

ஜிம்பாப்வே நாட்டின் பழைய தலைநகரான ஹராரே தற்போது வறுமை மற்றும் அசுத்தத்தின் நகரமாக மாறியுள்ளது. ஹராரே-வில் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, ஜிம்பாப்வே அரசாங்கம் பணக்காரர்களை மட்டும் தனியார் பிரிந்து வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்கிறது.

கழிவுநீர், தண்ணீர்

கழிவுநீர், தண்ணீர்

கடந்த 20 வருடத்தில் ஹராரே நன்கு பராமரிக்கப்பட்ட நகரம் என்ற பெயரில் இருந்து தற்போது வாழ்வதற்குச் சாத்தியமில்லாத நகரமாக மாறியுள்ளது. ஹராரே சாலையில் கழிவுநீர் திறந்த வெளியில் ஓடுகிறது, தண்ணீர் மற்றும் மின்சாரம் சீரற்று உள்ளது.

பணக்காரர்கள்

பணக்காரர்கள்

40 கட்டிடங்கள் வணிகக் கட்டிடங்களாக மட்டுமே உள்ளது, சாலை முழுவதும் பள்ளங்கள், நகரத்தின் மையப்பகுதியில் சாலையோர வியாபாரிகளால் நிரம்பி வழிகிறது. இது அனைத்தும் பணக்காரர்கள் வாழ்வதற்கு ஏற்ற நகரமாக இல்லை என அறியப்படுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zimbabwe getting new capital for rich people; Mount Hampden will turn like Dubai Soon

Zimbabwe getting new capital for rich people; Mount Hampden will turn like Dubai Soon
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X