ஆனந்த் மஹிந்திராவுக்கு டேக் செய்த ZOHO ஸ்ரீதர் வேம்பு.. பலரையும் ஈர்த்த ட்வீட்.. என்னன்னு பாருங்க..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எப்போதும் ட்விட்டர் பக்கத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் ஜோஹோ நிறுவனத்தின் ஸ்ரீதர் வேம்பு, நச்சென சில வரிகளில் தனது பாராட்டுகளையும், அட்வைஸினை ஆனந்த் மஹிந்திராவுக்கு டேக் செய்துள்ளார்.

அதில் ஆனந்த் மஹிந்திராவுக்கு அப்படி என்ன கூறியுள்ளார், வாருங்கள் பார்க்கலாம்.

இன்றைய இளைய தலைமுறையினர் பலரும் படித்து முடித்து விட்டு, நல்ல வாய்ப்புகள் கிடைத்ததா? அமெரிக்காவில் செட்டில் ஆகினோமா? என்ற நிலையில்,ஸ்ரீதர் வேம்பு வித்தியாசமானவர்.

கூகுள் முதல் ட்விட்டர் வரையில் இந்தியர்களின் ஆதிக்கம் தான்.. புகழ்ந்து தள்ளிய எலான் மஸ்க்..! கூகுள் முதல் ட்விட்டர் வரையில் இந்தியர்களின் ஆதிக்கம் தான்.. புகழ்ந்து தள்ளிய எலான் மஸ்க்..!

இந்தியாவில் வணிகம்

இந்தியாவில் வணிகம்

கலிபோர்னியாவில் குவால்காம் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் வேம்பு, இந்தியாவில் தனது தொழிலை தொடங்க விரும்பினார். இதற்காக சென்னையில் ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனத்தினையும் தொடங்கினார். இன்றைய காலகட்டத்தில் பல்வேறு நாடுகளின் நிறுவனங்களும் இவருடைய வாடிக்கையாளர்கள்.

சொந்த ஊரின் மேல் பற்று

சொந்த ஊரின் மேல் பற்று

இவர் தனது சொந்த ஊரின் மேல் மிகுந்த பற்று உள்ளவர். சொல்லப்போனால் மக்களோடு மக்களாக மிக எளிமையான மனிதராய் வலம் வருபவர் வேம்பு, அதனை அவ்வப்போது ட்விட்டர் பக்கத்திலும பகிர்ந்து வருவார். அப்படி இவர் பகிர்ந்த ஏராளமான டீவிட்கள் வைரலானது குறிப்பிடத்தக்கது. தற்போது அதேபோல ஒரு ட்வீடினை தான் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆனந்த் மஹிந்திராவுக்கு டேக் செய்துள்ளார்.

மஹிந்திராவுக்கு பரிந்துரை

மஹிந்திராவுக்கு பரிந்துரை

அதில் தான் நேற்று மஹிந்திராவின் ட்ரியோ எலக்ட்ரிக் ஆட்டோவை வாங்கியிருப்பதாகவும், அதன் வேகம் 55 கிமீ என்றும், முழுமையாக சார்ஜிங் செய்தால் 125 கிலோ மீட்டர் வரையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனை நடைமுறை பயண வாகனம் என்றும் கூறியுள்ளார்.

யாருக்கு ஏற்றது?

யாருக்கு ஏற்றது?

அது மட்டும் அல்ல, அதனை ஓட்டுவதை மிக விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அந்த ஆட்டோ குறித்து சில பரிந்துரையையும் ஆனந்த் மஹிந்திராவுக்கு டேக் செய்துள்ளார். அதில் இந்த மின்சார வாகனத்தினை பொறுத்தவரையில் குடும்பங்களுக்கு ஏற்றது. இதன் விலை 3.5 லட்சம் ரூபாய். இதன் விற்பனை அதிகரிக்கும்போது இதன் விலை குறையலாம்.

எங்கு வாங்குவது?

எங்கு வாங்குவது?

இதன் வடிவமைப்பு மிக நன்றாக உள்ளது. இதனால் இது பலருக்கும் பிடித்தமான வாகனமாக மாறக்கூடும். நான் இந்த ஆட்டோவினை எனது கிராம சாலைகளில் ஓட்டிச் செல்லும்போது பலரும் இதனை எங்கு வாங்குவது என கேட்கிறார்கள்.

பல்வேறு வண்ணங்கள்

பல்வேறு வண்ணங்கள்

மேலும் பல்வேறு டிசைன்களிலும், வண்ணங்களிலும் வர வேண்டும் என்பது எனது விருப்பம். குடும்பத்தினருக்கும், குழந்தைகளுக்கும் ஏற்றவாறு சில ஆப்சன்களை கொடுக்கலாம். இந்த விலை குறைந்த வாகனத்தினை விற்பனை செய்வதற்கு வித்தியாசமான மார்கெட்டிங் அவசியம் என கருதுகிறேன்.

நல்ல எதிர்காலம் உண்டு

நல்ல எதிர்காலம் உண்டு

இந்த வாகனத்திற்கு நல்ல எதிர்காலம் உண்டு. இதனை ஓட்டுவதை நான் மிக விரும்புகிறேன் என்று ட்விட்டரில் பாராட்டுகளையும், பரிந்துரைகளையும் செய்துள்ளார்.
இதற்கிடையில் ஸ்ரீதர் வேம்புவின் ட்விட்டருடன், பலரும் மஹிந்திராவுக்கு டேக் செய்து தங்களது பரிந்துரையை ட்விட்டரில் பகிர்ந்து வருகின்றனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Zoho founder srithar vembu suggestions to Anand Mahindra

Zoho founder srithar vembu suggestions to Anand Mahindra / ஆனந்த் மஹிந்திராவுக்கு டேக் செய்த ZOHO ஸ்ரீதர் வேம்பு.. பலரையும் ஈர்த்த ட்வீட்.. என்னன்னு பாருங்க.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X